ரியல்மி
யுடி 3.0 பயன்பாடு ரியல்மி ஜிடி நியோ 2 வெளியீட்டு நிகழ்வில்
அறிவிக்கப்படுகிறது. ஓஎஸ்-க்கு தகுதியான சாதனங்களுக்கு அக்டோபரில்
எப்போதாவது கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த புதிய பதிப்பானது
ஆண்ட்ராய்டு 12-ஐ அடிப்படையாகக் கொண்டது என கூறப்படுகிறது. ரியல்மி யுஐ
ஆண்ட்ராய்டு 10ஐ அடிப்படையாகக் கொண்டது. அதேபோல் யுஐ 2.0 ஆண்ட்ராய்டு 11 ஐ
அடிப்படையாகக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் வரவிருக்கும் யுஐ
3.0 ஆண்ட்ராய்டு 12 ஐ அடிப்படையாகக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
ஓஎஸ் வெளியீட்டு தேதி அக்டோபரில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரியல்மி யுஐ 3.0
ரியல்மி ஜிடி நியோ 2 நிகழ்வில் ரியல்மி யுஐ 3.0 குறித்து ரியல்மி துணை தலைவர் Xu Qi Chase அறிவித்ததாக வெய்போவின் மைடிரைவர்ஸ் அறிக்கை கூறுகிறது. இயக்க முறைமையின் புதிய பதிப்பு அக்டோபரில் தொடங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த அறிமுகத்தின் போது தங்கள் சாதனங்கள் புதுப்பிப்பை பெறும் என கூறப்படுகிறது.
கலர் ஓஎஸ் 12
ரியல்மி யுஐ 3.0 சாதனத்தின் அம்சங்களை கலர் ஓஎஸ் 12 உடன் பகிர்ந்து கொள்ளும் என வைலாப்-ன் மற்றொரு பதிவு தெரிவிக்கிறது. புதிய ரியல்மி யுஐ 3.0 ஓஎஸ் புதிய தனியுரிமை மற்றும் பாதுகாப்பு தொடர்பான அம்சங்களுடன் புதிய வடிவமைப்பைக் கொண்டு வரும் என கூறப்படுகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக