டிசிஎல்
நிறுவனம் என்று குறிப்பிட்டதும் நினைவுக்கு வருவது ஸ்மார்ட்டிவி தான்.
காரணம் டிசிஎல் நிறுவனம் குறைந்த விலையில் பல இன்ச் அளவுகளில்
ஸ்மார்ட்டிவிகளை குறைந்த விலை அறிமுகம் செய்து வருகிறது. டிசிஎல்
நிறுவனத்தின் புதிய டிசிஎல் எல்10 ப்ரோ ஸ்மார்ட்போன் பிரேசிலில் அறிமுகம்
செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது 128 ஜிபி உள்சேமிப்பு வசதியுடன்
4000 எம்ஏஎச் பேட்டரி அம்சத்தை கொண்டுள்ளது.டிசிஎல் இடைநிலை ஸ்மார்ட்போன்
சீன தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎல் இடைநிலை ஸ்மார்ட்போன்களின் போர்ட்ஃபோலியோக்களை விரிவுப்படுத்தும் விதமாக பிரேசிலில் டிசிஎல் எல் 10 ப்ரோ சாதனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சாதனத்தின் விலை இந்திய மதிப்புப்படி ரூ.18,300 ஆக இருக்கிறது. இதன் முக்கிய சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் ஆனது 6.22 இன்ச் டிஸ்ப்ளே அளவுடன், 13 எம்பி கேமரா உட்பட மூன்று கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது.
4000 எம்ஏஎச் பேட்டரி
இந்த ஸ்மார்ட்போனானது யூனிசோக் எஸ்சி 9863 ஏ சிப்செட் வசதியோடு, 4000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் ஆண்ட்ராய்டு 10 ஆதரவுடன் வருகிறது. மேலும் இது எச்டி ப்ளஸ் எல்சிடி டிஸ்ப்ளே வசதியோடு வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 5 மெகாபிக்சல் முன்புற கேமரா வசதியோடு வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது.
வாட்டர் டிராப் நாட்ச்
இந்த டிசிஎல் எல் 10 ப்ரோ ஸ்மார்ட்போனானது வாட்டர் டிராப் நாட்ச் வடிவமைப்போடு வருகிறது. இதன் பின்புறத்தில் பாதுகாப்பு அம்சத்துக்கு என கைரேகை ஸ்கேனர் வசதி இருக்கிறது. இதில் கேமரா செங்குத்து வடிவத்தில் பின்புறத்தில் பொருத்தப்பட்டிருக்கின்றன.
6.22 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே
டிசிஎல் எல் 10 ப்ரோ ஸ்மார்ட்போனானது 6.22 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது 720x1600 பிக்சல்கள் எல்சிடி டிஸ்ப்ளே வடிவமைப்போடு 19:9 என்ற விகிதத்துடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஒற்றை பிளாக் வண்ண விருப்பத்தில் வருகிறது. இதன் முன்புறத்தில் செல்பி வசதிக்கென 5 மெகாபிக்சல் கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. பின்புற கேமரா அம்சம் குறித்து பார்க்கையில், இது 13 மெகாபிக்சல் பிரைமரி ஷூட்டர், 5 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் லென்ஸ் என மூன்று பின்புற கேமரா வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது.
4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு
டிசிஎல் எல் 10 ப்ரோ யூனிசாக் எஸ்சி 9863 ஏ செயலி உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 10 மூலம் இயக்கப்படுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனானது 4000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவோடு வருகிறது. இதன் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு குறித்த தகவல் எதுவும் இல்லை. இதன் இணைப்பு ஆதரவுகள் குறித்து பார்க்கையில், இது வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ், ஹெட்போன் ஜேக் மற்றும் யூஎஸ்பி சார்ஜிங் போர்ட் ஆகிய ஆதரவுகளோடு வருகிறது. பாக்கெட் பிஞ்ச் தகவலை பொறுத்தவரை டிசிஎல் எல் 10 ப்ரோ ஆனது இந்திய மதிப்புப்படி தோராயமாக ரூ.18,300 என இருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகம் குறித்து எந்த தகவலும் இல்லை.
இரண்டு புதிய ஸ்மார்ட்போன்
TCL நிறுவனத்திற்குச் சொந்தமான அல்காடெல் பிராண்ட் இரண்டு புதிய ஸ்மார்ட்போன் சாதனங்களை ஜூன் மாதம் அறிமுகம் செய்தது. அல்காடெல் 1 (2021) மற்றும் அல்காடெல் 1 எல் ப்ரோ என்கிற இரண்டு புதிய ஸ்மார்ட்போன் மாடல்கள் மலிவு விலையில் அறிமுகம் செய்யப்பட்டன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக