அமைவிடம் :
ஆந்திர மாநிலத்தில் 750 ஆண்டுகளுக்கு முன் மூன்றாம் குலோத்துங்க சோழன் ஆட்சி காலத்தில் இக்கோயில் அமையப்பெற்றது. பின்னர் அடுத்தடுத்து நடந்த படையெடுப்பு காரணமாக கோயிலின் பெருமை குறைந்தது. அருள்மிகு லட்சுமி நாராயணர் திருக்கோயில் சித்தூர் மாவட்டம் வேப்பஞ்சேரி என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.
மாவட்டம் :
அருள்மிகு லட்சுமி நாராயணர் திருக்கோயில், வேப்பஞ்சேரி, சித்தூர் மாவட்டம், ஆந்திர மாநிலம்.
எப்படி செல்வது?
ஆந்திர மாநிலம் சித்தூர் அருகில் உள்ளது வேப்பஞ்சேரி கிராமம். சித்தூரிலிருந்தும், திருப்பதியிலிருந்தும், வேலூரிலிருந்தும் சிறிது தூரத்தில் வேப்பஞ்சேரி கிராமம் அமைந்துள்ளது.
கோயில் சிறப்பு :
லட்சுமிதேவியை தன் மடி மீது அமர வைத்து, சாந்தமாக காட்சி தரும் லட்சுமி நாராயணனை தரிசிப்பது சிறப்பு.
ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் ஸ்ரீனிவாச பெருமாள் கண்ணை கவரும் விதத்தில் அமர்ந்துள்ளார். சகல பாவங்களையும் போக்கும் சுதர்சன சக்கரமும் அமைந்துள்ளது. ஆழ்வார்களுக்கும் இக்கோயிலில் இடம் உண்டு.
கோயிலின் கொடிமரத்தை தாண்டி உள்ளே சென்றால், அமைதி தவழும் முகத்துடன் கருடனையும், துவாரகபாலகரையும் வழிபடலாம். கருவறை விமானத்தில் கலியுக கண்ணன் அமர்ந்துள்ளார்.
கோயிலுக்கு தசாவதார தீர்த்தக்குளமும் உண்டு. குளத்து நீர் இனிப்பு சுவையுடன் உள்ளது. பாவங்களை போக்கி பரிகாரம் செய்ய பயன் தருகிறது. இக்குளத்தை சுற்றி அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய, தசாவதார சிலைகள் தனித்தனியே அமைத்துள்ளனர்.
குளத்தின் அருகிலேயே 21 அடி உயரத்தில் ஒரே கல்லில் அழகிய வேலைப்பாடுகளுடன், பத்து அவதாரங்களுடன் கிருஷ்ணரின் தசாவதார சிலை இங்கு உள்ளது.
கோயில் திருவிழா :
கிருஷ்ண ஜெயந்தி, ராமநவமி, வைகுண்ட ஏகாதசி போன்றவை கொண்டாடப்படுகிறது.
வேண்டுதல் :
திருமணத்தடை, குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், கடன் பிரச்சனை, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பெற, உடல்நலம் குன்றியோர், தொழில் பாதிப்படைந்தோர் இக்கோயிலுக்கு வந்து முறையாக பூஜை செய்தால் நல்ல பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இக்கோயிலின் தென்புறம், ஸ்ரீஅஷ்டலட்சுமி கோயில் அமைந்துள்ளது. இங்கு வழிபட்டால் மது அருந்துபவர்கள் மனம் திருந்துகின்றனர். செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் ராகுகால பூஜையில் பங்கேற்று பல நன்மைகள் அடைகின்றனர். லட்ச தீப வழிபாட்டில் கோடி நன்மைகள் கிடைக்கும்.
நேர்த்திக்கடன் :
பிரார்த்தனை நிறைவேறியதும் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர்
அருள்தரும் ஆலயங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக