
கிரெடிட் கார்டு என்பது வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை வாரி வழங்குகின்றது. ஆனால் அது அதனை சரியாக பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே. அதனை தவறாக பயன்படுத்தும்பட்சத்தில் அதுவே பலருக்கும் நெருக்கடியான நிலையை உருவாக்குகிறது.
ஆரம்பத்தில் நீங்கள் செய்யும் சிறு தவறு கூட, உங்களுக்கு பெரியளவிலான பாதிப்பினை கொடுக்கலாம். இது உங்களின் வருங்கால நிதி பரிவர்த்தனையை பாதிக்கலாம். மொத்தத்தில் இது உங்களது சிபில் எண்ணில் பாதிப்பினை ஏற்படுத்தலாம்.
ஆக பொதுவாக தவிர்க்க வேண்டிய 5 தவறுகளை தான் இந்த கட்டுரையில் நாம் பார்க்கவிருக்கிறோம்.
குறைந்த தொகையை திரும்ப செலுத்த வேண்டாம்
பல கிரெடிட் கார்டு பயனர்கள் செய்யும் தவறே குறைந்த அளவிலான தொகையை திரும்ப செலுத்துவது, அவர்களை நெருக்கடி நிலையில் இருந்து அவர்களை பாதுகாக்கும் என்று. நிதி பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க முடியும் என நினைக்கிறார்கள். ஆனால் அது மிக தவறான விஷயம்.
இது அவர்களின் கிரெடிட் ஸ்கோரினையும் பாதிக்கும். மேலும் செலுத்தப்படாத நிலுவை தொகைக்கு தொடர்ந்து கட்டணங்கள் செலுத்த வேண்டியிருக்கும்.
அதுவும் 23% - 52% கட்டண விகிதங்களை நீங்கள் எதிர்கொள்ளலாம். ஆக செலுத்த வேண்டிய தேதியில் சரியான தொகையை செலுத்தாவிடில் அது மேற்கொண்டு உங்களுக்கு பிரச்சனையாக மாறலாம்.
மாத தவணையாக மாற்றிக் கொள்ளுங்கள்
ஒரு வேளை பெரிய தொகையாக இருந்து நீங்கள் அதனை செலுத்த முடியாமல் இருந்தால், அதனை மாத தவணையாக மாற்றிக் கொள்ளுங்கள். ஏனெனில் நீங்கள் செலுத்த முடியாமல் தாமதமாக செலுத்தி அதிக கட்டணங்களை செலுத்துவதை விட, மாத தவணை முறையில் கட்டணங்கள் குறைவு தான்.
அவகாசம் கிடைக்கும்
ஆக முடிந்தளவு செலுத்தும் தவணையில் சரியாக செலுத்த பாருங்கள். அப்படியில்லாவிட்டால் மாத தவணையாக மாற்றிக் கொள்ளுங்கள். இது உங்களை அதிக கட்டணம் செலுத்துவதில் இருந்து உங்களை காக்கும். அதோடு இவ்வாறு EMI ஆக மாற்றிக் கொண்டால் உங்களுக்கு 3 மாதங்கள் முதல் 5 ஆண்டுகள் வரையில் இழபீட்டு காலம் வழங்கப்படுகிறது.
கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுத்தல் வேண்டாம்?
பலரும் தங்களது அவசர காலகட்டங்களில் செய்யும் மிகப்பெரிய தவறு கிரெடிட் கார்டில் பணம் எடுப்பது தான். இவ்வாறு எடுக்கும் பணத்திற்கு 3.5% வரையில் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
கூடுதலாக 52% வரையில் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இதற்காக நீங்கள் பணம் எடுக்கும் நாளில் இருந்து கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். ஆக சரியான நேரத்தில் உங்களால் திரும்ப செலுத்த முடியும் என்றால் மட்டுமே இந்த ஆப்சனை பயன்படுத்தலாம். மிக அவசர தேவை தவிர முடிந்தமட்டில் இதனை தவிர்ப்பது நல்லது.
கிரெடிட் லிமிட்டை தாண்டாதீர்கள்?
CUR என்பது நீங்கள் பயன்படுத்தும் கிரெடிட் கார்டு கடன் பயன்பாட்டு விகிதம். உதாரணத்திற்கு உங்களது கிரெட் கார்டு மதிப்பு 1 லட்சம் வரம்புடன் இருக்கிறது என வைத்துக் கொள்வோம். இதில் நீங்கள் 30% வரையில் மட்டுமே செலவு செய்ய வேண்டும். இதனை தாண்டி செலவு செய்யும்போது உங்களது கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படலாம்.
ரிவார்டு பாயிண்ட்ஸ்
கிரெடிட் கார்டு வழங்குனர் கிரெடிட் கார்டுகளுக்கு ரிவார்டு பாயிண்டுகளை தருவர்.
அதோடு கேஷ் பேக், தள்ளுபடிகள், கூப்பன்கள், தயாரிப்புகள் அல்லது சேவைகள் மூலம் நீங்கள் மீட்டெடுக்கலாம். எனினும் அதற்கு ஆசைபட்டு உங்கள் கடன் வரம்பை தாண்டாதீர்கள். அதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கார்டு மூலம் செய்யப்படும் பரிமாற்ற தொகை
ஒரு கிரெடிட் கார்டு மீதான கடன் தொகை மற்றும் பாக்கித் தொகையை இன்னொரு கிரெடிட் கார்டு மூலம் செலுத்திக் கொள்ளலாம். ஆனால் அதற்கென தனியாக கட்டணம் வசூலிக்கப்படும். இது நல்ல விஷயமாக பார்க்கப்பட்டாலும், இரு கார்டுகளையும் சரியான நேரத்தில் பயன்படுத்த முடியுமா? என பார்த்து வாங்குகள்.
ஆசையை கட்டுக்குள் வையுங்கள்
ஆக மொத்தத்தில் உங்களது கிரெடிட் கார்டு தொகையை சரியான நேரத்தில் செலுத்துவது மிக நல்லது. உங்களது ஆசையை கட்டுக்குள் வைக்க தெரிந்தவர் எனில் நீங்கள் நிச்சயம் கிரெடிட் கார்டு பயன்படுத்த தகுதியானவர் தான். அப்படியில்லை எனில் அதனை வாங்காமல் தவிர்க்கலாம். கிரெடிட் கார்டினை பொறுத்தவரையில் அவசர காலத்தில் அளவோடு மட்டுமே பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் பின்னர் சிக்கலில் மாட்டிக் கொள்ள வேண்டியிருக்கும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக