Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 8 செப்டம்பர், 2021

நாலு ரூபாய் பேனா செய்த உதவி... சிந்திக்க வைக்கும் குட்டிக்கதை... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!

-----------------------------------------------
சிரிக்கலாம் வாங்க...!!
-----------------------------------------------
பாபு : என் வாழ்க்கை இனிமேல் பிரகாசம் தான்...
கோபு : எப்படி சொல்ற?
பாபு : பல்பு கம்பெனியில வேலை கிடைச்சிருக்கே.
கோபு : 😛😛
-----------------------------------------------
மகேஷ் : இன்று மழை வரும்னு செய்தியில சொன்னாங்க... நீங்க கேட்டீங்களா?
மாதேஷ் : இல்ல இல்ல... நான் கேக்கல... அவங்களாதான் சொன்னாங்க...
மகேஷ் : 😖😖
-----------------------------------------------
இது உண்மையா?
-----------------------------------------------
1. சரியான பெண்ணை திருமணம் செய்தால் தினமும் 'காதலர் தினம்"

2. அன்பான பெண்ணை திருமணம் செய்தால் தினமும் 'அன்னையர் தினம்"

3. தவறான பெண்ணை திருமணம் செய்தால் தினமும் 'தியாகிகள் தினம்"

4. சோம்பேறி பெண்ணை திருமணம் செய்தால் தினமும் 'உழைப்பாளர் தினம்"

5. பணக்கார பெண்ணை திருமணம் செய்தால் தினமும் 'புத்தாண்டு தினம்"

6. அதி புத்திசாலி பெண்ணை திருமணம் செய்தால் தினமும் 'முட்டாள் தினம்"

7. லூசுப் பெண்ணை திருமணம் செய்தால் தினமும் 'குழந்தைகள் தினம்"

8. கோபக்கார பெண்ணை திருமணம் செய்தால் தினமும் 'அடிமைகள் தினம்"

9. திருமணமே செய்யாமல் இருந்தால் தினமும் 'சுதந்திர தினம்"..

எண்கணிதம் எந்த வகையில் நம் வாழ்க்கையில் திருப்புமுனையாக இருக்கிறது?

உங்கள் பெயரின் விதி எண், வாழ்க்கை எண் எப்படி உங்கள் வாழ்க்கையை மாற்றும்?

போன்ற தகவல்களை எண்கணிதம் Pனுகு வாயிலாக எளிதாக அறிந்து கொள்ள முடியும்.
-----------------------------------------------
நாலு ரூபாய் பேனா...!!
-----------------------------------------------
✒ சார் கொஞ்சம் பேனா கொடுங்களேன். இந்த சலானை நிரப்பிவிட்டு தருகிறேன்... என்று கேட்டவரை நிமிர்ந்து பார்த்தார் சிதம்பரம்.

✒ பேங்குக்கு வர்றீங்க... கையில் ஒரு நாலு ரூபாய் பேனா கொண்டு வந்தால் என்ன? இது நாலு ரூபாய் பேனா என்றால் தந்து விடலாம். ஆனால் இந்த போனாவின் விலை நானூறு ரூபாய். இதையெல்லாம் மற்றவருக்கு இரவலாக எழுத கொடுக்க முடியாது. மன்னிக்க வேண்டும், இந்த பேனாவை தர முடியாது... உறுதியாக சொன்னார் சிதம்பரம்.

✒ பேனா கேட்டவர் கேலியாக சிரித்தார். சிதம்பரத்துக்கு எரிச்சல் கலந்த வியப்பு...

✒ ஏங்க இப்படி சிரிக்கிறீங்க?

✒ நானூறு ரூபாய்க்கு நீங்க பேனா வாங்கி வைத்திருந்து என்ன பலன்? நாலு ரூபாய் பேனா பிறருக்கு செய்யும் உதவியை இந்த நானூறு ரூபாய் பேனாவால் செய்ய முடியவில்லையே... என்று சொல்லிவிட்டு சென்றார் அவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக