
ஜியோ
நிறுவனம் சமீபத்தில் டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவை வழங்கும்
திட்டங்களை அறிமுகம் செய்தது. தற்போது அந்நிறுவனத்திற்கு போட்டி கொடுக்கும்
வகையில் ஏர்டெல் நிறுவனம் மூன்று திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.
குறிப்பாக ஏர்டெல் நிறுவனம்
கொண்டுவந்துள்ள இந்த மூன்று திட்டங்கள் 1ஆண்டுக்கு டிஸ்னி+ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ரூ.499, ரூ.699 மற்றும் ரூ.2798 ப்ரீபெய்ட் திட்டங்களை தான் ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த திட்டங்கள் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும். இப்போது இந்த மூன்று திட்டங்களின் நன்மைகளை சற்று விரிவாகப் பார்ப்போம்.
ஏர்டெல் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல்
நிறுவனத்தின் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை
வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.
அதேபோல் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், 1 ஆண்டு
டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைல்
சந்தா உள்ளிட்ட பல நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும்.
ஏர்டெல் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல்
நிறுவனத்தின் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை
வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும்.
அதேபோல் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், 1 ஆண்டு
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல்
சந்தா உள்ளிட்ட பல நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும்.
ஏர்டெல் ரூ.2798 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல்
நிறுவனத்தின் ரூ.2798 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா
நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள்
ஆகும். அதேபோல் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், 1
ஆண்டு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல்
சந்தா உள்ளிட்ட பல நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும்.
குறிப்பாக ஏர்டெல் நிறுவனம் இப்போது கொண்டுவந்துள்ள இந்த புதிய திட்டங்கள் 30 நாட்களுக்கு அமேசான் பிரைம் வீடியோ மொபைல் எடிஷனுக்கான இலவச சோதனை, ஹெல்யூடூன்ஸ், விங்க் மியூசிக் அணுகலையும் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திட்டங்கள் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் ஜியோ நிறுவனம் டிஸ்னி + ஹாட்ஸ்டார் சேவைக்கான அணுகலை வழங்கும் ரூ 499, ரூ.666, ரூ.888, ரூ.2,599, மற்றும் ரூ.549 திட்டங்களை தான் அறிமுகம் செய்துள்ளது. மேலும் ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்த இந்த திட்டங்கள் வரம்பற்ற குரல் அழைப்பு, எஸ்எம்எஸ் மற்றும் டேட்டா நன்மைகளை வழங்குகின்றன. ஆனால் ரூ.549 திட்டம் மட்டும் ஒரு டேட்டா வவுச்சர் ஆகும். மேலும் இந்த திட்டங்களுடன் பயனர்களுக்கு வழங்கப்படும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா 1 வருடம் செல்லுபடியாகும்என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பயனர்களுக்கு இந்த ஜியோ திட்டங்கள் ஆங்கில மொழியிலான international content உட்பட டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மேடையின் கீழ் கிடைக்கும் முழு கன்டென்ட்டிற்கான அணுகலை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக