Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 8 செப்டம்பர், 2021

பிட்காயினை அதிகாரப்பூர்வமாக அறிவித்த முதல் நாடு- அமோக வளர்ச்சி: எப்படி வாங்குவது?

 பல கட்டம் முன்னேற்றம்

எல் சால்வடாரில் அரசின் அங்கீகரிக்கப்பட்ட நாணயமாக பிட்காயின் அறிவிக்கப்பட்டிருக்கிறது. எல் சால்வடாரில் அமெரிக்க டாலர் புழக்கத்தில் இருக்கிறது. எல் சால்வடாரில் 400 பிட்காயின்கள் வாங்கி புழக்கத்தில் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 20 மில்லியன் டாலர் ஆகும். இதன் அடிப்படையில் தற்போது 200 பிட்காயின்கள் வாங்கப்பட்டுள்ளது. பிட்காயின் வாங்கிக் கொள்ளலாம் அதேபோல் பிட்காயினை அமெரிக்க டாலர் ஆக மாற்றிக் கொள்ளலாம்.

பல கட்டம் முன்னேற்றம்

பிட்காயின் தொடங்கப்பட்டு 12 வருட வரலாற்றில் பல கட்டம் முன்னேற்றம் அடைந்திருக்கிறது. எல் சால்வடார் சட்டப்பூர்வ டெண்டராக பிட்காயினை ஏற்றுக்கொண்ட முதல் நாடு ஆகும். இதுகுறித்து ஜனாதிபதி நயீப் புகலே டுவிட்டரில் அறிவித்துள்ளார். இது சோதனை கட்டமாகவே இருக்கிறது, இந்த சோதனை வெற்றி பெற்றால் பிற நாடுகளும் எல் சால்வடாரை போன்றே பிட்காயினை ஏற்றுக் கொள்ளலாம்.

பிட்காயின் மூலம் வரி கட்டலாம்

வணிக பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு பிட்காயின் ஏற்றுக் கொள்ள வேண்டும், அதேபோல் வரி செலுத்துதலுக்கு அரசாங்கம் அதை ஏற்றுக் கொள்ளும். இந்த திட்டமானது அந்நாட்டு ஜனாதிபதி சிந்தனை என கூறப்படுகிறது.

துணிச்சலான புதிய உலக விஷயங்கள்

மேலும் இந்த நடவடிக்கையானது துணிச்சலான புதிய உலக விஷயங்கள் என மியாமியை தளமாகக் கொண்ட பிளாக் செயின்.காம் ஆராய்ச்சி தலைவர் கேரிக் ஹைல்மேன் குறிப்பிட்டார். சோதனை கட்டம் நடத்தப்படுதவையடுத்து மகிழ்ச்சியடைகிறோம் எனவும் இதன்மூலம் நிறைய கற்றுக் கொள்ளலாம் எனவும் நினைப்பதாக கூறினார்.

இணையம் சார்ந்த பண பரிவர்த்தனை

இணையம் சார்ந்த பண பரிவர்த்தனையான கிரிப்டோகரன்சி வகையை சேர்ந்தது பிட்காயின். வங்கி சார்ந்த பரிவர்த்தனைகளுக்கு எதிராக இருப்பவை இந்த பரிவர்த்தனை. இந்தியாவில் பல இடங்களில் பிட்காயின் பெயர் எதிரொலிப்பது வழக்கம். காரணம் பிட்காயின் மதிப்பு குறுகிய காலத்தில் அதிகளவு அதிகரித்து வருகிறது.

உலகளாவிய பணம் செலுத்தும் முறை

உலகளாவிய பணம் செலுத்தும் முறைமையாக பிட்காயின் இருக்கிறது. உலகளவில் பல வணிக வளாகங்கள் மற்றும் இடங்களில் பிட்காயின்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. பிட்காயின்களை விரும்பிய நாட்டில் பணமாக மாற்றலாம். பிட்காயின் பாதுகாப்பு வழிமுறைகள் அனைத்தும் பிளாக்செயின் முறையில் பாதுகாக்கப்படுகிறது.

பிளாக்செயின் தொழில்நுட்பம்

வங்கிகளுக்கும் பயனர்களுக்கும் இல்லாமல் இரண்டு நபர்களுக்கு இடையிலோ அல்லது இரண்டு கணக்குகளுக்கோ இடையிலோ இந்த பரிவர்த்தனை நடக்கிறது. இது மிகவும் எளிதான பரிவர்த்தனையாக இருக்கிறது. மேலும் இதை தினசரி 24 மணிநேரம் என்ற வீதம் 365 நாட்களுக்கு பரிவர்த்தனை செய்யலாம்.பிட்காயினுக்கு பயன்படுத்தப்படும் பிளாக்செயின் தொழில்நுட்பம் மிக பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. பிட்காயின்கள் பரிவர்த்தனை நோக்கமாக முன்னெடுக்கப்பட்டாலும் பலர் முதலீடுகளாகவே பார்க்கின்றனர். அதேபோல் பிட்காயின்களானது சாடோஷி நாகமோட்டோ என்று தங்களை கூறிகொள்பவர்களால் உருவாக்கப்பட்டது. அவர்கள் தகவல் முறையாக தெரியவில்லை என கூறப்படுகிறது.

பிட்காயின் மதிப்பு தொடர்ந்து உயரும்

பிட்காயின்களானது கடந்த 2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 2010 ஆம் ஆண்டு அதன் மதிப்பு 0.0003 டாலராகத்தான் இருந்தது. ஆனால் தற்போது பிட்காயின் மதிப்பு பல ஆயிரம் டாலர்களாக இருக்கிறது. சில பொருளாதார வல்லுனர்கள் பிட்காயின் மதிப்பு தொடர்ந்து உயரும் என்று கூறினாலும் சிலர் பிட்காயின் மதிப்பு நிலையற்றது சரிவை காணும் என எச்சரிக்கை விடுக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக