Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 24 செப்டம்பர், 2021

வரம் தந்த தேவதை... முதலாளி கேட்ட வரம்... சிரிக்கலாம் வாங்க... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

எப்பவுமே முதலாளியைத்தான் முதல்ல பேசவிடணும்!!
ஒரு முதலாளி தனது கம்பெனியின் இரண்டு தொழிலாளர்களோடு பிக்னிக் போனார்.

போன இடத்தில் எதிர்பாராதபடி அவர்களது எதிரில் ஒரு தேவதை தோன்றி, 'ஆளுக்கொரு வரம் தருகிறேன். கேளுங்கள்!" என்றது. 

தொழிலாளர்களுக்கு பரம ஆனந்தம். உச்சகட்ட பரவசத்தில், 'நான் உடனே சுவிட்சர்லாந்து-ல இருக்கணும்!" என்று முந்திக்கொண்டு கேட்டார் ஒருவர்.

தேவதை அருள்பாலிக்கவும், அடுத்த விநாடி.. அவர் சுவிட்சர்லாந்தில்!

துடித்துக்கொண்டிருந்த இன்னொருவர், 'லாஸ்வேகாஸ் சூதாட்ட அரங்கில் நான் உல்லாசமாக இருக்க வேண்டும்" என்று கேட்க, அவருக்கும் வரம் தரப்பட்டது.

பொறுமையாக நின்றிருந்த முதலாளியைத் தேவதை பார்க்க, 'அந்த ரெண்டு பேரும் உடனே இங்கே இருக்கணும்" என்றார்.

அதனாலதான் எப்பவுமே முதலாளியை முதல்ல பேசவிடணும்னு சொல்றது.
------------------------------------------------------------------
ஒரு குட்டிக்கதை!
------------------------------------------------------------------
அவனுக்கு இது ஏழாவது இன்டர்வியூ! ஏற்கெனவே காது கேட்காத, வாய்பேச முடியாத நிலையில் இருக்கும் அவனுக்கு வேலையில்லாதது கூடுதல் வேதனை.

இத்தனைக்கும் ஒவ்வொருமுறையும் எழுத்துத் தேர்வில் தன் முழுத்திறமையையும் காட்டுவான். கூடவே, இன்டர்வியூவில் தன்னால் பேச முடியாது என்பதையும் அதிகாரிகள் கேட்கும் கேள்விகளை காதால் கேட்க முடியாது என்பதையும் எழுதிக் காட்டுகிறான். அவர்கள் திருப்தி அடையாமல், நிராகரித்து அனுப்பிவிடுகிறார்கள்.

அவனின் வெறுப்பெல்லாம், 'விண்ணப்பிக்கும்போதே நம்முடைய குறைகளைச் சொல்லித்தானே விண்ணப்பிக்கிறோம். எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்று நம்பிக்கையோடு இருக்கும்போது இப்படிச் சொல்கிறார்களே" என்பதுதான். இந்த முறை இன்டர்வியூவில் தேர்வு செய்யப்படாவிட்டால் இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது என்ற முடிவோடு இருந்தான்.

அவனுடைய முறை வந்தது. இன்டர்வியூ செய்பவர், ஃபைலை வாங்கிப் பார்த்தார். சர்டிஃபிகேட்டுகளுக்கு நடுவே இருந்த, 'என்னால் பேச முடியாது, மற்றவர்கள் சொல்வதைக் காதால் கேட்க முடியாது" என்று எழுதியிருந்த காகிதமும் இருந்தது. அதைப் படித்துவிட்டு, நாலாக எட்டாக கிழித்துப் போட்டார் அந்த மனிதர். கோபத்தோடு அவரைப் பார்த்தான்.

அந்த அதிகாரி சலனமே இல்லாமல் ஒரு வெள்ளைத் தாளை எடுத்து ஏதோ எழுதி, இவனிடம் நீட்டினார்.

'என்னைப் பணியில் சேர்த்துக்கொண்டால் வீண் அரட்டை அடிக்க மாட்டேன். ஏனென்றால், எனக்குப் பேச முடியாது. எனக்குக் கேட்கும் திறன் இல்லாததால், மற்ற சத்தங்களால் கவனம் சிதறும் வாய்ப்பு இல்லை. எவ்வளவு கடினமான வேலையாக இருந்தாலும் மனதை ஒருமுகப்படுத்தி என்னால் செய்ய முடியும். உங்கள் கேள்விகளுக்கு நான் தயார்!" என்று அவர் எழுதிக் கொடுத்தார்.

அதைப் பார்த்தவுடன் ஒரு உண்மையை எப்படி சொல்ல வேண்டும் என்ற வழி புரிந்தது அவனுக்கு! கண்களில் நீர் கசிய அவரை நன்றியோடு பார்த்தான்.

'யூ ஆர் அப்பாயின்டெட்!" என்று அவர் உதடு முணுமுணுப்பது புரிந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக