Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 15 செப்டம்பர், 2021

ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்த ரூ.75 ப்ரீபெய்ட் திட்டம்: என்னென்ன நன்மைகள்? வேலிடிட்டி?

பிட்டு சொல்ல

ஜியோ நிறுவனம் சமீபத்தில் டிஸ்னி+ஹாட்ஸ்டார் சந்தா கிடைக்கும் புதிய திட்டங்களை அறிமுகம் செய்தது. அந்த திட்டங்கள் அனைத்தும் அதிக டேட்டா நன்மையுடன் பயனுள்ள வகையில் இருந்தது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் ஜியோ நிறுவனம் தனது ஜியோபோன் வாடிக்கையாளர்களுக்கு புதிய ரூ.75 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், இந்த ரூ.75 ரீசார்ஜ் திட்டம் தான் அந்நிறுவனம் வழங்கும் மலிவான திட்டம் ஆகும். அதாவது ஜியோபோன்களுக்கான ரூ.39 மற்றும் ரூ.69 திட்டங்களை நிறுத்திய பின்பு தான் இந்த புதிய ரீசார்ஜ் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் தான் ரூ.39 மற்றும் ரூ.69 திட்டங்கள் நிறுத்தப்பட்டது. பின்பு இந்த இரண்டு திட்டங்களும் நிறுவனத்தின் வலைத்தளம் மற்றும் ஆப் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது ஜியோவின் ரூ.75 ரீசார்ஜ்திட்டத்தின் நன்மைகளைப் பார்ப்போம்.

ஜியோ ரூ.75 ரீசார்ஜ் திட்டம்

ஜியோ நிறுவனத்தின் ரு.75 ரீசார்ஜ் திட்டம் ஆனது தினசரி 50 எஸ்எம்எஸ் நன்மைகள், வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தில் 200MB பூஸ்டருடன் மாதத்திற்கு 3GB அளவிலான 4G டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர ஜியோ கிளவுட், ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோநியூஸ், ஜியோ செக்யூரிட்டி போன்ற ஜியோ ஆப்ஸ்களுக்கான இலவச அணுகல் உள்ளது.கண்டிப்பாக இந்த திட்டம் ஜியோபோன்வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும்.அதேபோல் இந்த ரூ.75 திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

அதேபோல் இந்நிறுவனம் சில வாரங்களுக்கு முன்பு டிஸ்னி + ஹாட்ஸ்டார் சேவைக்கான அணுகலை வழங்கும் ரூ 499, ரூ.666, ரூ.888, ரூ.2,599, மற்றும் ரூ.549 திட்டங்களை அறிமுகம் செய்தது. இந்த திட்டங்கள் அனைத்தும் ஐபிஎல் போட்டிகளை காண வசதியாக இருக்கும் என்றே கூறலாம். அதேபோல் பயனர்களுக்கு இந்த திட்டங்கள் ஆங்கில மொழியிலான international content உட்பட டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மேடையின் கீழ் கிடைக்கும் முழு கன்டென்ட்டிற்கான அணுகலை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது இந்த திட்டங்களின் நன்மைகளை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஜியோ ரூ.499 திட்டம்

ஜியோ அறிவித்துள்ள ரூ.499 திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். இதுதவிர வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், ஜியோ ஆப்களுடன் ஹாட்ஸ்டார் மொபைலுக்கான இலவச சந்தா உள்ளிட்ட பல நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

ஜியோ ரூ.666 மற்றும் ரூ.888 திட்டங்கள்

ஜியோ நிறுவனத்தின் ரூ.666 மற்றும் ரூ.888 ரீசார்ஜ் திட்டங்கள் தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகின்றன. மேலும் ரூ.666 ரீசார்ஜ் திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். பின்பு ரூ.888 ரீசார்ஜ் திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். இதுதவிர வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், ஜியோ ஆப்களுடன் ஹாட்ஸ்டார் மொபைலுக்கான இலவச சந்தா உள்ளிட்ட பல நன்மைகள் இந்தஇரண்டு திட்டங்களில் கிடைக்கிறது.

ஜியோ ரூ.2599 திட்டம்

ஜியோ நிறுவனத்தின் ரூ.2599 திட்டம் ஆனது ஒரு ஆண்டு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா வழங்கும் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா கிடைக்கும். குறிப்பாக ரூ.2599 திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். இதுதவிர வரம்பற்ற அழைப்புகள், தினசரி 100 எஸ்எம்எஸ், ஜியோ பயன்பாடுகளுக்கான அணுகல் உள்ளிட்ட பல நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

ஜியோ ரூ.549 டேட்டா ஆட்-ஆன் பேக்

ஜியோவின் ரூ.549 டேட்டா ஆட்-ஆன் பேக் ஆனது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவை வழங்குகிறது. பின்பு இந்த சிறப்பு திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். குறிப்பாக ரூ.549 டேட்டா ஆட்-ஆன் பேக் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும்.

அதேபோல் செப்டம்பர் 10 ஆம் தேதி ஜியோபோன் நெக்ஸ்ட் சாதனம் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,இதன் விற்பனை தேதி மாற்றப்பட்டுள்ளது. அதாவது தற்போது வெளிவந்த தகவலின்படி தீபாவளிக்கு முன்பாக வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிப்செட்களின் பற்றாக்குறையால் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனை வெளியிடுவதை தாமதப்படுத்தியது. பின்பு இந்த சாதனம் தீபாவளிக்கு முன்பு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் விரைவில் இந்நிறுவனம் பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக