ஒவ்வொரு
முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களிடம் இருந்து பலப்பல புதிய ஸ்மார்ட்போன்
சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் இப்போது ஒரு
புதிய சாதனம் தரமான அம்சத்துடன் வருகிறது. இம்முறை இந்த தரமான சாதனம்
ரியல்மி நிறுவனத்திடம் இருந்து Realme 8i என்ற மாடல் வெளிவரத் தயாராகிறது.
இந்திய வெளியீடு பற்றி புதிய டீசர் தகவல் வெளியாகியுள்ளது.Realme 8i இந்தியாவில் அறிமுகமா?
இப்போது ரியல்மி நிறுவனம் அதன் வரவிருக்கும் இடைப்பட்ட ஸ்மார்ட்போன் மாடலான Realme 8i சாதனத்தை மீடியா டெக் ஹீலியோ ஜி 96 சிப்செட் மூலம் இயக்கப்படும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. ரியல்மி மற்றும் மீடியா டெக் ஆகிய இரண்டு முக்கிய நிறுவனங்களும் இணைந்து இந்த தகவலை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ரியல்மி தனது வரவிருக்கும் ஸ்மார்ட்போனுக்கான வெளியீட்டுத் தேதியை இன்னும் அறிவிக்கவில்லை.
108 மெகாபிக்சல் முதன்மை கேமரா
இந்த மாத தொடக்கத்தில் Realme 8i ஸ்மார்ட்போனின் அறிமுகம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று ஆன்லைன் கசிவு தகவல்கள் தெரிவிக்கிறது. Realme 8i ஸ்மார்ட்போனின் கூறப்படும் ரெண்டர்கள் அதன் சில முக்கிய விவரக்குறிப்புகளுடன் ஆன்லைனில் தற்போது கசிந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே உயர் புதுப்பிப்பு விகித டிஸ்பிளேவுடன் வெளிவர வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. இந்த சாதனம் 108 மெகாபிக்சல் முதன்மை கேமரா சென்சார் உடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மீடியாடெக் ஹீலியோ G96 சிப்செட் உடன் வெளிவரும் முதல் ஸ்மார்ட்போன் இது தானா?
ரியல்மி மற்றும் மீடியாடெக்கிற்கு சேர்ந்து வெளிப்படுத்திய டிவிட்டர் பரிமாற்றத்தின் மூலம், வரவிருக்கும் ரியல்மி 8i ஸ்மார்ட்போன் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மீடியாடெக் ஹீலியோ G96 சிப்செட் கொண்டிருக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போன் புதிதான தரமான சிப்செட் உடன் அறிமுகமாகும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. புதிய ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீகிதம் கொண்ட டிஸ்பிளேவை ஆதரிக்கிறது. 108 மெகாபிக்சல் பின்புற கேமரா சென்சாரையும் ஆதரிக்கிறது.
தரமான அம்சங்களுடன் சிறப்பான ஸ்மார்ட்போன்
கூடுதலாக, நிறுவனம் அறிமுகம் செய்யும் ஸ்மார்ட்போனில் இருக்கும் சிப்செட் மீடியாடெக் ஹைப்பர் எஞ்சின் 2.0 லைட்டுடன் வருகிறது. இது பயனர்களுக்கு மென்மையான கேமிங் அனுபவத்தைச் செயல்படுத்த CPU, GPU மற்றும் நினைவகத்தைப் புத்திசாலித்தனமாக நிர்வகிப்பதற்காக வழங்கப்பட்டுள்ளது. இறுதியாக, இந்த புதிய சிப்செட் டூயல் சிம் 4 ஜி எல்டிஇ இணைப்பிற்கான ஆதரவையும் கொண்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ்
கடந்த வாரம் டிப்ஸ்டர் ஸ்டீவ் ஹெமர்ஸ்டாஃபர் வெளியிட்ட தகவலின் படி Realme 8i இன் அதிகாரப்பூர்வ தோற்றமுடைய ரெண்டர்கள் பகிரபட்டது. இதன் படி, ரியல்மி 8i சாதனம் 6.59' இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்ப்ளேவை 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வெளிவரும் என்றும், செல்பி கேமராவுக்கான பஞ்ச் ஹோல் கட்அவுட்டைப் பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள் சேமிப்புடன் இணைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
5,000 எம்ஏஎச் பேட்டரி
புதிய ஸ்மார்ட்போனின் கேமரா அம்சத்தைப் பொறுத்தவரை, இது 50 மெகாபிக்சல் பிரைமரி சென்சார், 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் கொண்ட மூன்று பின்புற கேமரா அமைப்பைப் பெற வாய்ப்புள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்பிற்காக 16 மெகாபிக்சல் சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது. இது 5,000 எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக