Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 20 செப்டம்பர், 2021

இறங்கி வரும் ஏர்டெல்: ரூ.299 விலைக்கு 30 ஜிபி டேட்டா நன்மைகள்- இவர்களுக்கு மட்டுமே!

30 ஜிபி டேட்டா உள்ளிட்ட நன்மைகள்

பாரதி ஏர்டெல் கார்ப்பரேட் போஸ்ட்பெய்ட் திட்டங்கள் பல்வேறு விலைப்பிரிவில் கிடைக்கிறது. இந்த கார்ப்பரேட் திட்டங்களானது பெயர் குறிப்பிடுவது போல் நிறுவன பயனர்கள் மற்றும் நிறுவனைத்தை வைத்திருப்பவர்களுக்கானது ஆகும்.

30 ஜிபி டேட்டா உள்ளிட்ட நன்மைகள்

வெளிப்படையாக, ஏர்டெல்லின் இந்தத் திட்டங்கள் வணிகக் கருவிகள் ஏர்டெல் கால் மேலாளர், ஜி சூட் மற்றும் ட்ராக்மேட் உள்ளிட்ட நன்மைகளுடன் தொகுக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக இருப்பது பாரதி ஏர்டெல். இந்த நிறுவனம் தங்களது பயனர்களுக்கு கார்ப்பரேட் போஸ்ட்பெய்ட் திட்டங்களை கொண்டு வந்திருக்கிறது. வணிக பயனர்களுக்கான மிகவும் மலிவான கார்ப்பரேட் திட்டத்தின் விலை ரூ.299 ஆக இருக்கிறது. இது 30 ஜிபி டேட்டா உள்ளிட்ட நன்மைகளோடு வருகிறது. இது ஒற்றை இணைப்பு ஆதரவு மற்றும் ஏர்டெல் தேங்க்ஸ் பயன்பாட்டு அணுகலோடு வருகிறது. மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை மற்றும் 100 எஸ்எம்எஸ் ஆதரவோடு வருகிறது. இந்த திட்டத்தில் கிடைக்கும் பிற சலுகைகளை பார்க்கலாம்.

ஏர்டெல் ரூ.299 கார்ப்பரேட் போஸ்ட்பெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.299 கார்ப்பரேட் போஸ்ட்பெய்ட் திட்டம் ஆனது சில்லறை விலைப்பிரிவிலும் கிடைக்கிறது. பொதுவான போஸ்ட்பெய்ட் திட்டங்களை போல் இல்லாமல் இந்த கார்ப்பரேட் திட்டமானது நிறுவன பயனர்கள் அல்லது நிறுவனத்தை வைத்திருப்பவர்களுக்காக வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் ஏர்டெல் கால் மேனேஜ்மென்ட், ஜி சூட் மற்றும் ட்ராக்மேட் உள்ளிட்ட பல நன்மைகளுடன் வருகிறது.

போஸ்ட்பெய்ட் இணைப்பு

போஸ்ட்பெய்ட் திட்டங்கள் ஆனது பயனர்களை தங்கள் குடும்ப உறுப்பினர்களோடு இணைக்க அனுமதிக்கிறது. ஆனால் கார்ப்பரேட் திட்டங்களில் குடும்ப உறுப்பினர்களை திட்டத்தில் இணைக்க இயலாது. இந்த போஸ்ட்பெய்ட் இணைப்பு எண் நிறுவனத்திற்கு சொந்தமானது என்பதால் இதை நிறுவனத்தின் எழுத்துப்பூர்வ அங்கீகாரம் இன்றி பிறவற்றில் இணைக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் கார்ப்பரேட் போஸ்ட்பெய்ட் இணைப்பு

வணிகத்தில் ஒரு ஊழியர் இருந்தால் கூட இந்த கார்ப்பரேட் எண்ணை பெறலாம் என்ற இருந்தது. ஆனால் தற்போதுள்ள ஏர்டெல் கார்ப்பரேட் போஸ்ட்பெய்ட் இணைப்பை பெற பயணர்கள் குறைந்தது ஐந்து போஸ்ட்பெய்ட் எண்கள் தேவை. நிறுவனம் இதன் கீழ் சிம் கார்டு விண்ணப்பிக்கும் போது பயனர்களின் பதிவு மற்றும் ஜிஎஸ்டி எண் போன்ற ஆவணங்களை சரிபார்க்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கார்ப்பரேட் சிம் கார்டுக்கு ஆதார் அட்டை சரிபார்ப்பு தேவைப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் கோடிட்டுக் காட்டப்பட்ட தேவையாகும்.

ஏர்டெல் கார்ப்பரேட் போஸ்ட்பெயட் திட்டம்: விலை

ஏர்டெல் நிறுவனம் வழங்கும் ரூ.299 திட்டத்தில் 30 ஜிபி டேட்டாவும், ரூ.349 திட்டத்தில் 40 ஜிபி டேட்டாவும், ரூ.399 திட்டத்தில் 60 ஜிபி டேட்டாவும், ரூ.499 திட்டத்தில் 100 ஜிபி டேட்டாவும் மற்றும் ரூ.1599 திட்டத்தில் 500 ஜிபி டேட்டாவும் வழங்கப்படுகிறது. குறிப்பிட்டப்பட்ட அனைத்து திட்டங்களும் ஒரே மாதிரியான சலுகைகளை வழங்கினாலும் உயர்நிலைத் திட்டம் மட்டும் 1 வருடத்திற்கான அமேசான் ப்ரைம், 1 வருடத்திற்கான டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் விஐபி சந்தா, ஏர்டெல் செக்யூர், விங்க் மியூசிக் ஆப் ப்ரீமியம், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஆப் ப்ரீமியம் மற்றும் ஷா அகாடமி ஆகிய நன்மைகளை வழங்குகிறது.

வரம்பற்ற அழைப்புகளுக்கான அணுகல்

இந்த திட்டங்கள் அனைத்தும் வரம்பற்ற அழைப்புகளுக்கான அணுகலை வழங்குகிறது. தகுதியுள்ள பயனர்கள் ஏர்டெல் கார்ப்பரேட் திட்டத்தை பெறலாம். தங்களது தேவையின் அடிப்படையில் இந்த கார்ப்பரேட் போஸ்ட்பெய்ட் திட்டத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.

ஏர்டெல் ரூ.129 ப்ரீபெய்ட் திட்டம்

இந்தியாவின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக ஏர்டெல் இருக்கிறது. ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்கள் ஆனது ரூ.129 முதல் ரூ.499 வரை பல்வேறு திட்டங்களை வழங்குகிறது. இது அழைப்பு மற்றும் டேட்டா நன்மைகளை வழங்குகிறது.ஏர்டெல் ரூ.129 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தில் பயனர்களுக்கு வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்குகிறது. தினசரி 100 எஸ்எம்எஸ், ஜீ5, ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் மற்றும் விங்க் மியூசி சந்தாவை வழங்குகிறது. திட்டம் ஆனது 24 நாட்களுக்கு வழங்குகிறது.

ஏர்டெல் ரூ.148 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.148 ப்ரீபெய்ட் திட்டமானது தினசரி 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டமானது 28 நாட்கள் செல்லுபடியாகும். ஏர்டெல் எக்ஸ்ட்ரீம், ஹலோ டியூன்ஸ் மற்றும் விங்க் மியூசிக் ஆகிய அணுகலை வழங்குகிறது. இந்த திட்டம் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளை வழங்குகிறது.

ஏர்டெல் ரூ.149 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.149 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 28 நாட்கள் செல்லுபடியாகும். இது முழு காலத்திற்கும் 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டம் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டமானது 300 எஸ்எம்எஸ்-களை வழங்குகிறது.

ஏர்டெல் ரூ.197 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.197 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது சந்தாதாரர்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளை வழங்குகிறது. இது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த திட்டம் 2 ஜிபி டேட்டா மற்றும் 300 எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது.

ஏர்டெல் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.199 ப்ய்ட் திட்டம் ஆனது வாடிக்கையாளர்குக்கு 1 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டமானது 24 நாட்கள் செல்லுபடியாகும். இந்த திட்டம் 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தில் ஜீ5, ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஆகிய அணுகல்கள் வழங்கப்படுகிறது.

ஏர்டெல் ரூ.219 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.219 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது ஒரு மாதம் செல்லுபடியாகும். இந்த திட்டமானது 28 நாட்கள் செல்லுபடியாகும், தினசரி 1 ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு ஆகிய நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டத்தில் தினசரி 100 எஸ்எம்எஸ்கள் வழங்கப்படுகிறது. ஏர்டெல் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். இது தினசரி 100 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது. மேலும் வரம்பற்ற குரல் அழைப்புகள், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம், விங்க் மியூசிக் உள்ளிட்ட ஆன்டி வைரஸ் மொபைல் பாதுகாப்பு அம்சத்தோடு வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக