
மக்கள் அமேசான், பிளிப்கார்ட் போன்ற வலைத்தளங்களை அதிகம் பயன்படுத்த துவங்கி விட்டனர் என்றுதான் கூறவேண்டும். அதாவது கடை கடையாக ஏறி இறங்கி, பிடித்ததை தேடி அலைந்து வாங்கிய காலமெல்லாம் மலையேறிப் போய்விட்டது. இப்போது மக்கள் தங்கள் ஸ்மார்ட்போன் மூலம் தேவையான பொருட்களை ஆர்டர் செய்தால் போதும் வீட்டிற்கே கொண்டுவந்து தருகிறார்கள்.
மேலும் ஆன்லைனில் சில பொருட்கள் சலுகை விலையில் கிடைப்பதால் மக்கள் அதிகம் இதை தான் விரும்புகின்றனர். அதுவும் இந்தியாவில் அமேசான், பிளிப்கார்ட் தளங்களை மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் அமேசான் தனது வெப்சைட்டிலிருந்து சுமார் 600 சீன பிராண்டுகளை நீக்கி இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
மேலும் தடை செய்யப்பட்டுள்ள சீன பிராண்டுகளை சப்போர்ட் செய்த சுமார் 3000 வணிகர்களின் அக்கவுன்ட்களை அமேசான் க்ளோஸ் செய்து இருக்கிறது. குறிப்பாக போலி ரிவியூக்கள் மற்றும் பிற பாலிசி மீறல்களுக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமேசான் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் தடை செய்யப்பட்டுள்ள இந்த பிராண்ட் விற்பனையாளர்கள் ரிவ்யூகளை கொடுக்கும் வாடிக்கையளர்களுக்குபரிசு அட்டைகள் உட்பட வெகுமதிகளை வழங்கியதாக கூறப்படுகிறது. பின்பு இது கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சவுத் சீனா மார்னிங் போஸ்ட்டில் வெளியான தகவலின்படி, அமேசானின் கொள்கைகளை சில பிராண்டுகள் வேண்டுமென்றே மீறியுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக அமேசானின் 600 சீன பிராண்டுகளைத் தடைசெய்யும்முடிவானதும், உடனே பல சீன சிறுவனங்கள் ஈபே மற்றும் அலி எக்ஸ்பிரஸ் போன்ற இ-காமர்ஸ் நிறுவனங்களில் முதலீடு செய்து உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
ஆனாலும் அமேசானில் தடை செய்யப்பட்ட அனைத்து சீன பிராண்டுகளின் பெயர்கள் பற்றிய தகவல் இல்லை என்றாலும், அவற்றில் சில சீனாவில் மிகவும் பிரபலமானவைகள் என்று கூறப்படுகிறது. இருந்தபோதிலும் Aukey Mpow, RavPower, Vava போன்ற பிராண்டுகள் நிரந்தரமாக தடைசெய்யப்பட்ட பெரிய பிராண்டுகள் என்று தகவல் வெளிவந்துள்ளது.
அமேசான் நிறுவனம் மக்களுக்கு சிறந்த தயாரிப்புகளையும் மற்றும் சிறந்த ஷாப்பிங் அனுபவத்தை வழங்க வேலை செய்கிறது. குறிப்பாக வாடிக்கையாளர்கள் நம்பிக்கையுடன் இந்த தளத்தில் ஷாப்பிங் செய்யலாம் என அமேசான் நிறுவனம் கூறியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமேசான் தளத்தில் ரிவியூக்கள் மற்றும் நம்பகத்தன்மையை அடிப்படையாக வைத்தே சிலர் பொருட்களை வாங்குகின்றனர் என்றே கூறலாம். போலி ரிவியூக்கள் போன்றவற்றை தடுப்பதற்கு தெளிவான கொள்கைகள் எங்களிடம் உள்ளன என அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த கொள்கைகளை மீறுபவர்கள் உலகில் எங்கிருந்தாலும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கிறோம், தடை செய்கிறோம், சட்ட நடவடிக்கைகள் எடுக்கிறோம் என அமேசான் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக போலியான ரிவ்யூ உட்பட தெரிந்தே பலமுறை மற்றும் மீண்டும் மீண்டும் அரங்கேறிய கொள்கை மீறல்களில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுப்போம். இதன் மூலம் வாடிக்கையாளர்களின் நலன் மற்றும் எங்கள் உலகளாவிய விற்பனை சமூகத்தின் பெரும்பான்மையை உருவாக்கும், பின்பு நேர்மையான வணிகங்களுக்கு வழிவகுக்கும் என்று நம்புகிறோம் என்று அமேசான் கூறியுள்ளது. சுருக்கமாக கூறவேண்டும் என்றால் அமேசான் கொள்கைகளை மீறுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்று கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக