வாட்ஸ்அப் நிறுவனம் இந்திய பயனர்களுக்காக அதன் வாட்ஸ்அப் பேமெண்ட் அம்சத்தைச் சமீபத்தில் அறிமுகம் செய்தது. இந்த வாட்ஸ்அப் பேமெண்ட் அம்சம் இப்போது இந்தியாவில் செயல்பாட்டில் உள்ள கூகிள் பே, போன்பே போன்ற யுபிஐ அடிப்படையிலான பரிவர்த்தனைகளை வாட்ஸ்அப் மூலமாகவே மேற்கொள்ள அனுமதிக்கிறது. வரவிருக்கும் புது வாட்ஸ்அப் பேமெண்ட் அப்டேட்டில் கேஷ்பேக் அம்சத்திற்கான சேவையை நிறுவனம் வேலை செய்து வருவதாக இப்போது ஒரு புதிய வாட்ஸ்அப் கசிவு வெளிவந்துள்ளது.
வாட்ஸ்அப் பேமெண்ட் இந்தியாவில் இப்படி ஒரு அம்சமா?
வாட்ஸ்அப்பில் யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) மூலம் பயனர்கள் ஒருவருக்கொருவர் பணம் அனுப்பும் வசதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், வாட்ஸ்அப் பேமெண்ட் அம்சம் அதன் ஒட்டுமொத்த பயனர்களின் ஒரு பகுதியினரால் மட்டுமே பயன்படுத்தப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றது. இப்போது, இந்த பேமெண்ட் அம்சத்தில் ஒரு புதிய வாட்ஸ்அப் சேவையை நிறுவனம் இப்போது சோதனை செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் சோதனை செய்யப்படும் கேஷ்பேக் அம்சம்
வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் வாட்ஸ்அப் நிறுவனம் இந்த சேவையைச் சோதனை செய்வதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த அம்சம் அடுத்து வரவிற்கும் எதிர்கால அப்டேட்டில் வரக்கூடிய கேஷ்பேக் அம்சத்தில் வேலை செய்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது. வாட்ஸ்அப் பயனர்கள் இனி பணப்பரிமாற்றத்திற்கு என்று தனியாக ஒரு செயலியைத் தரவிறக்கம் செய்து அதைப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. மிகச் சிறந்த வழிகளில் பணம் செலுத்துதல் அல்லது பரிவர்த்தனைகளுக்கான சேவையை இனி பயனர்கள் கேஷ்பேக் சலுகையுடன் மேற்கொள்ள முடியும் என்பது தெரியவந்துள்ளது.
WABetaInfo வெளியிட்ட தகவல் இந்த புதிய அம்சம் பற்றி என்ன சொல்கிறது?
வாட்ஸ்அப் தொடர்பான அம்சங்கள் பற்றி லீக் செய்யும் பிரபல அம்ச லீக்கரான WABetaInfo இன் அறிவிப்புப் படி, வாட்ஸ்அப் சோதனை செய்யும் கேஸ்பேக் சேவையானது இந்தியப் பயனர்களுக்கான வாட்ஸ்அப் பேமெண்ட் அம்சத்தை முயற்சி செய்யப் பயனர்களை ஊக்குவிக்கும் ஒரு பகுதியாக, இந்த கேஷ்பேக் கட்டண அம்சத்தை சேர்க்கும் பணியில் நிறுவனம் ஈடுபட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இந்த அம்சம் இன்னும் வளர்ச்சியில் உள்ளது. பீட்டா சேனலில் இருக்கும் பயனர்களால் கூட இப்போது இந்த சேவையை அணுக முடியாது.
ஒரு பரிவர்த்தனைக்கு எவ்வளவு கேஷ்பேக் நன்மை கிடைக்கும்?
இந்த அம்சத்தின் விவரங்கள் தற்போது குறைவாக இருந்தாலும், லீக்கர் ஒரு புதிய பேனரின் ஸ்கிரீன் ஷாட்டை பகிர்ந்துள்ளார். அது வாட்ஸ்அப்பில் சாட்களின் பட்டியலைக் காட்டுகிறது. இதில் ரிவார்டு ஐகான் udan "Get cashback on your next payment" மற்றும் "Tap to get started" என்ற விருப்பங்கள் இருப்பதை ஸ்கிரீன் ஷாட் காண்பிக்கிறது. லீக்கரின் கூற்றுப்படி, கேஷ்பேக் அம்சம் இந்தியாவில் UPI கொடுப்பனவுகளுக்கு மட்டுமே இருக்கும், மேலும் பயனர்கள் பணம் செலுத்துவதற்கு ஒவ்வொரு முறையும் ரூ. 10 கேஷ்பேக் சலுகையாக வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
எப்போது இந்த அம்சம் பயன்படுத்த கிடைக்கும்?
கேஷ்பேக் அம்சம் தற்போதுள்ள வாட்ஸ்அப் பேமெண்ட் பயனர்களுக்கு வழங்கப்படுமா அல்லது சேவையைப் பயன்படுத்தி முதல் பரிவர்த்தனை செய்யாதவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுமா என்பது குறித்து எந்த வார்த்தையும் நிறுவனத்திடம் இருந்து இன்னும் வெளியாகவில்லை. இந்த அம்சம் வாட்ஸ்அப் மூலம் இன்னும் வளர்ச்சியில் உள்ளது என்பது மட்டும் இப்போது உறுதியாகியுள்ளது.
Gpay, phonepe, paytm மற்றும் வாட்ஸ்அப் பேமெண்ட்.. இனி எது யூஸ் பண்ணப்போறீங்க?
எதிர்கால அப்டேட்டில் இந்த அம்சம் வெளியிடப்படும் போது இந்த அம்சம் தொடர்பான கூடுதல் தகவல்களை நிறுவனம் வெளியிடும் என்று எதிர்பார்க்கிறோம். கூகிள் நிறுவனத்தின் Gpay மற்றும் phonepe யுபிஐ ஆப்ஸ்களை இந்தியர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். இதனைத் தொடர்ந்து போட்டியில் இருக்கும் நிறுவனமாக paytm திகழ்கிறது. கேஷ் பேக் ரிவார்டு அம்சத்தை அறிமுகம் செய்து அதிக பயனர்கள் தன் வசம் ஈர்த்ததை போல், வாட்ஸ்அப் இந்த அம்சத்தை வைத்து பயனர்களை ஈர்க்குமா என்பதைப் பார்க்க ஆர்வமாக இருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக