
அமைவிடம் :
பாலாற்றின் தென்கரையில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது இந்த திருக்கோயில். தென் தமிழகத்தில், திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கத்தில் உள்ள பள்ளிகொண்ட ரங்கநாதர் பெருமாளை போல, வடதமிழகத்தில் வேலூர் பள்ளிகொண்ட ரங்கநாதர் பெருமாள் கோயில் கருதப்படுகின்றது.
பெருமாள் பூலோகத்தில் விரும்பி வந்து பள்ளிகொண்ட இடம் என்பதால், இவ்வூர் 'பள்ளிகொண்டான்" எனப்பட்டது. பெருமாள் 'உத்தர ரங்கநாதர்" எனப்படுகிறார்.
மாவட்டம் :
அருள்மிகு பள்ளிகொண்ட பெருமாள் திருக்கோயில், பள்ளிகொண்டான், வேலூர் மாவட்டம்.
எப்படி செல்வது?
இத்தலம் வேலூர்-ஆம்பூர் பாதையில், சென்னை - பெங்க;ர் நெடுஞ்சாலையில், திருப்பத்தூர் பாதையில், 23 கிலோமீட்டர் பிரியும் குடியாத்தம் பாதையில், ஒரு கிலோமீட்டர் பயணித்தால் வலப்புறம் அமைந்துள்ளது. இந்த தலம் குடியாத்தம் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
கோயில் சிறப்பு :
இத்தலத்தில் நிறைய திருமணங்கள் நடக்கின்றன. இங்கு திருமணம் செய்து கொண்டால், தம்பதியர் மனமொத்து வாழ்வர் என்பது நம்பிக்கை.
அந்நியர் படையெடுப்பின் போது, இங்குள்ள ரங்கநாதர் மறைக்கப்பட்டு, சிறிய ரங்கநாதர் சிலை செய்து, கோயில் பாதுகாக்கப்பட்டது. இன்றும்கூட சிறிய ரங்கநாதருக்கும் பூஜைகள் செய்யப்படுகிறது. இவர் 'சோட்டா ரங்கநாதர்" எனப்படுகிறார்.இத்தலத்தில் ஒருநாள் இரவு தங்கி பெருமாளை வழிபட்டால் மோட்சம் கிடைக்கும் என பிரம்மாண்ட புராணம் கூறுகிறது.இத்தலத்தில் உள்ள மூலவரின் திருமேனி சாளக்கிராமத்தால் ஆனது.
வைகுண்டத்தில் பெருமாளுக்கு உதவியாக இருந்த ஆதிசேஷன், இத்தலத்தில் தான் முதன்முதலாக அவரை தன்னில் சயனிக்க வைத்ததாக தலபுராணம் கூறுகின்றது. பெருமாள் பாற்கடலில் பள்ளிகொண்டதால், இந்த தலத்தை ஒட்டி செல்லும் ஆறுக்கு 'பாலாறு" என்று பெயர் ஏற்பட்டது.
கோயில் திருவிழா :
சித்திரையில் பிரம்மோற்சவம், வைகாசி விசாகத்தில் கருடசேவை, ஆனியில் ஜேஷ்டா திருமஞ்சனம், ஆடி வெள்ளிக்கிழமைகளில் திருவாடிப்பூரம், கிருஷ்ண ஜெயந்தி, நவராத்திரி, திருக்கார்த்திகை, வைகுண்ட ஏகாதசி, தை மாதம் கிரிபிரதட்சணம், மாசி தெப்பம், பங்குனி உத்திரம் ஆகியவை கொண்டாடப்படுகிறது.
வேண்டுதல் :
தடைபடும் திருமணங்கள் சிறப்பாக நடக்கவும், பிரிந்த தம்பதியர் ஒன்றாக சேரவும் இங்கு பிரார்த்திக்கிறார்கள்.
நேர்த்திக்கடன் :
பிரார்த்தனை நிறைவேறியவுடன் சுவாமிக்கும், அம்பாளுக்கும் திருமஞ்சனம் செய்து துளசியால் அர்ச்சனை செய்கின்றனர்.
அருள்தரும் ஆலயங்கள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக