Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 28 செப்டம்பர், 2021

சீனா இடத்தை பிடிக்க இந்தியா திட்டம்.. தைவான் உடன் கூட்டணி..!

 7.5 பில்லியன் டாலர் தொழிற்சாலை

உலக நாடுகளில் உற்பத்தித் துறைக்குத் தற்போது மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது சிப் தட்டுப்பாடு தான், சந்தையில் தேவை அதிகமாக இருக்கும் நிலையில் உற்பத்தி மிகவும் குறைவாக இருக்கும் காரணத்தால் இந்தத் தட்டுப்பாடு உருவாகி உள்ளது.

சிப் தயாரிப்பில் சில நாடுகள் மட்டுமே முன்னோடியாக இருக்கிறது, இதில் சீனாவும் ஒன்று, இந்நிலையில் சீனாவின் ஆதிக்கத்தைக் குறைக்க வேண்டும் என்பதற்காக இத்துறையில் முன்னோடியாக இருக்கும் மற்றொரு நாடான தைவான் உடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

சிப் உற்பத்தி

சிப் உற்பத்திக்கு இனி தென் ஆசிய நாடுகள் தான் என்ற வகையில் உற்பத்தி சந்தையை உருவாக்க வேண்டும் என்பதற்காக, சிப் உற்பத்தியை மேம்படுத்த இந்தியா - தைவான் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இது மட்டும் அல்லாமல் இந்தப் பேச்சுவார்த்தையில் செமிகண்டக்டர் உற்பத்தி செய்யும் இயந்திரங்கள் மற்றும் அதன் பாகங்களுக்கான விலை குறைப்பு பற்றியும் பேசப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சீனா வர்த்தகம்

ஏற்கனவே சீனாவில் இருந்து பல வர்த்தகம் இந்தியா மற்றும் இதர தென் ஆசிய நாடுகளுக்கு வந்துள்ள நிலையில், செமிகண்டக்டர் உற்பத்தி துறையிலும் இந்தியா ஆதிக்கம் செலுத்த திட்டமிட்டுள்ளது, இந்தியா - சீனா இடையேயான வர்த்தகத்தில் புதிய டென்ஷன்-ஐ உருவாக்கியுள்ளது.

இந்தியா - தைவான்

இந்தியாவில் செமிகண்டக்டர் உற்பத்தியை துவங்குவதற்காக இந்தியா - தைவான் நாட்டின் அரசு அதிகாரிகள் கடந்த சில வாரங்களாகப் பேச்சுவார்த்தை துவங்கியுள்ள நிலையில், இந்தப் பேச்சுவார்த்தை 2021ஆம் ஆண்டின் இறுதிக்குள் முடிவுகளை எடுக்கப்படும்.

7.5 பில்லியன் டாலர் தொழிற்சாலை

இரு நாடுகள் மத்தியிலான ஒப்பந்தம் வெற்றிப்பெற்றால் இந்தியாவில் சுமார் 7.5 பில்லியன் டாலர் மதிப்பிலான செமிகண்டக்டர் உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்படும். இந்தத் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் செமிகண்டக்டர் சிப் மூலம் 5ஜி டெலிகாம் கருவிகள் மூலம் எலக்ட்ரிக் கார்கள் வரையிலான அனைத்து தேவைகளுக்குமான சிப் தயாரிப்பை செய்ய முடியும்.

செமிகண்டக்டர் சிப் தயாரிப்பு

செமிகண்டக்டர் சிப் தயாரிப்புக்காக இந்தியா - தைவான் இடையேயான பேச்சுவார்த்தை முக்கியக் கட்டத்தை அடைந்துள்ள காரணத்தால், இந்தியா தற்போது இந்த 7.5 பில்லியன் டாலர் மதிப்பிலான தொழிற்சாலை அமைக்க இடத்தைத் தேடி வருகிறது.

50 சதவீத நிதியுதவி

இந்தச் செமிகண்டக்டர் உற்பத்தி தொழிற்சாலை அமைக்க இடம் மட்டும் இல்லாமல் தண்ணீர், இத்துறை சார்ந்த திறன்வாய்ந்த ஊழியர்கள் என அனைத்தும் தேவை. இத்தொழிற்சாலைக்கான 50 சதவீத நிதியுதவியை அரசு அளிப்பது மட்டும் அல்லாமல் வரிச் சலுகை மற்றும் இதர சலுகைகளையும் அளிக்க உள்ளது.

தைவான் ஆர்வம்

தைவான் இத்திட்டத்தில் மிகவும் தீவரமாக இருக்கும் காரணத்தால் இரு நாடுகள் மத்தியில் ஒப்பந்தத்தை விரைவாக முடிக்கத் திட்டமிட்டு வருகிறது. இதேபோல் செமிகண்டக்டர் உற்பத்தி தொழிற்சாலைக்குத் தேவையான உற்பத்தி பொருட்களைத் தைவான் நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் காரணத்தால் இதற்கு வரி சலுகையும் எதிர்பார்க்கிறது.

சீனாவுக்குத் தலைவலி

இவை அனைத்தையும் தாண்டி இந்தியா, தைவான் ஆகிய இரு நாடுகளும் சீனாவிற்கு எதிராகத் தனது ராணுவத்தை வலிமைப்படுத்தி வருவது மட்டும் அல்லாமல் எல்லை பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறது. இரு நாடுகளின் கூட்டணி தற்போது சீனாவிற்குத் தலைவலியாக மாறியுள்ளது.

டாடா குழுமம்

மேலும் இந்தியாவில் செமிகண்டக்டர் சிப் தயாரிக்க டாடா குழுமம் ஆர்வமாக உள்ளது, விரைவில் இந்தியாவில் செமிகண்டக்டர் தொழிற்சாலை அமைக்க உள்ளதாக டாடா குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக