Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 21 செப்டம்பர், 2021

இப்படியும் எடை குறைக்கலாமா? இந்த ட்ரீட்மெண்ட நல்லாருக்கே😂... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

--------------------------------------------
ஒரு நகைச்சுவை கதை...!!
 --------------------------------------------
ஒரு ஊர்ல ஒரு இளவயசு ஆள் ஒருநாள் காசு போட்டு எடை பார்க்கும் மிசின்ல ஏறி எடை பார்த்தார். மிசின்ல இருந்து இறங்கிய உடனே எடையும், குறிப்பும் அச்சடிக்கப்பட்ட சீட்டு வந்தது. அதை எடுத்துப் பார்த்தார் அதில் எடைக்கு பதில் இப்படி அச்சடிக்கப்பட்டிருந்தது..

ஒரு சமயத்தில் ஒருவர் மட்டுமே ஏறி எடை பார்க்கவும் இருவருக்கு எடை சொல்ல இயலாது.. இதைப் பார்த்த நம்ம ஆசாமிக்கு ரொம்ப தர்ம சங்கடமாப் போச்சு... இதற்கு மேல் ஏதாவது செய்து உடல் எடைய குறைக்கலேன்னா ரொம்ப சிரமப்படணும்னு யோசனை செஞ்சார்.

அவருக்கு திடீர்னு கொஞ்ச காலம் அமெரிக்கா போக வாய்ப்பு வந்தது. போனவர் ஒருநாள் ஒரு வீதி வழியே நடந்து போய்கிட்டிருந்தார். அங்கே ஒரு விளம்பரம் தென்பட்டது.. உங்கள் உடல் எடையை பத்து நாளில் குறைக்க வேண்டுமா?.. இங்கே வாருங்கள் என்று இருந்தது.

அதுவொரு பெரிய அரங்கம். நம்ம ஆசாமி யோசனை பண்ணிட்டே உள்ளே போனார். அங்கே ஒரு பெண் வரவேற்பாளர் வரவேற்று, என்ன சார் எடையக் குறைக்கணுமா-னு விபரம் கேட்டுட்டு, இங்க ஆர்டினரி ட்ரீட்மெண்ட் 15 நாள்ல குறைச்சுடலாம் அதுக்கு 20 டாலர் கட்டணம், ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட்டும் இருக்கு அதுக்கு 50 டாலர்னு சொன்னாள் அந்த பெண். நம்மாளு யோசனை பண்ணிட்டு சரி ஆர்டினரியே போதும்னு பணத்தை கட்டினார்.

சரி சார் அந்த இடது பக்க அரங்கத்துக்கு போங்க, சிகிச்சை ஆரம்பம்னு சொல்லி கதவைத் திறந்து நம்மாளை உள்ளே விட்டுக் கதவை சாத்திட்டு வரவேற்பாளர் சென்றுவிட்டாள். அங்க பாத்தா மேஜை நாற்காலி எல்லாம் கண்ணாபிண்ணானு ஒரு ஒழுங்கில்லாம சிதறிக் கிடந்துச்சு. உள்ளே ஒரு 20 வயசு இளம்பெண் மட்டும் ஒரு மூலைல நின்னுட்டிருந்துச்சு... நம்மாள் அந்த பெண்ணை பிடிக்க அவளை நோக்கி ஓடினான். அந்த பெண் இவனுக்கு சிக்காம களைந்து கிடந்த மேஜை நாற்காலிக்கு இடையே புகுந்து ஓடினாள். இவனும் பின்னாடியே துரத்துறான் இப்படியே அரை மணி நேரம் போச்சு பிடிக்கவே முடியல. 

நம்மாளு வேர்த்து களைச்சுப் போயிட்டான், வரவேற்பாளரும் வந்து கதவைத் திறந்து இன்னைக்குப் போதும் இவ்வளவு தான் சார் ட்ரீட்மெண்ட். மீண்டும் இதே நேரம் நாளைக்கு வாங்க இப்படித் தான் 15 நாளுக்கும்னு சொல்லிடுச்சு.

நம்மாளு ஆர்டினரியே இப்படினா ஸ்பெஷல் எப்படி இருக்கும்? அதையும் பாத்துடலாம் இதுக்காக இன்னொரு தடவை அமெரிக்காவுக்கு வரவா முடியும்னு வரவேற்பாளர் கிட்ட போய் நான் ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட்டும் எடுக்கணும்னு சொன்னார். சரி அதுக்கு 50 டாலர் கட்டிட்டு அந்த வலது பக்க அரங்கத்துக்குள்ள போங்கனு சொல்லிட்டு இவனை உள்ளே விட்டு கதவை சாத்திட்டு சென்றுவிட்டாள்.

அங்கயும் அதேபோல மேஜை நாற்காலி எல்லாம் ஒழுங்கில்லாம சிதறிக் கிடந்துச்சு. உள்ளே பாத்தா ஒரு மூலைல 70 வயசு பாட்டி ஒன்னு நின்னுகிட்டிருந்தாங்க. அந்தப் பாட்டி இவனை துரத்த ஆரம்பிச்சுது. நம்மாளு தப்பிச்சா போதும்னு சிக்காம ஓடுறான். பாட்டியும் விடாம துரத்துது. 

இப்படியே ஒரு மணி நேரம் போச்சு. வரவேற்பாளர் வந்து கதவைத் திறந்து போதும் சார் இன்னைக்கு, இந்த ட்ரீட்மெண்ட்ல உங்களுக்கு 5 நாள்ல உடம்பு குறைஞ்சிடும் இதுதான் ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட் போயிட்டு நாளைக்கு வாங்கனு சொல்லிடுச்சு.😂😂

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!