Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 20 செப்டம்பர், 2021

பிரபல வெளிநாட்டு மின் வாகன உற்பத்தி நிறுவனத்தை கையகப்படுத்திய TVS... தமிழக நிறுவனத்தின் தரமான சம்பவம்!

பிரபல வெளிநாட்டு மின் வாகன உற்பத்தி நிறுவனத்தை கையகப்படுத்திய TVS... தமிழக நிறுவனத்தின் தரமான சம்பவம்!

தமிழகத்தை மையமாகக் கொண்டு இயங்கும் TVS நிறுவனம் சுவிட்சர்லாந்து நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் பிரபல மின் வாகன உற்பத்தி நிறுவனத்தின் பெரும் பங்கினைக் கையகப்படுத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த முழுமையான விபரத்தைக் கீழே காணலாம், வாங்க.

தமிழகத்தை தலைமையமாகக் கொண்டு இயங்கும் வாகன உற்பத்தி நிறுவனம் டிவிஎஸ் (TVS Motor). இந்நிறுவனம் வெளிநாட்டு வாகன உற்பத்தி நிறுவனம் ஒன்றை கையகப்படுத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சுவிட்சர்லாந்து நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் ஈகோ (EGO) நிறுவனத்தையே நிறுவனம் கையகப்படுத்தி இருக்கிறது.

ஈகோ ஓர் எலெக்ட்ரிக் மிதிவண்டிகளை தயாரிக்கும் நிறுவனம் ஆகும். இந்நிறுவனத்தின் 80 சதவீத பங்குகளையே ரூ. 132 கோடி (CHF 16.6 million) செலவில் டிவிஎஸ் தற்போது வாங்கியிருக்கின்றது. மீதமுள்ள 20 சதவீத பங்குகள் ஸ்விஸ் நாட்டைச் சேர்ந்த மற்றொருவருக்கு சொந்தமானதாக இருக்கின்றது.

இந்த மிகப்பெரிய டீலை டிவிஎஸ் நிறுவனம், சிங்கப்பூரை மையமாகக் கொண்டு இயங்கும் தனக்கு சொந்தமான மற்றுமொரு கிளை நிறுவனத்தின் வாயிலாக வாங்கியிருக்கின்றது. இது, டிவிஎஸ் நிறுவனத்தின் இரண்டாம் மிகப் பெரிய கையகப்படுத்தலாக பார்க்கப்படுகின்றது.

இதற்கு முன்னதாக இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மிக முக்கியமான மற்றும் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான நார்டன் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தை டிவிஎஸ் வாங்கியிருந்தது. இதைத் தொடர்ந்தே தற்போது மற்றுமொரு புதிய நிறுவனத்தை நிறுவனம் தனக்கு சொந்தமாக்கியுள்ளது.

இந்த மாபெரும் கொள்முதலைத் தொடர்ந்து நிறுவனம் ஐரோப்பிய, அமெரிக்கா மற்றும் இந்தியாவின் மின்வாகன சந்தையில் அதிரடியாக கால் தடம் பதிக்க திட்டமிட்டு வருகின்றது. முதலில் ஐரோப்பாவிலும் இதையடுத்தே இந்தியா மற்றும் அமெரிக்காவில் ஆகிய நாடுகளில் மின் வாகனங்களைக் களமிறக்க நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது.

புதிய நிறுவனத்தின் வாயிலாக ஆண்டுக்கு 100 மில்லியன் முதல் 150 மில்லியன் வரையிலான அமெரிக்க டாலர்கள் வருவாயை ஈட்ட நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது. புதிதாக கொள்முதல் செய்யப்பட்டிருக்கும் மின் வாகன உற்பத்தி நிறுவனத்தில் தற்போது ஒட்டுமொத்தமாகவே 40 பணியாளர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர்.

ஆண்டிற்கு 3,500 யூனிட்டுகள் விற்பனை என்ற விகிதத்தில் நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. கடந்த ஆண்டு 6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை நிறுவனம் வருவாய் ஈட்டியிருக்கிறது. இதனை நடப்பாண்டிலேயே பல மடங்கு உயர்த்த டிவிஎஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இத்துடன், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 100 மில்லின் அமெரிக்க டாலர்கள் என்ற வருவாய்க்கு உயர்த்த நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது.

தற்போது வெறும் 20 விற்பனையகங்களை மட்டுமே நிறுவனம் செயல்படுத்தி வருகின்றது. 2025ம் ஆண்டிற்குள் இதனை 32 ஆக மாற்றவும் நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது. பத்து மில்லியன் அமெரிக்க டாலர்களாக வருவாயை உயர்த்தும் பணியில் நிறுவனம் களமிறங்கியிருக்கின்றது.

ஆகையால், டிவிஎஸ் நிறுவனம் மிக விரைவில் ஈகோ நிறுவனத்தின் கீழ் மிகப் பெரிய புரட்சியை சுவிட்சர்லாந்தில் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதைத்தொடர்ந்து, நமது நாட்டிலும் ஈகோ-வின் பிரபலமான மின் வாகனங்களை (இ-மிதிவண்டிகளை) நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிவிஎஸ் நிறுவனம் இந்திய இருசக்கர வாகனச் சந்தையை அதகளப்படுத்தும் வகையில் ஓர் புதுமுக பைக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. ரைடர் (TVS Raider 125) எனும் பைக்கையே நிறுவனம் விற்பனைக்குக் களமிறக்கியிருக்கின்றது. இந்தியாவின் 125 சிசி இருசக்கர வாகன பிரிவை மிரட்டும் வகையில் இப்பைக்கின் வருகை அமைந்துள்ளது.

பைக்கிற்கு ஆரம்ப விலையாக ரூ. 77,500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு மிகவும் அட்டகாசமான தோற்றத்தில் காட்சியளிக்கும் இப்பைக்கிற்கு இவ்வளவு குறைவான விலை நிர்ணயிக்கப்பட்டிருப்பது ஒட்டு மொத்த வாகன உலகிற்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

விலையுயர்ந்த ஸ்போர்ட்ஸ் பைக்குகளுக்கு இணையான டிசைன் தாத்பரியத்தில் ரைடர் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இத்துடன், பைக்கின் உயர்நிலை வேரியண்ட்டில் ஸ்மார்ட்எக்ஸ்கனெக்ட் (SmartXConnect) எனப்படும் இணைப்பு தொழில்நுட்ப வசதி வழங்கப்பட்டிருக்கின்றது. இத்துடன், டிஎஃப்டி டிஸ்ப்ளேவும் வழங்கப்பட்டிருக்கின்றது.

இவற்றின் வாயிலாக, டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், வாய்ஸ் அஸிஸ்டன்ஸ், கால் மேனேஜ்மெண்ட், மெசேஜ் நோடிஃபிகேஷன் அலர்ட், ஹை-ஸ்பீடு அலர்ட், லோ ஃப்யூயல் அஸிஸ்டன்ஸ், ஆவணங்களை சேமிக்கும் டிஜிட்டல் ஸ்டோரேஜ் வசதி உள்ளிட்டவையும் ரைடரில் வழங்கப்பட்டிருக்கின்றன.

,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக