Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 15 செப்டம்பர், 2021

பிடித்த விஷயத்தை அடைய... என்ன செய்ய வேண்டும்? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

--------------------------------------------------
கலக்கல் காமெடிகள்...!!
--------------------------------------------------
மாமனார் : என்ன மாப்ளே... உங்க கண்ணெதிர்ல ஒருத்தன் கோயில் உண்டியலை உடைச்சு பணத்தை எடுத்தான்னு சொல்றீங்க.... அதைத் தடுக்காம பாத்துக்கிட்டு இருந்திருக்கீங்களே?
மருமகன் : அந்தக் கோயில்லதான் உங்க பொண்ணை எனக்கு கல்யாணம் பண்ணி வெச்சீங்க... அப்போ சாமி தடுக்காம பாத்துக்கிட்டுதானே இருந்துச்சு!
மாமனார் : 😬😬
--------------------------------------------------
பாபு : இன்ஸ்பெக்டர்.. என்னை உடனே லாக்-அப்-ல வைங்க..
இன்ஸ்பெக்டர் : ஏன்.. என்ன ஆச்சு..?
பாபு : என் மனைவியை கட்டையால் தலையில் அடித்துவிட்டேன்..
இன்ஸ்பெக்டர் : செத்துட்டாங்களா..?
பாபு : இல்லே.. கோபமா வந்துட்டு இருக்கா.. அதனாலதான் சொல்றேன்.. ப்ளீஸ்.. உடனே உள்ள வெச்சு பூட்டுங்க..!!
இன்ஸ்பெக்டர் : 😂😂
--------------------------------------------------
அட அப்படியா?
--------------------------------------------------
🐛 கம்பளிப் பூச்சியின் உடல் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தசைகளால் ஆனது. ஆனால் மனித உடலோ 700க்கும் குறைவான தசைகளால் ஆனது.

🍷 ஒரு டம்ளரில் சர்க்கரையை அதிக அளவு கரைத்துவிட்டு கோழிமுட்டையை அதில் போட்டால், முட்டை மூழ்காமல் மிதக்கும்.

--------------------------------------------------
குறளும்... பொருளும்...!!
--------------------------------------------------
அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்.

பொருள் :

அருமையான பயன்களை ஆராயவல்ல அறிவை உடைய அறிஞர், மிக்க பயன் இல்லாத சொற்களை ஒருபோதும் சொல்லமாட்டார்.
--------------------------------------------------
சிந்தனை வரிகள்...!!
--------------------------------------------------
👉 உங்களுக்கு பிடித்த ஒரு விஷயத்தை அடைய நிறைய கஷ்டப்பட வேண்டும்.

👉 அதற்கு சிறிது காலம் ஆகும். அதுவரையில் காத்திருக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

👉 எல்லாவற்றிற்கும் உரிய நேரம் இருக்கிறது.

👉 அவசரப்படுவதால் நிம்மதி தொலையுமே தவிர நன்மை எதுவும் கிடைக்கப்போவதில்லை.

👉 வலிகள் நிறைந்த வாழ்க்கை நிச்சயம் ஒருநாள் வரலாறு படைத்தே தீரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக