Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 20 செப்டம்பர், 2021

10 நொடி விளம்பரத்திற்கு ரூ.17 லட்சம்.. #IPL கல்லாகட்டும் ஸ்டார் இந்தியா..!

2021 ஐபிஎல் போட்டிகள்

ஐபிஎல் போட்டிகள் மரண மாஸாக துவங்கியுள்ள நிலையில், முதல் போட்டியிலேயே சிஎஸ்கே வெற்றி பெற்று சிறப்பாகத் துவங்கி வைத்துள்ளது. கொரோனா தொற்றுக் காரணமாகப் பாதியிலேயே நிறுத்தப்பட்ட போட்டிகள் 2வது கட்டமாகத் துவங்கியுள்ள நிலையில் ஐபிஎல் விளம்பர வர்த்தகம் மூலம் ஸ்டார் இந்தியா நிறுவனம் பெரிய அளவில் கல்லாக்கட்டியுள்ளது.

 2வது கட்டத்தில் கிட்டதட்ட பாதிப் போட்டிகள் மட்டுமே நடக்க உள்ள நிலையில் விளம்பரத்திற்கான இடங்கள் மிகவும் குறைவு என்பதால் போட்டிகள் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
 
2021 ஐபிஎல் போட்டிகள்

2021 ஐபிஎல் போட்டிகள் கொரோனா முதல் அலை முடிந்த பின்பு மற்றும் 2வது அலை ஆரம்பக் கட்டத்தில் துவங்கிய காரணத்தால் வர்த்தக விரிவாக்கம் மற்றும் முதலீடு செய்வோர் எண்ணிக்கை சற்று குறைவாகவே இருந்து. இதனால் 2021 ஐபிஎல் போட்டிகளின் விளம்பர வர்த்தகம் சற்று மந்தமாகவே இருந்தது.

2வது கட்ட போட்டிகள்

ஆனால் தற்போது வர்த்தகச் சந்தை வேகமாக வளர்ந்து வரும் நிலையில் 2021 ஐபிஎல் போட்டியில் முதல் கட்ட போட்டியில் பெரும்பாலான விளம்பர வர்த்தகம் முடிந்துவிட்ட நிலையில் 2வது கட்ட போட்டிகளில் மிகவும் குறைவான விளம்பர வர்த்தகம் மட்டுமே மீதம் இருந்ததுள்ளது. இதனால் போட்டி அதிகரித்துள்ளது.

10 நொடி விளம்பரத்தின் விலை..!!

2வது கட்ட ஐபிஎல் போட்டிகளில் மொத்த விளம்பர வர்த்தகத்தில் கடைசியாக மீதம் இருந்த 5 சதவீதத்தையும் விற்பனை செய்துள்ளது ஸ்டார் இந்தியா. விளபம்ரத்திற்குத் திடீரென போட்டி அதிகரித்த காரணத்தால் 10 நொடி விளம்பரத்திற்கு 17.2 லட்சம் ரூபாயாக உயர்ந்தது.

இதன் மூலம் 2021 ஐபிஎல் போட்டியில் ஸ்டார் இந்தியாவில் மொத்த விளம்பர வர்த்தகம் 2,950 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

2021 போட்டிகள்

2020 போட்டிகள் அனைத்தும் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்ற காரணத்தால் விளம்பர வர்த்தகம் மந்தமாகவே இருந்தது. ஆனால் 2021 போட்டிகள் இந்தியாவில் நடக்கும் காரணத்தால் விளம்பர வர்த்தகம் சிறப்பாகவே இருந்தது, ஆனால் விளையாட்டு அரங்கில் மக்கள் யாரும் அனுமதிக்கப்படாமல் போட்டிகள் நடந்த காரணத்தால் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

பண்டிகை கால வர்த்தகம்

இதுமட்டும் 2021 ஐபிஎல் போட்டிகள் பாதியில் முடிந்த காரணத்தால் பின்னைடவாக அமைந்தது. ஆனால் 2வது போட்டி பண்டிகை காலத்தில் துவங்கியுள்ள நிலையில் விளம்பர செய்ய முன்னணி நிறுவனங்கள் கடுமையாகப் போட்டது. இதன் வாயிலாகவே 10 நொடி விளம்பர ஸ்டாட்-க்கு 17.2 லட்சம் ரூபாய் வரையில் அதிகரித்து வர்த்தகம் ஈடுகட்டப்பட்டு உள்ளது.

ஸ்பான்சர்கள்

2021 ஐபிஎல் போட்டிக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர் 15 ஸ்பான்சர்களுடனும், OTT தளமான டிஸ்னி - ஹாட்ஸ்டார் தளத்துடன் 12 ஸ்பான்சர்களுடன் ஒப்பந்தம் செய்து சுமார் 2,950 கோடி ரூபாய் அளவிலான விளம்பர வர்த்தகத்தைப் பெற்றுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக