இந்திய ரீடைல் சந்தையில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் முக்கியமான நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் ரீடைல் தற்போது உணவு மற்றும் குளிர்பான பிரிவில் புதிய பிராண்டுகளை உருவாக்கி சொந்தமாகப் பொருட்களைத் தயாரித்து இந்தியா முழுக்க வர்த்தகம் செய்ய வேண்டும் என முக்கியமான திட்டத்தைத் தீட்டியுள்ளது.
இதற்காகப் புதிய டீம்-ஐ ஏற்கனவே களத்தில் இறக்கியுள்ள நிலையில் இப்பிரிவுக்குத் தலைவராகக் கோகோ கோலா நிறுவனத்தின் முன்னாள் அதிகாரியை வளைத்துப்போட்டு உள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.
ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் கீழ் பல பிராண்டுகள் உள்ளது, இந்தப் பொருட்கள் அனைத்து ரிலையன்ஸ் ரீடைல் கடைகள் மற்றும் ஜியோ மார்ட் தளத்தில் மட்டுமே விற்பனை செய்து வருகிறது. இதனைப் பொதுச் சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வர வேண்டும் எனத் திட்டமிட்டு சில வாரங்களுக்கு முன்பு சானிடைசர், சோப் ஆகியவை ஹெல்த்கேர் பிரிவில் புதிய பிராண்டை அறிமுகம் செய்து விற்பனைக்குக் கொண்டு வந்தது.
Food And Beverage பிரிவுஇதேபோல் அடுத்தது அனைத்து பிரிவுகளிலும் தனது சொந்த பிராண்டை விற்பனை சந்தைக்குக் கொண்டு வர முடிவு செய்துள்ளது. இத்திட்டத்தின் அடுத்த கட்டமாக இந்தியாவிலேயே வேகமாக வளரும் பிரிவான Food And Beverage பிரிவில் தனது கவனத்தைத் திருப்பியுள்ளது ரிலையன்ஸ் ரீடைல்.
நெஸ்லே மேகி, பெப்சி, கோகோ கோலாரிலையன்ஸ் ரீடைல் பிரிவின் கீழ் ஏற்கனவே ஸ்நாக் டேக் நூடில்ஸ் மற்றும் யா! கோலா ஆகிய இரு பிராண்டுகள் மூலம் நெஸ்லே மேகி, பெப்சி, கோகோ கோலா ஆகிய பிராண்டுகள் உடன் போட்டிப்போட்டு வரும் நிலையில், இப்பிரிவு வர்த்தகத்தை மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய ரிலையன்ஸ் சக போட்டி நிறுவனத்தில் இருந்து ஊழியர்களை நியமித்துள்ளது.
கோகோ கோலா நிறுவனத்தில் சமீபத்தில் மறுசீரமைப்பு நடவடிக்கை எடுக்கும் போது பல முக்கியமான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில் கோகோ கோலா இந்தியா நிறுவனத்தின் முன்னாள் சேர்மன் டி.கிருஷ்ணகுமார் மற்றும் 4 முதல் 5 கோகோ கோலா நிறுவன அதிகாரிகளை ரிலையன்ஸ் ரீடைல் தனது Food And Beverage பிரிவில் நியமித்துள்ளது.
கோகோ கோலா டி.கிருஷ்ணகுமார்இதில் டி.கிருஷ்ணகுமார் சுமார் 17 வருடமாகக் கோகோ கோலா இந்தியா நிறுவனத்தில் பணியாற்றினார், கடந்த செப்டம்பர் மாதம் இந்நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட டி.கிருஷ்ணகுமார் மார்ச் மாதம் தனது பதவியில் இருந்து விலகினார். தற்போது டி.கிருஷ்ணகுமார் ரிலையன்ஸ் குழுமத்தில் இணைந்துள்ளது இந்நிறுவனத்திற்கு வலிமை சேர்க்கும்.
HCCB கைப்பற்றல்மேலும் இப்புதிய டீம் கோகோ கோலா-வின் பாட்டில் தயாரிப்பு கூட்டணி நிறுவனமான ஹிந்துஸ்தான் கோகோ கோலா குளிர்பான நிறுவனத்தை ரிலையன்ஸ் ரீடைல் கைப்பற்றப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதேபோல் ரிலையன்ஸ் ரீடைல்-ன் அமெரிக்க உணவக பிராண்டான subway கைப்பற்றும் திட்டத்தில் டி.கிருஷ்ணகுமார் முக்கியப் பங்கு வகிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
McDonalds, KFC, டாமினோஸ், பீட்சா ஹட் ஆகிய நிறுவனங்களுக்குப் போட்டியாக subway நிறுவனத்தை நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய வேண்டும் என ரிலையன்ஸ் திட்டமிட்டு இந்நிறுவனத்தைக் கைப்பற்ற உள்ளது.
இதோடு டாடா-வுக்குப் போட்டியாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது அனைத்து டிஜிட்டல் சேவைகளையும் ஓரே தளத்தில் இணைக்கும் சூப்பர் ஆப்-ஐ அறிமுகம் செய்யவும் திட்டமிட்டுள்ளது. இந்தச் சூப்பர் ஆப்-ல் சமீபமாகக் கைப்பற்றப்பட்ட ஜஸ்ட் டயல் முதல் ஜியோ டிவி-வரை அனைத்தும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக