உலகத்தில் ஏராளமான அதிசய நிகழ்வுகள் நடந்தேறிக்கொண்டே தான் இருக்கிறது, அப்படி நடக்கும் ஏராளமான அதிசய நிகழ்வுகளில், சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்று ஒரு எதிர்பாராத நிகழ்வு உலக மக்கள் மற்றும் மருத்துவர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. காரணம், மருத்துவ ரீதியாக சுமார் 45 நிமிடங்களுக்கு மேலாக இறந்த நிலையில் இருந்த பெண் ஒருவர் மீண்டும் உயிர்பெற்ற சம்பவம் இப்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 45 நிமிடங்களாக இறந்த நிலையில் இருந்த பெண் எப்படி உயிர்பெற்றார்?
இறந்து 45 நிமிடங்கள் கழித்து மீண்டும் உயிருடன் வந்த அதிசய பெண்மணி
அமெரிக்காவில் உள்ள மேரிலாந் பகுதியைச் சேர்ந்த கேத்தி என்பவர் மரணத்தின் வாசலைக் கடந்து 45 நிமிடங்கள் சென்ற பிறகு மீண்டும் உயிர் பெற்று தனது வாழ்க்கைக்கான இரண்டாவது வாய்ப்பு பெற்று இப்போது மீண்டும் உயிருடன் நடமாடிக்கொண்டிருக்கிறார். கேத்தி பாட்டன் சமீபத்தில் அவரது மகள் 39 மணி நேர பிரசவத்திற்கு நடுவில் இருந்த போது, அதிக மன அழுத்தத்தால் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவ ரீதியாக 45 நிமிடத்திற்கும் மேலாக இறந்துவிட்டார் என்று அறிவிக்கப்பட்டார்.
மருத்துவ ரீதியாக 'இறந்துவிட்டார்' என்று அறிவிக்கப்பட்ட பெண் உயிர் பெற்றது எப்படி?
ஆனால், மருத்துவர்களே எதிர்பார்க்காத வேளையில் கேத்தி மீண்டும் உயிர் பெற்று தனது சுயநினைவிற்குத் திரும்பியது அனைவரையும் அதிர்ச்சி அளித்துள்ளது. உலக வரலாற்றில் முதல் முறையாக மருத்துவ ரீதியாக 45 நிமிடங்களுக்கும் மேலாக 'இறந்துவிட்டார்' என்று அறிவிக்கப்பட்ட பெண் மீண்டும் உயிர் பெற்று எழுந்து வந்தது இதுவே முதல்முறையாகும். இந்த சம்பவம் கேத்தியின் மகள் 39 மணி நேரப் பிரசவ போராட்டத்திற்கு நடுவில் நடந்தது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
மகளுக்குப் பிரசவம் நடந்த போது மாரடைப்பு ஏற்பட்ட தாய்
கேத்தியின் மகளுக்குப் பிரசவம் நடந்த அதே மருத்துவமனையில் தான் கேத்தி 45 நிமிடங்கள் உயிர் இல்லாமல் இருந்திருக்கிறார். கேத்தி பேட்டன் கோல்ஃப் மைதானத்தில் இருந்தபோது, அவருடைய மகள் ஃபைஃபர் பிரசவத்திற்குப் போவதாக அழைப்பு வந்தது. கிரேட்டர் பால்டிமோர் மருத்துவ மையத்திற்கு வந்த கேத்தி வந்தடைந்த சிறிது நேரத்தில், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
அவசர உதவி அறையில் சிபிஆர் செய்தும் நாடி துடிப்பை முழுமையாக இழந்த கேத்தி
மருத்துவமனையிலேயே மாரடைப்பு ஏற்பட்டதனால் கேத்தியை மருத்துவர்கள் உடனே அவசர அறைக்கு அழைத்துச் சென்றனர். மாரடைப்பு ஏற்பட்டு நாடி துடிப்பை இழந்த கேத்திக்கு அங்குள்ள மருத்துவர்கள் உடனடியாக சிபிஆர் (CPR) முறையை முயற்சித்தனர். இருப்பினும், மிக விரைவாக மருத்துவர்கள் கேத்தியின் நாடி துடிப்பை இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
45 நிமிடங்களுக்கும் மேலாக மூளைக்கு இரத்த அழுத்தம் செல்லவில்லையா?
நாடி துடிப்பு இழந்த சிறிது நேரத்தில் 45 நிமிடங்களுக்கும் மேலாக கேத்தியின் மூளைக்கு இரத்த அழுத்தம் செல்லவில்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதாவது அவரின் உடலில் உயிர் வாழ்வதற்குத் தேவையான ஆக்ஸிஜன் இல்லை என்று கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையைத் தான் மருத்துவர்கள் மருத்துவ ரீதியாக ஒரு மனிதர் முழுமையாக இறந்துவிட்டார் என்று குறிப்பிடுகின்றனர். கேத்தி இங்கே அவசர அறையில் 45 நிமிடங்கள் உயிர் இல்லாமல் இருந்தபோது, அவரது மகளுக்கு அவசர சி பிரிவு அறுவைசிகிச்சை நடத்தப்பட்டது.
என் அம்மா இங்கே இருக்க வேண்டுமென்பது விதிதான்
நடத்தப்பட்ட அவசர அறுவைசிகிச்சைக்குப் பிறகு, சிறிது நேரம் கழித்து ஸ்டேசி குழந்தை அலோராவைப் பெற்றெடுத்தார். கேத்தியின் பேத்தி பிறந்த நேரமோ என்னவோ, 45 நிமிடங்களாக இறந்த நிலையில் இருந்த கேத்தி திடீரென உயிர்பெற்று எழுந்துவிட்டார். "என் அம்மா இங்கே இருக்க வேண்டுமென்பது விதிதான்" என்று மகளைப் பெற்றெடுத்த ஸ்டேசி தெரிவித்துள்ளார். 'என் அம்மா அலோராவால் இங்கே இருக்கிறார், அவள் சரியான நேரத்தில் சரியான இடத்தில்' பிறந்துள்ளாள் என்று ஸ்டேசி கூறியுள்ளார்.
45 நிமிடங்கள் கழித்து உயிர் பெற்று எழுந்த கேத்தி கூறியது என்ன தெரியுமா?
என் மகள் இன்னும் ஏராளமான அதிசயத்தை எங்கள் வாழ்வில் நிகழ்த்தப் போகிறாள் என்று ஸ்டேசி கூறியுள்ளார். 45 நிமிடங்கள் கழித்து உயிர் பெற்று எழுந்த கேத்தி, "இது என் வாழ்க்கையில் இரண்டாவது வாய்ப்பு. நான் எல்லா வகையிலும் இருக்கக்கூடிய சிறந்த நபராக இருக்கப் போகிறேன், எனக்கு இருக்கும் ஒவ்வொரு நிமிடத்திற்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கப்போகிறேன்" என்று கேத்தி பாட்டன் செய்தியாளர்களுக்குக் கூறியுள்ளார். பாட்டி , தாய் மற்றும் குழந்தை மூவரும் மருத்துவமனையில் நலமாக உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக