வாட்ஸ்அப்பில் இப்போது Self-chat அல்லது self-message வசதி வந்துள்ளது. இது பயனர்கள் விரைவாக குறிப்புகளை எடுத்துக்கொள்ளவும் முக்கியமான இணைய இணைப்புகளை சேவ் செய்து வைத்துக்கொள்ளவும் உதவும். ஃபேஸ்புக்கிற்கு சொந்தமான வாட்ஸ்அப் இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் மெசேஜிங் செயலிகளில் ஒன்றாகும். இது பல ஆண்டுகளாக புதிய அம்சங்கள், GIF கள், ஈமோஜிகள் மற்றும் பலவற்றோடு மேம்பட்டுள்ளது. இப்போது இவற்றுடன் Self-chat அல்லது self-message வசதியும் உள்ளது.
முதலில் நீங்கள் உங்கள் டெஸ்க்டாப் அல்லது தொலைபேசி ப்ரவுசரில் URL wa.me//-ஐ சர்ச் செய்ய வேண்டும். இந்தியாவில் உள்ள பயனர்கள் தொலைபேசி எண்ணுக்கு முன்னால் 91 ஐ சேர்க்க வேண்டும். இறுதி இணைப்பு wa.me//91XXXXXXXXXXX போல இருக்கும்.
நீங்கள் URL ஐ இயக்கியவுடன் புதிய வலைப்பக்கத்தைக் காண்பீர்கள். அங்கு “chat on whatsapp with 91XXXXXXXXXXX " என எழுதப்பட்டிருக்கும். “Continue to Chat"-ஐ கிளிக் செய்யவும்.
இப்போது நீங்கள் இரண்டு ஆப்ஷன்களில் ஒன்றைக் காண்பீர்கள். ஒன்று வாட்ஸ்அப் வலை இணைப்பைப் பதிவிறக்கச் சொல்லும், மற்றொன்று உங்கள் சாதனத்தைப் பொறுத்து வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு அல்லது வாட்ஸ்அப் டெஸ்க்டாப்பிற்கு உங்களை அழைத்துச் செல்லும். பதிவிறக்க பொத்தானுக்கு கீழே நீங்கள் வாட்ஸ்அப் வலையைத் தேர்ந்தெடுக்கலாம்.
Self Chat தொடங்கியவுடன் உங்கள் சேட் 'You' என்ற பெயருடன் தொடங்கும். நீங்கள் அதற்கேற்ப மறுபெயரிடலாம். இதன் பின்னர் நீங்கள் வாட்ஸ்அப்பின் இந்த அம்சத்தை எளிதாக அணுகலாம்.