Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 22 செப்டம்பர், 2021

ஒரு நாளைக்கு எத்தனை டீ குடிப்பீங்க? இதில் நீங்கள் யார்?.... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

-------------------------------
கொஞ்சம் சிரிங்க பாஸ்...!!
-------------------------------

நோயாளி : ஊசிபோட்ட பிறகு எதுக்கு டாக்டர் ஸ்கேன் பண்ணனும்னு சொல்றீங்க?
டாக்டர் : இல்ல... உள்ள போன ஊசி இப்ப எங்க இருக்குன்னு பாக்க ஆசையா இருக்கு.....
நோயாளி : 😩😩 
-------------------------------
ஒருவர் : உன்னைப் பார்த்தால் பிச்சைக்காரன் மாதிரி தெரியலையே.
பிச்சைக்காரன் : நான் உங்களை தர்ம மகாராஜான்னு சொன்னேன், நீங்க மட்டும் மகாராஜா மாதிரியா இருக்கீங்க.
ஒருவர் : 😖😖 
-------------------------------
இவர்கள் இப்படித்தான்...!!
-------------------------------
🍷 டீ குடிக்கிற பழக்கமே இல்லை-ன்னு சொல்றவன் : கஞ்சன்.

🍷 ஒரு நாளைக்கு இரண்டு டீ தான்-னு சொல்றவன் : சுயநலவாதி. 

🍷 ஒரு நாளைக்கு நாலு டீ குடிப்பவன் : படிப்பாளி. 

🍷 ஒரு நாளைக்கு எட்டு டீ குடிப்பவன் : அறிவாளி. 

🍷 ஒரு நாளைக்கு 12 டீ குடிப்பவன் : அரசியல்வாதி.

🍷 யாராவது டீ வாங்கி கொடுத்தால் மட்டும் குடிப்பவன் : குடிகாரன். 

🍷 ஒரு நாளைக்கு 15 டீ வரைக்கும் குடிப்பவன் : உழைப்பாளி. 

🍷 ஒரு நாளைக்கு 15 டீ-க்கு மேல் குடிப்பவன் : வேலையில்லாதவன். 

🍷 டீ அவ்வளவா குடிப்பது இல்லை-னு சொன்னா : வேற ஏதாவது வாங்கி தா-னு அர்த்தம். 

🍷 இப்ப தான் நான் டீ குடிச்சேன்-னு சொன்னா : காசு நான் கொடுக்க மாட்டேன்-னு அர்த்தம்.

🍷 உனக்கு வேணும்னா டீ சொல்லு-ன்னா : என்கிட்ட காசு இல்லை-னு அர்த்தம்....

-------------------------------
கண்டுபிடி கண்ணே!!
-------------------------------
1. ஒரு கூடையில் ஆறு ஆரஞ்சுப் பழங்கள் இருந்தன. ஆறு பேர்கள் அவற்றில் ஆளுக்கு ஒன்றை எடுத்துக் கொண்டனர். கூடையில் ஒரு பழம் இன்னும் இருக்கு. அது எப்படி?

2. ஒரு பெண்மணிக்கு இரண்டு குழந்தைகள் ஒரே வருடத்தில் ஒரே நாளில் ஒரே நேரத்தில் பிறந்தன. ஆனால், அவர்கள் இரட்டையர் அல்ல. இது எப்படி?

விடை :

1. கடைசியில் பழத்தை எடுத்தவர் கூடையுடன் எடுத்துக் கொண்டார்.

2. அந்தப் பெண்மணிக்கு ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்தன. அந்த மூன்றில் இரண்டு குழந்தைகளே அவை! இப்படி மாற்றி யோசித்துப் பார்த்தால் ஒரு பிரச்சனைக்கு வித விதமான கோணங்களில் தீர்வைக் காண முடியும். சரியான சிறந்த தீர்வைக் காண்பது இந்த முறையில் மிகவும் சுலபம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக