Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 29 செப்டம்பர், 2021

அருள்மிகு நெல்லிக்காட்டு பகவதி திருக்கோயில், கூத்தாட்டுகுளம், எர்ணாகுளம்.

தினம் ஒரு திருத்தலம் : அபூர்வ மருந்து பிரசாதம்... மருத்துவத்திற்கான  தெய்வம்...!! - Seithipunal
அமைவிடம் :

கேரள மாநிலம் எர்ணாகுளம், கூத்தாட்டுகுளம் என்னும் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு நெல்லிக்காட்டு பகவதி திருக்கோயில். 

மாவட்டம் :

அருள்மிகு நெல்லிக்காட்டு பகவதி திருக்கோயில், கூத்தாட்டுகுளம், எர்ணாகுளம்.

எப்படி செல்வது?

எர்ணாகுளத்தில் இருந்து சுமார் 48 கி.மீ. தூரத்திலும், கோட்டயத்தில் இருந்து சுமார் 38 கி.மீ., தூரத்திலும் இக்கோயில் உள்ளது. கோட்டயம்-அங்கமாலி சாலையில் கூத்தாட்டுகுளம் ஜங்ஷனில் இருந்து ஒன்றரை கி.மீ தூரத்தில் இக்கோயிலை அடையலாம்.

கோயில் சிறப்பு : 

அம்மனுக்கு பூஜை செய்த பின்பே சிகிச்சை துவங்குகிறது. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், வாங்கிய மருந்தை அம்மன் முன் வைத்து பூஜை செய்த பின்பே கொண்டு செல்கின்றனர்.

இக்கோயில் வளாகத்தில், மருத்துவத்திற்கான தெய்வம் என வணங்கப்படும் தன்வந்திரி மூர்த்திக்கு தனிக்கோயில் உள்ளது.

சாதி, மத வித்தியாசம் இல்லாமல் அனைவரும் வந்து வணங்கும் இந்த கோயில், கேரள பாரம்பரிய முறைப்படி கட்டப்பட்டுள்ளது. பூஜைகள் மிக பக்தியுடைய நம்பூதிரிகளால் நடத்தப்படுகிறது.

இக்கோயிலில் மந்திரங்கள் ஓதி, பிரார்த்தனை நடத்தி, அம்மன் முன்னிலையில், பல்வேறு ஆயுர்வேத பாரம்பரிய மருந்து பொருட்கள் எல்லாம் கலந்து அபூர்வ மருந்து பிரசாதம் தயார் செய்யப்படுகிறது. பிரசாதம் வாங்கிச் செல்பவர்கள் வீட்டில் சுத்தமாக வைத்து, தினமும் அருந்த வேண்டும்.

கோயில் திருவிழா :

ஆடி, நவராத்திரி போன்ற விழாக்கள் கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் பங்குனி மாதம் அஸ்தம் நட்சத்திரத்தில் கொடியேற்றி, 12 நாட்கள் திருவிழா நடக்கிறது. 

வேண்டுதல் :

கண் ஒளி, ஆரோக்கியம் மற்றும் செல்வ வளம் பெருகவும், பாவ தோஷம், ஜாதக தோஷங்கள், பூர்வ ஜென்ம தோஷம் நீங்கவும் பக்தர்கள் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.

நேர்த்திக்கடன் :

பிரார்த்தனை நிறைவேறியதும் ஞாயிறுதோறும் நோய் தீர்க்கும் சிறப்பு பூஜை நடக்கிறது. 

கோயில் பிரசாதம் :

மருந்து பிரசாதமாக வழங்கப்படுவது இங்கு சிறப்பு. நவராத்திரி நாட்களில் தங்கம் கலந்த மருந்து பிரசாதமாக வழங்கப்படுவது சிறப்பு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக