இன்றைய கடி !!
---------------------------------
என்னதான் மிகப்பெரிய தேடுதல் தளம் நிறையா இருந்தாலும் கோவிலில் காணாமல் போன செருப்பை கண்டுபிடித்து தருமா?
குற்றாலத்தில் எந்த நியூஸ் சொன்னாலும் நம்ப மாட்டாங்க.. ஏன் தெரியுமா? அது எல்லாமே 'பால்ஸ் நியூஸ்"
தண்ணீரை 'தண்ணி"-னு சொல்லுவோம். பன்னீரை 'பன்னி"-னு சொல்லலாமா?..
தேள் கொட்டினா வலிக்கும்.. பாம்பு கொட்டினா வலிக்கும். முடி கொட்டினா வலிக்குமா?
இளநீர்லயும் தண்ணி இருக்கு, பூமிலயும் தண்ணி இருக்கு. அதுக்காக, இளநீர்ல போர் போடவும் முடியாது, பூமில ஸ்ட்ரா போட்டு உரியவும் முடியாது.
---------------------------------
செமியா? அப்படின்னா?
---------------------------------
ஏன் டாக்டர், ஒருத்தருக்கு பைத்தியம் குணமாயிடுச்சான்னு எப்படி கண்டுபிடிப்பீங்க? என்று கேட்டேன்.
சின்ன சின்ன டெஸ்ட் இருக்கு என்றார்.
ஃபார் எக்ஸாம்ப்பிள்?
ஒரு பக்கெட் நிறைய தண்ணி வச்சிட்டு பக்கத்துல ஒரு ஸ்பூன், ஒரு மக் ரெண்டும் வச்சிடுவோம். போய் அந்த பக்கெட் தண்ணியை காலி பண்ணுன்னு சொல்வோம்.
ஓ.. புரியுது. குணமாகாத ஆளா இருந்தா ஸ்பூன்ல தண்ணியை எடுத்து எடுத்து வெளில ஊத்தி காலி பண்ணிகிட்டு இருப்பான். சரியா?
எக்ஸாட்லி. உங்க கிட்ட சொன்னா நீங்க என்ன பண்ணுவீங்க?
நான் மக்குல எடுத்து மளமளன்னு காலி பண்ணுவேன்..
இது மாதிரி கேஸ்களை நாங்க செமின்னு சொல்வோம்..
என்ன டாக்டர் இப்படி சொல்லிட்டீங்க! அப்ப குணமானவன் என்ன பண்ணுவான்?
பக்கெட்டை எடுத்து கவுத்துட்டு போய்கிட்டே இருப்பான்
(உலகத்துல.. நிறையப் பேரு செமிதானாம்.) ???
வாழ்க்கைத் தத்துவங்கள்..!!
---------------------------------
🌟ஆசைக்கும் அன்புக்கும் அடிமையாகாதீர்கள்..
ஏனெனில் இரண்டுமே உங்களை அடிமையாக்கிவிடும்..!
🌟உன்னால் முடிந்தவரை உன் பணியினை இன்று நன்றாகச் செய்,
நாளை அதனினும் நன்றாகச் செய்யும் ஆற்றலை நீ பெறக் கூடும்..
🌟செய்யத் தெரிந்தவன் சாதிக்கிறான்..
செய்ய தெரியாதவன் போதிக்கிறான்..
---------------------------------
கொஞ்சம் டிரை பண்ணுங்க..!!
---------------------------------
😱திருவாரூர்ல தென் தெருவுல தெற்கு வடக்கு முக்குல இருக்கும் செக்கடி வக்குருடா நீ என்ன நெருடுகிறாய் நான் கரடு முரடு சரடு நெருடுகிறேன்.
😱அடடா பலநரி இருட்டுல கரடேறுதடா... அதுசரி அதிலொரு நரி செந்நரி.... செந்நெரி வாலிலே ஒரு பிடி நரை முடி.
ரிலாக்ஸ் ப்ளீஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக