Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 28 செப்டம்பர், 2021

ஆயுத பூஜை விடுமுறைக்கு கூடுதலாக 500 பேருந்துகள்!

 

 

 

சென்னையில் இருந்து பண்டிகையைக் கொண்டாட பலரும் ஊருக்கு செல்வார்கள் என்பதால் கூடுதல் பேருந்துகள் இயக்க பட உள்ளன.

கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்டு இருந்த ஊரடங்கில் இப்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அடுத்த மாதம் 14 ஆம் தேதி ஆயுத பூஜையை முன்னிட்டு 4 நாட்கள் வார இறுதி விடுமுறை வருவதால் அதிகளவில் சென்னையில் இருந்து மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வாய்ப்புள்ளது.

இந்நிலையில் சென்னையில் இருந்து சுமார் 500 பேருந்துகள் கூடுதலாக இயக்க பட உள்ளதாக அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் முன்பதிவு தளத்தையும் அறிவித்து அதில் அதிகளவில் முன்பதிவுகள் மேற்கொள்ளப்பட்டால் இன்னமும் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும் என அறிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக