Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 2 செப்டம்பர், 2021

சோமேட்டோவுக்கு சவால் விட தயாராகும் ஸ்விக்கி.. டன்சோவுடன் பேச்சு வார்த்தையா.. எதற்காக..!

பிக் – அப் டிராப் சேவை

ஆண்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி, தனது சேவையினை விரிவாக்கம் செய்ய மற்றொரு டெலிவரி சேவை செய்து வரும், ஸ்டார்டப் நிறுவனமான டன்சோவினை கையடுத்த பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்த பேச்சு வார்த்தை தற்போது ஆரம்ப கட்டத்தில் உள்ளதாகவும் தெரிகிறது.

ஸ்விக்கி நிறுவனம் அதன் போட்டியாளரான சோமேட்டோவுடன் போட்டியிடுவதற்காக, இந்த விரிவாக்கத்தினை செய்யவுள்ளதாக தெரிகின்றது.

டன்சோவுடன் பேச்சு வார்த்தையா?

ஸ்விக்கி நிறுவனம் ஏற்கனவே தனது சேவையினை விரிவாக்கம் செய்யும் பொருட்டு, உணவு டெலிவரியுடன் சேர்த்து, மளிகை டெலிவரி சேவையும் செய்து வருகின்றது. இதனை இன்னும் விரிவாக்கம் செய்ய இந்த நிறுவனம் மற்றொரு டெலிவரி நிறுவனமான, டன்சோவினையும் கையகப்படுத்த பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவகல்கள் வெளியாகியுள்ளன.

சோமேட்டோ நிறுவனம்

தீபீந்தர் கோயல் தலைமையிலான சோமேட்டோ நிறுவனம், சமீபத்தியில் தான் பங்கு சந்தையில் தனது பங்கு வெளியீட்டினை செய்தது. இதன் மூலம் திரட்டப்பட்ட நிதியினை நிறுவனத்தின் விரிவாக்கத்திற்காக பயன்படுத்த திட்டமிட்டிருந்ததாக கூறியிருந்தது. இதற்கிடையில் தான் ஸ்விக்கி வணிகத்தினை விரிவாக்கம் செய்யும் விதமாக நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிதி திரட்டிய ஸ்விக்கி

எனினும் இது குறித்து ஸ்விக்கி நிறுவனம் அதிகாரபூர்வமாக எதுவும் அறிவிக்கவில்லை. ஸ்விக்கி நிறுவனம் சமீபத்தில் சாப்ட் பேங்க் விஷன் ஃபண்ட் மற்றும் ப்ரோசஸ் தலைமையிலான நிறுவனம் சேர்ந்து, 1.25 பில்லியன் டாலர் நிதியினை திரட்டியது. இந்த நிதி திரட்டலில் கத்தார் இன்வெஸ்ட்மெண்ட் அத்தாரிட்டி, ஃபால்கன் எட்ஜ் கேபிடல், அமன்சா கேப்பிடல், கோல்டுமேன் சாக்ஸ், திங்க் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் மற்றும் கார்மினாக் உள்ளிட்ட சில நிறுவனங்களும் அடங்கும்.

பிக் – அப் டிராப் சேவை

ஸ்விக்கி நிறுவனம் உணவு டெலிவரி விநியோகத்தை தவிர, இன்ஸ்டாமார்ட் மூலமாக உடனடி மளிகை விநியோக சேவையையும் வழங்கி வருகின்றது. இது தவிர ஸ்விக்கி நிறுவனம் பிக் - அப் டிராப் சேவையினை 65 நகரங்களில் செய்து வருகின்றது.

போட்டியை எதிர்கொள்ள திட்டம்

நாட்டில் தற்போது பல துறைகளிலும் டிஜிட்டல் சேவையானது மேம்பட்டு வரும் நிலையில், குறிப்பாக உணவு டெலிவரி, சில்லறை பொருட்கள் டெலிவரி உள்ளிட்ட பல துறைகளிலும் நல்ல வளர்ச்சியினை கண்டு வருகின்றன. பல நிறுவனங்களும் விரிவாக்கம் செய்து வருகின்றன. அந்த வகையில் தற்போது ஸ்விக்கி நிறுவனமும் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டிருக்கலாம். குறிப்பாக அதன் போட்டி நிறுவனமான சோமேட்டோவினை எதிர்கொள்ள தயாராகி வருகின்றது எனலாம்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக