Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 22 செப்டம்பர், 2021

ஆப்பிள் ஐபோன் 'மினி' சகாப்தம் முடிவடைகிறதா? இனி அப்பிளில் மினி வெர்ஷன் கிடையாதா? என்னப்பா சொல்றீங்க?

 ஐபோன் 13 மினி உடன் 'மினி' வெர்ஷனுக்கான சகாப்தம் முடிவடைகிறதா?

சமீபத்தில் வெளியான ஒரு தகவல் ஒட்டுமொத்த ஆப்பிள் ரசிகர்களையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. காரணம், புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஆப்பிள் ஐபோன் 13 மினி மாடலுடன், ஆப்பிள் நிறுவனம் அதன் "மினி" ஐபோன் வெர்ஷனை நிறுத்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆம், ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து வெளியாகும் கடைசி மினி ஐபோன் சாதனமாக ஆப்பிள் ஐபோன் 13 மினி இருக்கப்போகிறது என்று பிரபல டிப்ஸ்டர் தகவல் தெரிவிக்கிறது. ஆப்பிள் நிறுவனத்தின் இந்த திடீர் முடிவிற்கு என்ன காரணம் என்பதைத் தெளிவாகப் பார்க்கலாம்.

கம்மி விலையில் ஆப்பிள் போன் வாங்க நிறுவனம் எடுத்த முயற்சி தான் ஐபோன் மினி வெர்ஷனா?

ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டு ஆப்பிள் ஐபோன் 12 மினி சாதனத்தை அறிமுகம் செய்து மினி வெர்ஷனை துவங்கியது. இந்த மினி வெர்ஷன் குறிப்பாக கம்மி விலையில் ஆப்பிள் போன் வாங்க விரும்பும் ரசிகர்களுக்காகப் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டது என்று நிறுவனம் அதன் அறிமுகத்தின் போது கூறியிருந்தது கவனிக்கத்தக்கது. ஆனால், ஆப்பிள் நிறுவனம் எதிர்பார்த்ததை விடக் கடந்த ஆண்டு ஐபோன் 12 மினி விற்பனை குறைவாக இருந்தது என்றும், ரசிகர்களிடம் இருந்து மகிழ்ச்சியான பதிலைப் பெறவில்லை என்றும் கூறப்படுகிறது.

ஐபோன் 13 மினி உடன் 'மினி' வெர்ஷனுக்கான சகாப்தம் முடிவடைகிறதா?

ஆப்பிள் நிறுவனம் எதிர்பார்த்ததை விட ஆப்பிள் ஐபோன் மினி வெர்ஷன் மாடல்களுக்கான விற்பனை மந்தமாகவே இருந்துள்ளது. இதனால், ஆப்பிள் நிறுவனம் அடுத்த ஆண்டு வெளியிடவிருக்கும் புதிய ஆப்பிள் ஐபோன் 14 சீரிஸ் வரிசையில் ஆப்பிள் ஐபோன் 14 மினி சாதனம் இருக்க வாய்ப்பில்லை என்று டிப்ஸ்டர் தகவல் தெரிவித்துள்ளது. இதனால், ஐபோன் 13 மினி உடன் 'மினி' வெர்ஷனுக்கான சகாப்தம் நிறைவடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது போல் தெரிகிறது.

ஆப்பிள் ஐபோன் 14 சீரிஸ் இல் மினி வெர்ஷன் இல்லாமல் புது மாடல் இடம்பெறுமா?

ஆப்பிள் நிறுவனம் அடுத்த ஆண்டு வெளியிடத் தயாராகி வரும் ஆப்பிள் ஐபோன் 14 சீரிஸ் வரிசை மாடலில் மினி வெர்ஷன் இல்லாமல், அதற்குப் பதிலாக வேறு ஏதும் புதிய ஐபோன் மாடலை நிறுவனம் அறிமுகம் செய்யுமா என்பதை நாம் வரும் காலத்தில் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள் ஐபோன் 13 சீரிஸை அறிமுகம் செய்த கையோடு அடுத்த ஐபோன் 14 தொடரை உருவாக்கும் வேளையில் மும்முரமாகக் களமிறங்கியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபோன் 12 மினி விற்பனை மந்தமாக இருப்பது தான் காரணமா?

ஆப்பிள் நிறுவனம் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் தனது ஐபோன் 14 சீரிஸை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. ஆப்பிள் தனது போர்ட்ஃபோலியோவில் ஐபோன் 12 மினியை அறிமுகப்படுத்திய பின்னர், போதிய வரவேற்பு கிடைக்காததினால் இந்த முடிவு நிறுவனம் வந்திருக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. டிப்ஸ்டர் ஜான் வெளியிட்ட டிவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது,

ஐபோன் 13 மினி தான் உங்களுக்கான கடைசி வாய்ப்பு

' ஆப்பிள் நிறுவனம் அடுத்த ஆண்டு ஐபோன் 14 மினி சாதனத்தை அறிமுகம் செய்யாது, ஐபோன் 13 மினி தான் மினி வெர்ஷனில் கிடைக்கும் இறுதி மாடலாக இருக்கும்" என்று அவர் கூறியுள்ளார்."எனவே நீங்கள் மினி ஐபோனை வாங்கி பயன்படுத்த நினைத்து இன்னும் யோசித்துக்கொண்டிருந்தால், ஆப்பிள் ஐபோன் 13 மினி தான் உங்களின் கடைசி வாய்ப்பு" என்று அவர் ட்வீட்டில் குறிப்பிட்டுக் கூறியுள்ளார்.

ஐபோன் 14 வரிசையில் எத்தனை மாடல்களை நாம் எதிர்பார்க்கலாம்?

ஜூன் மாதத்தில், ஆய்வாளர் மிங்-சி குவோ வெளியிட்ட தகவலின் படி, ஆப்பிள் நிறுவனம் வரும் 2022 ஆம் ஆண்டில் அதன் புதிய ஐபோன் குடும்ப வரிசையில் ஐபோன் 14 தொடரைச் சேர்க்கவுள்ளது. இந்த வரிசையில் ஐபோன் 14 மினி மாடல் இல்லாமல் நிறுவனம் வெறும் நான்கு மாடல்களை மட்டும் அறிமுகம் செய்யுமென்று அவர் ஊகிப்பதாக அறிவித்துள்ளார். ஆப்பிள் ஐபோன் 12 மினி (ரூ. 61,999) விற்பனை சரிந்தது ஒரு காரணமாக அவர் கூறியுள்ளார். எனினும், ஐபோன் 13 மினி சாதனத்தின் சந்தை செயல்திறனைப் பார்க்க ஆர்வமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

ஐபோன் 14 சாதனம் இந்த டிஸ்பிளே அளவில் வெளிவர வாய்ப்புள்ளது

ஐபோன் 14 மினி இல்லாமல் இருக்கும் போதிலும், நிறுவனம் வரும் 2022 ஆம் ஆண்டில் ஆப்பிள் ஐபோன் 14 வரிசையில் நான்கு புதிய ஐபோன் மாடல்களைக் கொண்டுவரும் என்று குவோ கணித்துள்ளார். அந்த நான்கு மாடல்களில் இரண்டு மாடல்கள் உயர்நிலை விருப்பங்களாகவும், மீதமுள்ள இரண்டு மாடல்கள் தொடரின் கீழ் நிலை ஐபோன் 14 போனாக இருக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார். உயர் மற்றும் கீழ்நிலை பதிப்புகள் இரண்டும் 6.1' இன்ச் மற்றும் 6.7' இன்ச் கொண்ட டிஸ்பிளே வடிவமைப்பில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பிள் ஐபோன் 13 மினி சாதனத்திற்கும் ஐபோன் 12 மினி சாதனத்திற்கும் என்ன வேறுபாடு?

மாறாக, ஆப்பிள் ஐபோன் 13 மினி சாதனம் முன்பு அறிமுகம் செய்யப்பட்ட ஆப்பிள் ஐபோன் 12 மினியைப் போலவே 5.4' இன்ச் கொண்ட சூப்பர் ரெடினா XDA டிஸ்ப்ளேவுடன் வருகிறது. ஆப்பிள் ஐபோன் 13 மினி இந்தியச் சந்தையில் ரூ. 89,900 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஐபோன் 13 ஐ விட சிறிய பேட்டரியை இந்த மினி வெர்ஷன் கொண்டுள்ளது. இது தவிர, இதன் மற்ற அம்சங்கள் எல்லாம் வழக்கமான ஐபோன் 13 மாடலுடன் ஒத்துப்போகிறது. ஐபோன் 13 மினி சாதனத்திலும் அதே இரட்டை பின்புற கேமரா அமைப்பு மற்றும் அதே A15 பயோனிக் சிப் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக