
பெங்க;ரு குட்டஹள்ளி என்ற ஊரில் குன்றின் மேல் பிரளயகால வீரபத்திரர் திருக்கோயில் அமைந்துள்ளது. கோயிலை அடைய சீரான படிக்கட்டுகள் உள்ளன. சிறிய கோபுர வாசலின் உள்ளே நுழைந்ததும், பரந்த, திறந்த வெளி மண்டபமும் இங்கு அமைந்துள்ளது. இக்கோயில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில் ஆகும்.
மாவட்டம் :
அருள்மிகு பிரளயகால வீரபத்திர சுவாமி தேவஸ்தானம், கவிப்புரம் குட்டஹள்ளி, பெங்க;ரு, கர்நாடகா மாநிலம்.
எப்படி செல்வது?
தமிழ்நாட்டில் எல்லா ஊர்களிலிருந்து பெங்க;ருக்கு பேருந்து மற்றும் ரயில் வசதிகள் உள்ளன. பெங்க;ரு, மெஜஸ்டிக் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவில், குட்டஹள்ளி என்ற ஊரில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.
கோயில் சிறப்பு :
இங்கு மூலவரான வீரபத்திரர் வடக்கு நோக்கியுள்ளார். சிவனுக்குரிய மழு, நாகம், அம்பாளுக்குரிய சூலம், பாணம் மற்றும் திருமாலுக்குரிய சங்கு, சக்கரம் உட்பட 32 கைகளிலும் ஆயுதம் ஏந்தியுள்ளார். இவரது சன்னதி எதிரில் நந்தி இருக்கிறது. உற்சவரும் 32 கரங்களுடன் காட்சி தருகிறார்.
செவ்வாய்க்கிழமைகளில் வீரபத்திரருக்கு, ருத்ராபிஷேகம் செய்யப்படுகிறது. கார்த்திகை கடைசி செவ்வாயன்று, தேங்காய்த்துருவல் சாற்றி அலங்காரம் செய்யப்படுகிறது. வீரபத்திரர் இத்தலத்தில் உக்கிரமாக இருப்பதால், இவரை சாந்தப்படுத்தும் விதமாக இவ்வாறு செய்கின்றனர்.
வீரபத்திரருக்குரிய அலங்காரங்களில் ஒன்று, 'வெற்றிலைப்படல்" சாற்றுவது. வெற்றிலையை அடுக்கடுக்காகத் தைத்து மாலை போல சூட்டுவதுடன், பிரபையிலும் அடுக்கடுக்காக அமைப்பர். இதற்கு 'வெற்றிலைப்படல்" எனப் பெயர்.
சுவாமி சன்னதி வலப்புறமுள்ள குன்றில், வீரஆஞ்சநேயர் புடைப்புச் சிற்பமாக காட்சி தருகிறார். இவர் இங்கு வீரபத்திரை வழிபட்டு, அவரது தரிசனம் பெற்றதாக ஐதீகம்.
வீரபத்திரர் சன்னதிக்கு இடப்புறம், மடியில் பார்வதியுடன், உமாமகேஸ்வரர் காட்சி தருகிறார். நந்திதேவர், இவரது பாதத்தை பிடித்தபடியும், அருகில் விநாயகர், முருகன் வணங்கியபடியும் இருப்பதும் வித்தியாசமான அமைப்பாக இருக்கிறது.
இங்குள்ள நவகிரக சன்னதியில் சூரியன், ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் அழகாக காட்சி தருகிறார்.
கோயில் திருவிழா :
ஆவணி திங்கள், ரதசப்தமி போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
வேண்டுதல் :
புத்திர தோஷம், நாகதோஷம் உள்ளவர்கள் இங்கு வீரபத்திரரிடம் வேண்டிக்கொள்ள நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை.
நேர்த்திக்கடன் :
பிரார்த்தனை நிறைவேறியவர்கள் வீரபத்திரருக்கு துளசி, வில்வம், நாகலிங்க பூ மற்றும் எலுமிச்சை மாலை அணிவித்து, போளி நைவேத்தியம் படைத்து வழிபடுகிறார்கள்.
அருள்தரும் ஆலயங்கள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக