செவ்வாய், 21 செப்டம்பர், 2021

டெலிகிராம் பயனர்களே உஷார்: டார்க் வெப் தளமாக மாறுகிறதா டெலிகிராம்? சட்டவிரோத செயல்களில் சிக்கும் பயனர்கள்..

 டார்க் வெப் தளமாக மாறுகிறதா டெலிகிராம் ஆப்ஸ்?

டெலிக்ராம் ஆப்ஸ் பயன்படுத்தும் பயனர்கள் கவனத்திற்கு, வாட்ஸ்அப் பிரைவசி சரி இல்லை என்று டெலிக்ராம் பக்கமாக உங்களின் கவனத்தை மாற்றிய பயனர்களுக்கு இந்த செய்தி கொஞ்சம் அதிர்ச்சியைத் தரலாம். சமூக ஊடக செயலிகளில் ஒன்றாகத் திகழும் டெலிகிராம் ஆப்ஸ் இப்போது டார்க் வெப் ஆக மாறிவருவதாகத் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. குற்றச் செயல்களுக்கான முக்கிய தளமாக டெலிக்ராம் உருவெடுத்துவருவதாக புதிய ஆய்வின் முடிவுகள் தெரிவித்துள்ளது.

டார்க் வெப் தளமாக மாறுகிறதா டெலிகிராம் ஆப்ஸ்?

டெலிக்ராம் என்ற தனியார் மெசேஜ்ஜிங் ஆப்ஸ் எப்படி டார்க் வெப் தளமாக மாறமுடியும் என்று டெலிக்ராம் பயனர்கள் கேட்கலாம்? விபரம் தெரியாதவர்களுக்கு டெலிக்ராம் பின்னணியில் நடக்கும் விபரீதங்கள் பற்றி சில பயனர்கள் அறிந்திருக்கவில்லை. நாம் தற்போது பயன்படுத்திக்கொண்டிருக்கும் இணையத்தை சர்ஃபேஸ் வெப் (Surface web) என்று அழைக்கிறோம். இதன் பேர் சொல்வது போல் இது இணைய உலகத்தின் சர்ஃபேஸாக இருக்கிறது. இதற்கு எதிர்மறையானது தான் டீப் வெப் அல்லது டார்க் வெப் செயல்படுகிறது.

சர்பேஸ் வெப் என்றால் என்ன? டார்க் வெப் என்றால் என்ன? இது இரண்டும் எப்படி செயல்படுகிறது?

நாம் பயன்படுத்தும் சர்பேஸ் வெப் வெளிப்படையானது. நாம் தேடும் பொதுவான தகவல்கள் மற்றும் விவரங்களை நீங்கள் இந்த சர்பேஸ் வெப் மூலம் குறிப்பிட்ட வெப் பக்கங்களை அணுகி, உங்களுக்குத் தேவையான தகவலை நொடியில் அறிந்துகொள்ளலாம். ஆனால், சில பயனர்களுக்கு பொதுவான தகவல்கள் மீது ஆர்வம் இருக்காது, நிலவின் இருள் பக்கம் போல இணையத்தில் உள்ள இருள் பக்கத்தை ஆராய்வதற்கு ஆர்வம் இருக்கும். இவர்கள் எல்லாம் இணையத்தின் இருள் உலகமான டார்க் வெப் தளத்தைப் பயன்படுத்துகிறார்கள்.

சட்டவிரோதமான தளங்கள் மற்றும் தவறான டிஜிட்டல் செயல்களின் கூடாரமாக செயல்படுகிறதா டார்க் வெப்?

இணையத்தின் இருள் பக்கம் என்று அழைக்கப்படும் இந்த டீப் வெப் (Deep web) இணையத்தில் நடக்கும் தவறான விஷயங்களின் உலகமாகத் திகழ்கிறது. டார்க் வெப் மூலம் ஒரு பயனர் சட்டவிரோதமான தளங்களையும் கூட எந்தவித அடையாளமும் வெளிப்படுத்தாமல் பயன்படுத்த முடியும். ஆபாச திரைப்படங்களைப் பதிவிறக்கம் செய்வது, போதை மருந்து வாங்குவது, ஆயுத கடத்தல், பொருள் கடத்தல், சட்டவிரோத செயல்கள், குழந்தை கடத்தல் போன்ற செயல்களைச் செய்யவும் இந்த டார்க் வெப் அனுமதிக்கிறது.

தெரிந்தோ அல்லது தெரியாமலோ சட்டவிரோதமான செயல்களில் சிக்கும் டெலிகிராம் பயனர்கள்

இப்படி ஒட்டுமொத்த சட்டவிரோதமான நடவடிக்கைகளும் இணையத்தின் இருள் பக்கமான டார்க் வெப் தளத்தில் நடைபெறுகிறது. இந்த தவறான செயல்கள் எல்லாம் இப்போது டார்க் வெப் பக்கத்தில் இருந்து தற்போது டெலிகிராம் பக்கம் ஊடுருவத் துவங்கியுள்ளது. இதனால், சட்டவிரோதமான செயல்களில் தெரிந்தோ அல்லது தெரியாமலோ அதன் பயனர்களும் ஈடுபெறுகிறார்கள் என்ற பகிர் தகவல் தற்போது வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

திருடப்பட்ட பயனர் தரவு டெலிகிராம் மூலம் விற்பனையா?

சட்டவிரோதமான பிற செயல்கள் நடக்கும் டார்க் வெப் தளத்தில், திருடப்பட்ட பயனர் தரவு மற்றும் ஹேக்கிங் செய்ய உதவும் கருவிகளை வாங்க, விற்க மற்றும் பகிர தற்போது டெலிக்ராம் பயன்படுத்தப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. இணையக் குற்றவாளிகள் பகிர விரும்பும் தகவல்களைப் பரிமாற உதவும் புதிய கருவியாக டெலிகிராம் ஆப்ஸ் ஆபத்தானதாக மாறிவருவதாக ஆய்வின் முடிவுகள் குறிப்பிட்டுள்ளது. டார்க் வெப் கள்ளச்சந்தை இப்போது டெலிகிராம் மூலம் அணுகப்படுவது அதிர்ச்சியளிக்கிறது.

சைபர் கிரைம் குற்றவாளிகள் டெலிகிராம் பயன்படுத்துவது அதிகரித்துள்ளதா?

கடந்த சில ஆண்டுகளில் சைபர் கிரைம் குற்றவாளிகள் டெலிகிராம் ஆப்ஸை பயன்படுத்துவது 100 சதவீதம் அதிகரித்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. டார்க் வெப் பயன்படுத்துவதை விட சைபர் கிரைம் குற்றவாளிகளுக்கு டெலிகிராம் ஆப்ஸ் இன் என்கிரிப்டட் செய்யப்பட்ட தகவலைப் பயன்படுத்துவது சுலபமாக இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.வாட்ஸ்அப் பிரைவஸி குளறுபடி காரணமாக, டெலிகிராம் பயன்படுத்தும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஏராளமான டெலிகிராம் பயனர்கள் திரைப்படங்களைப் பதிவிறக்கம் செய்ய இந்த ஆப்ஸை பயன்படுத்துகிறார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்