Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 22 செப்டம்பர், 2021

இனி கெத்தா போன் நம்பர் சொல்லுங்க- பிஎஸ்என்எல் பேன்ஸி எண் அறிவிப்பு: எப்படி வாங்குவது?

பேன்சி நம்பர்

பேன்ஸி நம்பர் மீது ஆர்வம் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் பிஎஸ்என்எல் பேன்ஸி விஐபி எண்களை ஆன்லைன் மூலம் பெறுவதற்கானா வழிமுறைகள் குறித்து பார்க்கலாம்.

பேன்சி நம்பர்

பொதுவாக ஒருவர் தங்களிடம் போன் நம்பர் கேட்கும்போது அதை எப்படி இருந்தாலும் முடிந்தளவு எளிதாக்கி சொல்லுவோம். அதுவே நம்பர் பேன்சி நம்பராக இருந்தால் அதை சொல்லும்போதே ஒரு கெத்தோடு அழகாக சொல்வோம். நம்பர் கேட்பவர் ஆஹா., நம்பர் நல்லா இருக்கே என கூறும்போது மனதிற்குள் ஒரு மகிழ்ச்சி.

பேன்ஸி நம்பர் அல்லது விஐபி நம்பர்

பேன்ஸி நம்பர் அல்லது விஐபி நம்பர் மீது ஈர்ப்பு இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது. ஒரு நிறுவனம் ஆரம்பிக்கும்போது வாடிக்கையாளர்கள் நம்பரை எளிதாக மனப்பாடும் செய்து கொள்வதற்காக மட்டுமே பேன்ஸி நம்பர் தேவை அதிகமாக இருந்தது. இப்போது வணிகம் மட்டுமின்றி பேன்ஸி நம்பர் என்பது தனிநபர்களிடமும் அதிகரித்துள்ளது.

பேன்ஸி நம்பர் தேவை இருக்கும் வாடிக்கையாளர்கள்

பேன்ஸி நம்பர் தேவை இருக்கும் வாடிக்கையாளர்கள் அதை எவ்வாறு பெறுவது என சந்தேகம் இருக்கலாம். பிஎஸ்என்எல் தற்போது அனைத்து பகுதிகளிலும் தங்களது சேவையை விரிவுப்படுத்தி வரும் நிலையில், பிஎஸ்என்எல் நெட்வொர்க் பேன்ஸி எண்ணை எப்படி ஆன்லைன் மூலம் வாங்குவது என்பது குறித்து பார்க்கலாம்.

பூஜ்ஜியம் அதிகமாக வரும் எண்

பேன்ஸி நம்பரை பலரும் பல வகையில் வாங்க முயற்சிப்பார்கள், பூஜ்ஜியம் அதிகமாக வரும் எண், தொடர்ச்சியாக உச்சரிக்கும் படியான எண், தங்களது பிறந்தநாள் தேதி தங்களுக்கு பிடித்தவர்களின் பிறந்தாள் தேதி ஆகியவைகள் இடம்பெற வேண்டும் என நினைப்பார்கள். ஒருவருக்கு நம்பரை கூறும்போது முதல்தடவையே அவர்கள் தங்களது நம்பரை எளிதாக நினைவில் வைத்துக் கொள்ள விரும்புவார்கள்.

பிஎஸ்என்எல் மீண்டும் புதிய சலுகை

ஃபேன்ஸி எண்களை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு பிஎஸ்என்எல் மீண்டும் புதிய சலுகைகளை வழங்கியுள்ளது. தொலைத்தொடர்பு ஆபரேட்டர் இந்த மாத ஃபேன்ஸி எண்களுக்கான விற்பனை மற்றும் செயல்முறை முன்னதாகவே தொடங்கிவிட்டது. ஆன்லைன் போர்ட்டலில் இந்த வசதிகளானது செப்டம்பர் 27, 2021 வரை கிடைக்கிறது.

பதிவு செய்வதற்கான செயல்முறை

இந்த வசதியானது கேரள பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. இந்த பதிவு செயல்முறை மிகவும் எளிதானது. ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் ஃபேன்ஸி எண்கள் இருப்பை சரிபார்த்து, நிறுவனத்தின் போர்ட்டலில் இறுந்து தங்களின் விருப்பப்படி எண்களை தேர்வு செய்யலாம். குறிப்பிடத்தக்க வகையில், நிறுவனம் இந்த சேவையில் போர்ட்டல் வழியாக மட்டுமே வழங்குகிறது.

ஃபேன்ஸி எண்களுக்கு பதிவு கட்டணம்

ஃபேன்ஸி எண்களுக்கு பதிவு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் அறிவித்தது. ரூ.25000 பதிவு கட்டணம் ஆன்லைன் போர்ட்டல் செலுத்த வேண்டும் எனவும் ஏலம் முடிந்தவுடன் அது திருப்பித் தர முடியும் என கேரளா டெலிகாம் தெரிவிக்கிறது. முகவரி சான்று, அடையாள சான்று போன்ற அனைத்து விவரங்களையும் கொடுக்க வேண்டும் என அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. அதிக விலைக்கு ஏலம் கொடுப்பவர்களுக்கு மட்டுமே எண்கள் வழங்கப்படும் என நிறுவனம் தரப்பில் தெரிவித்துள்ளது.

தொலைத் தொடர்பு ஆபரேட்டர் ஃபேன்ஸி எண்கள்

தொலைத் தொடர்பு ஆபரேட்டர் ஃபேன்ஸி எண்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பப்படி மொபைல் எண்களை பெற முடியும். ஃபேன்ஸி எண்கள் தேடும் நபர்கள் பிஎஸ்என்எல் தேர்வு எண்ணை தேடினால், இது சிறந்த நேரமாகும். அரசு நடத்தும் தொலைத்தொடர்பு ஆபரேட்டம் இருந்து ஃபேன்ஸி எண்களை பெறுவதற்கான சில வழிமுறைகள்.

ஃபேன்ஸி எண்ணை பெறுவதற்கான வழிமுறைகள்

வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் இணையதளத்தை (http://cymn.bsnl.co.in/) பார்க்க வேண்டும். இதில் தங்களுக்கு தேவையான மொபைல் எண்ணை கிளிக் செய்து விண்ணப்ப படிவத்தை நிரப்ப வேண்டும். மொபைல் எண்ணை டைப் செய்ய வேண்டும்.

பிஎஸ்என்எல் ஃபேன்ஸி எண்ணை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து பார்க்கலாம். ஆரம்பத்தில் https://cymn.bsnl.co.in/ என்ற இணையதளத்தை திறந்து பார்வையிட வேண்டும். தங்களது இருப்பிடம் அல்லது சேவைகளை பெற விரும்பும் மாநிலத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த பட்டியலில் பல்வேறு எண்கள் காட்டப்படும். இதில் இரண்டு கூடுதல் தேர்வும் காட்டப்படும் ஒன்று தேர்வு எண், இரண்டாவது ஆடம்பர எண் விருப்பம் ஆகியவை காட்டப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக