மைக்ரோசாப்ட் நிறுவனம் மிகவும் எதிர்பார்த்த சர்பேஸ் டுயோ 2 மடிக்கக்கூடிய சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த புதிய சாதனம் இரண்டு 5.8-இன்ச் பிக்சல் சென்ஸ் பியூஷன் டிஸ்ப்ளே வசதியைக் கொண்டுள்ளது. அதேபோல் இந்த சாதனம் திறந்த நிலையில் 8.3-இன்ச் பிக்சல் சென்ச் டிஸ்பிளே வசதி, 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் வசதியைக் கொண்டுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
குறிப்பாக இந்த சர்பேஸ் டுயோ 2 சாதனம் ஆனது பெரிய டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் இந்த புதிய சாதனத்தில் மைக்ரோசாப்ட் 365 மற்றும் மைக்ரோசாப்ட் டீம்ஸ் சேவைகளுக்கான வசதி வழங்கப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 800 நிட்ஸ் ப்ரைட்னஸ் வசதியைக் கொண்டுள்ளது இந்த மைக்ரோசாப்ட் சர்பேஸ் டுயோ 2 சாதனம்.
இப்போது அறிமுகம் செய்யப்பட்ட சர்பேஸ் டுயோ 2 சாதனம் ஆனது கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் இது டிஸ்பிளேவுக்கு சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொடுகிறது. அதேபோல் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம்.
சர்பேஸ் டுயோ 2 சாதனம் ஆனது ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் வசதியுடன் அட்ரினோ 660 ஜிபியு ஆதரவும் உள்ளது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுவெளிவந்துள்ளது இந்த புதிய சாதனம். குறிப்பாக இந்த சாதனத்திற்கு வழங்கப்பட்டுள்ள பிராசஸர் ஆனது மிகவும் சக்தி வாய்ந்தது என்றுதான் கூறவேண்டும்.
மைக்ரோசாப்ட் சர்பேஸ் டுயோ 2 சாதனம் ஆனது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி/512ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த புதிய சாதனம். மேலும் ஒரு இ-சிம், ஒரு நானோ சிம் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான மைக்ரோசாப்ட் சர்பேஸ் டுயோ 2 சாதனம்.
இந்த
சாதனத்தின் பின்புறம் 12எம்பி பிரைமரி கேமரா + 16எம்பி அல்ட்ரா வைடு கேமரா
+ 12எம்பி டெலிபோட்டோ கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள்
பொருத்தப்பட்டுள்ளன. குறிப்பாக 4K 60fps அல்லது 1080p 240fps வரை வீடியோவை
பதிவு செய்ய அனுமதி
கொடுக்கிறது இந்த கேமராக்கள். மேலும்
செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 12எம்பி செல்பீ கேமரா
ஆதரவைக் கொண்டுள்ளது இந்த மைக்ரோசாப்ட் சர்பேஸ் டுயோ 2 சாதனம்.
மைக்ரோசாப்ட் சர்பேஸ் டுயோ 2 சாதனத்தில் 4449 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு 23 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, பக்கவாட்டில் கைரேகை சென்சார் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய சாதனம். அதேபோல் 5ஜி எஸ்.ஏ./என்.எஸ்.ஏ, 4ஜி எல்.டி.இ, வைபை, ப்ளூடூத் 5.1 உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த மைக்ரோசாப்ட் சர்பேஸ் டுயோ 2 சாதனம்.
128 ஜிபி மெமரி கொண்ட மைக்ரோசாப்ட் சர்பேஸ் டுயோ 2 மாடலின் விலை 1499.99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 1,10,675)
256 ஜிபி மெமரி கொண்ட மைக்ரோசாப்ட் சர்பேஸ் டுயோ 2 மாடலின் விலை 1599.99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 1,18,050)
512 ஜிபி மெமரி கொண்ட மைக்ரோசாப்ட் சர்பேஸ் டுயோ 2 மாடலின் விலை 1799.99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 1,32,810)
குறிப்பாக இந்த சாதனம் கிளேசியர் மற்றும் அப்சிடியன் நிறங்களில் வெளிவந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக