நோக்கியா நிறுவனத்தின் ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி மாடல்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் சாதனங்கள் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிகளவு விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில் எச்எம்டி குளோபல் நிறுவனம் வரும் அக்டோபர் 6-ம் தேதி புதிய டேப்லெட் மாடலை அறிமுகம் செய்ய உள்ளது.
குறிப்பாக புதிய நோக்கியா டேப்லெட் மாடலுக்கான டீசர் நோக்கியா மொபைல் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நோக்கியா டி20 எனும் பெயரில் இந்த புதிய டேப்லெட் விற்பனைக்கு வரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல்
இந்த புதிய நோக்கியா டி20 மாடல் ஆனது மெல்லிய பிரேம், டார்க் பினிஷ்
கொண்டிருக்கும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய
டேப்லெட் மாடல் 10.36-இன்ச் டச் டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும் என்று
கூறப்படுகிறது. இதுதவிர 4ஜிபி ரேம், 64ஜிபி மெமரி உள்ளிட்ட பல்வேறு
சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது. அதேபோல் இந்த புதிய சாதனம் கருப்பு அல்லது
நீல
நிறத்தில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக
நோக்கியா டி20 மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது
அந்நிறுவனம். எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
இதற்குமுன்பு வெளியான தகவலின்படி நோக்கியா டி20 வைபை விலை ரூ.18,600 என்றும், வைபை மற்றும் செல்லுலார் விலை ரூ.20,300-இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய நோக்கியா டேப்லெட் மாடல் ஆனது ஸ்னாப்டிராகன் சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும். இது மீடியாடெக் சிப்செட் வசதியை விட சிறந்தது என்றுதான் கூறவேண்டும். அதாவது கேமிங் உட்பட பல்வேறு வசதிகளுக்கு இந்த ஸ்னாப்டிராகன் சிப்செட் மிகவும் அருமையாக பயன்படும். அதேபோல் மற்ற டேப் சாதனங்களை விட நோக்கியாவின் புதிய டேப் தனித்துவமான கேமரா அம்சங்களுடன் வெளிவரும் என எதிர்பார்க்கபபடுகிறது. குறிப்பாக நோக்கியா டி20 மாடல் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது எனறுதான் கூறவேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக