Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 22 செப்டம்பர், 2021

வழக்கறிஞர் பாக்கெட்டில் வெடித்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்- ஒன்பிளஸ் பளீர் பதில்- என்ன நடந்தது?

ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி ஸ்மார்ட்போன்

ஒன்பிளஸ் சாதனம் வெடித்ததாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு நிறுவனம் தரப்பில் இருந்து பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதில் எதிர்காலத்தில் எந்தவொரு இழிவான உள்ளக்கத்தையும் பதிவிடவோ அல்லது பரப்பவோ கூடாது என்ற உறுதிமொழியுடன், பதிவிடப்பட்ட விஷயத்துக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு வழங்க வேண்டும் என ஒன்பிளஸ் கேட்டுக் கொண்டது.

ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி ஸ்மார்ட்போன்

இந்த மாத தொடக்கத்தில் ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி ஸ்மார்ட்போன் வழக்கறிஞரின் பாக்கெட்டில் வெடித்து சிதறியது. இதையடுத்து ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனத்துக்கு எதிராக அவர் வழக்கு தொடங்கினார். இதற்கு ஒன்பிளஸ் நிறுவனம் தரப்பில் இருந்து பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதில் தாங்கள் குலாதியை அணுக முயற்சித்தோம், பலமுறை முயற்சித்தும் அவரை அணுக முடையவில்லை எனவும் ஒன்பிளஸ் குறிப்பிட்டுள்ளது.

வழக்கறிஞருக்கு சட்ட அறிவிப்பு

அதேபோல் ஒன்பிளஸ் டெல்லியை சேர்ந்த வழக்கறிஞருக்கு சட்ட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஒன்பிளஸ் மற்றும் தயாரிப்புகளுக்கு எதிராக இதுபோன்ற அவதூறு வீடியோக்கள் அல்லது அவமதிக்கும் கருத்துகளை நிறுத்த வேண்டும் எனவும் அதேபோல் இதுகுறித்த முந்தைய பதிவுகளை நீக்க வேண்டும் எனவும் ஒன்பிளஸ் குறிப்பிட்டுள்ளது. இதுகுறித்து அவரது இடத்துக்கு சென்று சாதனத்தை பரிசோதிக்க ஒன்பிளஸ் முயற்சித்ததாகவும் அப்போது அவர் செல்போனை தர மறுத்துவிட்டார் எனவும் கூறப்படுகிறது. அதேபோல் நிறுவனத்திடம் சாதனம் கொடுக்கப்பட்டால் ஆதாரம் அழிக்கப்பட வாய்ப்பிருக்கும் காரணத்தால் அதை வழங்கவில்லை என வழக்கறிஞர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

வெடித்து சிதறிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்

டெல்லியை சேர்ந்த வழக்கறிஞரின் கவுனில் ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி சாதனம் வெடித்ததாக கூறப்படுகிறது. இந்த நிகழ்வானது புதுடெல்லியில் உள்ள நீதிமன்ற அறை ஒன்றில் புதன்கிழமை நடந்திருக்கிறது. பாதிக்கப்பட்ட பயனர் சம்பவத்தின் விவரங்களை டுவிட்டரில் பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும் இதுகுறித்து ஒன்பிளஸ் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

புகை வருவதை உணர்ந்த வழக்கறிஞர்

ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி தீப்பிடித்ததாக தொடரப்படும் இரண்டாவது வழக்கு இதுவாகும். முன்னதாக வெடித்த நிகழ்வு கடந்த மாதம் ஆன்லைனில் தெரிவிக்கப்பட்டது. தற்போது ஒன்பிளஸ் சாதனம் வெடித்து குறித்து டுவிட்டரில் பகிரப்பட்டுள்ளது. அதேபோல் தற்போது போன் வெடிப்பு சம்பவம் குறித்து கேட்ஜெட் 360 தளத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர் கவ்ரவ் குலாட்டி தனது அறையில் அமர்ந்திருந்த போது அவர் கவுனின் பாக்கெட்டில் இருந்த வெப்பம் வருவதை உணர்ந்திருக்கிறார். வெப்பம் உடலில் படுவதை உணர்ந்த போது தனது பாக்கெட்டில் இருந்த ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி சாதனத்தை எடுத்து அதில் இருந்து புகை வருவதை பார்த்ததாக தெரிவித்துள்ளார்.

முழு அறையும் புகையால் நிரம்பியதாக தகவல்

அதன்பின், தான் உடனடியாக கவுனை தூக்கி போட்டதாகவும், பின் தானும் தன் சகாக்களும் ஸ்மார்ட்போனின் அருகில் சென்றபோது, அது வெடித்ததாக தெரிவித்துள்ளார். இதையடுத்து முழு அறையும் புகையால் நிரம்பியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வெடித்த சாதனத்தை குறிப்பிட்ட சில தினங்களுக்கு முன்புதான் பயன்படுத்த தொடங்கியதாக தெரிவித்துள்ளார்.

டுவிட்டரில் வெளியிட்ட ஸ்க்ரீன் ஷாட்

தற்போது வெடித்த ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி சாதனம் ஆகஸ்ட் 23, 2021 அன்று வாங்கப்பட்டது. தற்போது வெடித்த ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி சாதனத்தின் புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்ட ஸ்க்ரீன் ஷாட்களை பகிர்ந்துள்ளார். புதிய ஸ்மார்ட்போனை பயன்படுத்தி சில தினங்களே ஆனதாக கூறிய அவர் பழைய தொலைபேசியில் இருந்து தரவை கூட மாற்றவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

நிர்வாகிகளுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை தாக்கல்

ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி வெப்பம் வெளிவரத் தொடங்கிய போது பயன்பாட்டில் இல்லை எனவும் சார்ஜிங் நிலையில் கூடவில்லை என பகிர்ந்துள்ளார். தற்போது வரை அதிர்ச்சியில் இருக்கிறேன் எனவும் அதில் இருந்து வெளியே வர முடியவில்லை எனவும் கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து ஒன்பிளஸ் நிர்வாக இயக்குனர் மற்றும் அமேசான் நிர்வாகிகளுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்வதாக கூறினார். இந்த சம்பவம் குறித்த புகைப்படங்களை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து மைஸ்மார்ட் பிரைஸ் தளம் முதலில் பகிர்ந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக