------------------------------------------------------
இது சிரிப்பதற்கான நேரம்...!!
------------------------------------------------------
பாபு : என்னங்க இது இவரு பாஸ்போர்ட வாங்க கோவணத்தோடு வந்திருக்காரு?
கோபு : ஆவணத்துடன் வரவும் என்பதை தப்பா புரிஞ்சிக்கிட்டாரு..
பாபு : 😛😛
------------------------------------------------------
தொண்டன் 1 : தலைவர் ஓவரா தண்ணி அடிச்சுட்டு ஆக்டோபஸ் ஜோசியம் பார்க்கப் போனது தப்பாப் போச்சா... ஏன்?
தொண்டன் 2 : ஆக்டோபஸ்னு சொல்லிட்டு, ஒரு நண்டை வச்சு தலைவருக்கு ஜோசியம் சொல்லிட்டாங்களாம்.
தொண்டன் 1 : 😉😉
------------------------------------------------------
சிறந்த வரிகள்...!!
------------------------------------------------------
கடினமாக உழைக்காமல் கூட ஒருவன் உயர்ந்திருக்கலாம். ஆனால் கடினமாக உழைத்தவன் ஒரு நாளும் தாழ்ந்தது இல்லை.
உழைப்பை நம்பி செய்யும் எந்த செயலும் ஒருபோதும் தோற்பதில்லை.
குறிக்கோளை முடிவு செய்யுங்கள். திட்டத்தை உருவாக்குங்கள். உங்கள் முழு உழைப்பையும் கொடுங்கள். வெற்றியை பெறுங்கள். புன்னகையோடு அமைதியாக இருங்கள்.
காலம் எல்லாவற்றையும் மாற்றும் என்பது உண்மையோ பொய்யோ தெரியாது. நம் முயற்சி எல்லாவற்றையும் மாற்றும் என்பது மட்டும் நூறு சதவீதம் உண்மை.
உங்களது கடை, அலுவலகம், டெக்ஸ்டைல்ஸ், ஜுவல்லரி, மில்ஸ், நிறுவனம் எதுவாயினும் உடனடியாக ஆட்களை தேர்வு செய்ய உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு.
10 லட்சத்திற்கும் அதிகமான பயனாளர்களுக்கு உங்கள் நிறுவனத்தின் வேலைவாய்ப்பு தகவல்கள் தமிழகம் முழுவதும் சென்றடையும்.
------------------------------------------------------இருவழிச்சொற்கள்...!!
------------------------------------------------------
↔ மாறுமோ
↔ மாடமா
↔ மாதமா
↔ மானமா
↔ மாயமா
------------------------------------------------------
நாவல் பழத்தின் நன்மைகள்...!!
------------------------------------------------------
🍇நாவல் பழத்தின் இலைகள் மற்றும் மரப்பட்டைகள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைக்கும். அதற்கு அவற்றை நீரில் போட்டு கொதிக்க விட்டு, அந்நீரை பருக வேண்டும்.
🍇சிறுநீரக கற்களால் கஷ்டப்படுபவர்கள், நாவல் பழத்தினை சாப்பிடுவதுடன், அதன் விதையை உலர வைத்து பொடி செய்து, தயிருடன் சேர்த்து சாப்பிட்டால் கற்களானது கரைந்துவிடும்.
🍇நாவல் பழங்களை சாப்பிட்டு வந்தால் அவை சருமத்தில் ஏற்படும் வெண் புள்ளி நோய்களுக்கு சிறந்த நிவாரணம் அளிக்கும். எப்படியெனில் நாவல் பழங்களானது மெலனினை செல்களாக செய்யத் தூண்டுகிறது.
🍇 அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்கள், நாவல் பழத்தில் ப்ளாக் சால்ட் மற்றும் சீரகப் பொடி சேர்த்து சாப்பிடுவது நல்லது. பழத்தினை அளவாக சாப்பிட்டு வந்தால், இவை தமனிகளில் ஏற்படும் பிரச்சனைகளை குறைத்து, மாரடைப்பு வருவதைக் குறைக்கும்
ரிலாக்ஸ் ப்ளீஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக