
இந்தியாவில் மின்சார உற்பத்தியை அதிகரிப்பதில் அதிகளவிலான கவனத்தைச் செலுத்தி வரும் மத்திய அரசு, சுற்றுச்சூழ்நிலையைப் பாதிக்காத வகையில் சோலார் மின்சாரத்தைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது. இதற்காக இந்தியாவில் சோலார் போட்டோ வோல்டாயிக் மாடியூல் தயாரிக்க மத்திய அரசு சுமார் 4,500 கோடி ரூபாய் அளவிலான PLI திட்டம் அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தைக் கைப்பற்ற நாட்டின் 4 பெரும் வர்த்தகத் தலைவர்கள் போட்டிப்போட உள்ளதாகத் தெரிகிறது.
சோலார் மின்சாரம்
இந்தியாவில் சோலார் மின்சாரம் உற்பத்தி செய்ய அடிப்படைத் தேவையாக இகுக்கும் சோலார் பேனலை அதிகளவில் சீனாவில் இருந்து தான் தயாரிக்கப்படுகிறது. இதை மாற்றும் வண்ணம் மத்திய அரசு இந்தியாவில் சோலார் பேனல் தயாரிப்பதற்காக ஏப்ரல் மாதத்தில் 4,500 கோடி ரூபாய் மதிப்பிலான PLI திட்டம் அறிவிக்கப்பட்டது.
10 ஜிகாவாட் மின்சாரம்
இந்த PLI திட்டம் மூலம் மத்திய அரசு 10 ஜிகாவாட் மின்சாரத்தைத் தயாரிக்கத் திட்ட வடிவம் உருவாக்கப்பட்ட நிலையில், சுமார் 54.8 ஜிகாவாட் மின்சாரம் தயாரிப்பதற்கான விண்ணப்பங்கள் குவிந்துள்ளது. PLI திட்டம் அரசுக்கும் சரி நிறுவனங்களுக்கும் சரி அதிகப்படியான லாபத்தை அளிக்கும் காரணத்தால் உள்நாட்டு நிறுவனங்கள் முதல் வெளிநாட்டு நிறுவனங்கள் வரையில் முதலீடு விருப்பத்தோடு உற்பத்தியில் இறங்குகிறது.
ரிலையன்ஸ், டாடா, அதானி, ஜின்டால்
இந்நிலையில் மத்திய அரசின் சோலார் PV மாடியூல் தயாரிக்கும் 4,500 கோடி ரூபாய் மதிப்பிலான PLI திட்டத்திற்கு ரிலையன்ஸ், டாடா, அதானி, ஜின்டால் என நாட்டின் 4 பெரும் தலைவர்களின் நிறுவனங்கள் விண்ணப்பம் சமர்ப்பித்துள்ளது மட்டும் அல்லாமல் அவர்களுடன் கோல் இந்தியா உட்படச் சுமார் 18 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளது. இதில் முக்கியமான அமெரிக்கப் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட ReNew Power நிறுவனமும் விண்ணப்பித்துள்ளது.
சோலார் PV மாடியூல்
சோலார் PV மாடியூல் தயாரிக்கும் பணியில் 4 பிரிவுகள் உள்ளது பாலிசிலிக்கான், வேபர், செல் மற்றும் மாடியூல் என 4 பிரிவுகள் உள்ளது. இதில் 4 பிரிவு பணிகளைச் செய்ய உள்ளதாக ரிலையன்ஸ் நியூ எனர்ஜி, அதானி இன்பரா, ஜின்டால் இந்தியா சோலார, ஷிரடி சாய் எலக்ட்ரிக்கல்ஸ், பர்ஸ்ட் சோலார் இந்தியா ஆகிய நிறுவனங்கள் விண்ணப்பம் செய்துள்ளது. கோல் இந்தியா, எல் அண்ட் டி, ReNew Power, கியூபிக்பிவி ஆகிய 4 நிறுவனங்கள் 2 முதல் 4 பிரிவு பணிகளைச் செய்ய விண்ணப்பம் செய்ய உள்ளது. டாடா பவர் உட்படப் பிற அனைத்து நிறுவனங்களும் 3 முதல் 4 பிரிவு பணிகளை மட்டுமே செய்ய விண்ணப்பம் செய்துள்ளது.
PLI திட்டம்
இந்தியாவில் சோலார் PV மாடியூல் தயாரிப்பில் பயன்படுத்தும் 95 சதவீத பொருட்கள் சீனா அல்லது சீனா கட்டுப்பாட்டில் இயங்கும் பிற நாட்டு நிறுவனங்களில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் மத்திய அரசு அறிவித்துள்ள இந்த 4500 கோடி ரூபாய் PLI திட்டம் பெரிய அளவில் பயன்படும். மேலும் அரசுக்கு வந்துள்ள 18 நிறுவனங்களில் தகுதியான நிறுவனங்களைத் தேர்வு செய்யும் பணிகளை இனி மத்திய அரசு செய்ய வேண்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக