Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 22 செப்டம்பர், 2021

ரிஸ்க் எடுக்கும் முகேஷ் அம்பானி! ரூ.4000க்கு ஸ்மார்ட்போன் விற்றால் எவ்வளவு நஷ்டம் தெரியுமா?

 ரிலையன்ஸ் ஜியோ

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் ஜியோ கூகுள் உடன் இணைந்து தயாரித்த ஜியோபோன் நெக்ஸ்ட் 4ஜி ஸ்மார்ட்போனை மிகவும் குறைந்த விலைக்கு இந்தியாவில் விற்பனை செய்யத் திட்டமிட்டது. ஆனால் இது சாத்தியம் இல்லை என்பதால் பெரும் பகுதி தொகையை ரிலையன்ஸ் ஜியோ நஷ்டமாக ஏற்றுக்கொண்டு வாடிக்கையாளர்களையும் வர்த்தகத்தையும் பெற முடிவு செய்தது.

ரிலையன்ஸ் ஜியோ

இது முதல்கட்ட திட்டத்தில் ரிலையன்ஸ் ஜியோ 3750 கோடி ரூபாய் அல்லது மொத்த செலவில் 25 சதவீதம் மானிய விலையில் கொடுத்தால் தான் 4000 ரூபாய்க்கு 4ஜி ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனை விற்க முடியும் எனக் கணிக்கப்பட்டது. ஆனால் சந்தை மொத்த கணக்கீட்டையும் தலைகீழாகப் புரட்டிப்போட்டு உள்ளது.

உற்பத்தி பொருட்களின் விலை

ஆம் உலகம் முழுவதும் கடந்த இரண்டு வருடத்தில் உற்பத்தி பொருட்களின் விலை பெரிய அளவில் அதிகரித்தது. இது மட்டும் அல்லாமல் ஸ்மார்ட்போன் சிப் தட்டுப்பாடு காரணமாக உற்பத்தி தடைபெற்றது மட்டும் அல்லாமல் விலையும் அதிகரித்துள்ளது. குறிப்பாகக் கொரோனா 2வது அலையில் அனைத்து உற்பத்தி பொருட்களின் விலையும் அதிகரித்தது.

முகேஷ் அம்பானி

இதன் மூலம் முகேஷ் அம்பானி திட்டமிட்டபடி 4000 ரூபாய் அல்லது 50 டாலர் விலையில் விற்க வேண்டும் என்றால் மிகப்பெரிய தொகையை நஷ்டமாக ஏற்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டு உள்ளார்.

நஷ்டம்

தற்போது சந்தையில் வெளியான கணிப்பைப் பார்த்தால் 2ஜி வாடிக்கையாளர்களை 4ஜி சேவைக்குள் கொண்டு வர முகேஷ் அம்பானி இவ்வளவு பெரிய தொகையை நஷ்டமாக ஏற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படி எவ்வளவு நஷ்டம் ஏற்படப் போகுது.

4000 ரூபாய் விலை

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ முதல் கட்டமாக 75 மில்லயன் 4ஜி ஸ்மார்ட்போனை 4000 ரூபாய் விலைக்கு விற்பனை செய்ய வேண்டும் என்றால் ஒரு போனுக்குக் குறைந்தது 2,500 ரூபாய் மானிய விலையில் தான் விற்பனை செய்தாக வேண்டும்.

ரூ.18,750 கோடி நஷ்டம்

இதன் மூலம் 18,750 கோடி ரூபாய் அளவிலான நஷ்டத்தை ஏதிர்கொள்ள வேண்டும். கடந்த இரண்டு வருடத்தில் ஸ்மார்ட்போன் உற்பத்தி பொருட்களின் விலை சுமார் 20 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பாக மெமரி மற்றும் 4ஜி LTE சிப் விலை பெரிய அளவில் அதிகரித்துள்ளது.

முகேஷ் அம்பானிக்கு நஷ்டம்

இந்தச் சூழ்நிலையில் உற்பத்தி விலை முதல் அனைத்தும் அதிகரித்துள்ளதால் முகேஷ் அம்பானி தனது வாக்கை காப்பாற்ற சுமார் 18,750 கோடி ரூபாய் அளவிலான நஷ்டத்தை ஏற்க வேண்டிய நிலையில் தள்ளப்பட்டு உள்ளார்.

ஜூன் கணிப்பு

ஜூன் மாதம் வெளியான கணிப்பில் ஒரு போனுக்கு 2000 ரூபாய் வீதம் 15,000 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் எனக் கணிக்கப்பட்ட நிலையில் தற்போது 500 ரூபாய் அதிகரித்துச் சுமார் 2,750 கோடி ரூபாய் கூடுதலான சுமை ரிலையன்ஸ் ஜியோ-விற்கு உருவாகியுள்ளது.

விலை உயர்த்துமா..?

இதைச் சமாளிக்க ரிலையன்ஸ் ஜியோ-விற்கு இருக்கும் ஓரே வழி ஜியோபோன் நெக்ஸ்ட்-ன் விலையை 5000 அல்லது 5,500 ரூபாய் வரையில் அதிகரிப்பது தான். ஆனால் இந்த விலையில் விற்பனை செய்யப்பட்டால் பியூச்சர் போன் பயன்படுத்துவோர் கட்டாயம் இதை வாங்க விரும்பமாட்டார்கள்.

இந்தச் சூழ்நிலையில் கூடுதலான பாதிப்பும் ரிலையன்ஸ்-க்கு உருவாகும். தீபாவளி பண்டிகைக்கு அறிமுகம் செய்ய ஜியோ திட்டமிட்டுள்ள நிலையில் இதன் விலை என்னவாக இருக்கும்..?

டிஜிட்டல் மற்றும் ஷாப்பிங் வர்த்தகம்

ரிலையன்ஸ் ஜியோ தற்போது குறைவான விலையில் விற்பனை செய்தாலும் அதிகளவிலான டெலிகாம் வாடிக்கையாளர்களைப் பெறுவதன் மூலமும், இதன் மூலம் கிடைக்கும் வருவாய் மற்றும் இதர டிஜிட்டல் மற்றும் ஷாப்பிங் வர்த்தகம் மூலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 18,750 கோடி ரூபாய் நஷ்டத்தைக் கட்டாயம் ஈடு செய்யும் எனவும் கணிக்கப்பட்டு உள்ளது.

டெலிகாம் கட்டண உயர்வு

ஏற்கனவே நாட்டின் அனைத்து முன்னணி டெலிகாம் நிறுவனங்களும் டெலிகாம் கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டு உள்ள நிலையில் இந்த 18,750 கோடி ரூபாய் சுமையைக் குறைக்க ரிலையன்ஸ் ஜியோவும் டெலிகாம் சேவை கட்டணத்தை உயர்த்த அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.

1 வருடம் தான் பிரச்சனை

எப்படிப் பார்த்தாலும் இந்த 18,750 கோடி ரூபாய் சுமை என்பது 6 மாதம் முதல் 1 வருடம் மட்டுமே இக்காலகட்டத்திற்குள் இந்தத் தொகையைத் திரும்பி தனது வர்த்தகத்தின் மூலம் ஜியோ எடுத்துவிடும். அதன் பின்பு வரும் அனைத்தும் லாபம் மட்டுமே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக