----------------------------------------------------------
கோடீஸ்வரன் செயல்...!
----------------------------------------------------------
👉நான் கோடீஸ்வரனானால் என்ற தலைப்பில் மாணவர்களை கட்டுரை எழுத சொன்னார் ஆசிரியர்.
👉ஒரே ஒரு மாணவனை தவிர எல்லோரும் கட்டுரை எழுதி தந்தனர்.
👉ஒன்றும் எழுதாமல் சும்மா இருந்த அந்த மாணவனை பார்த்து, நீ ஏன் எதுவும் எழுதவில்லை என்று கேட்டார் ஆசிரியர்.
👉நான் கோடீஸ்வரனானால் எதுவும் செய்யமாட்டேன் சார் என்று பதில் தந்தான் அவன்.😆😆
----------------------------------------------------------
இது சிரிப்பதற்காக மட்டுமே..!
----------------------------------------------------------
புதியதாக வேதியியலில் சேர்க்கப்பட்டுள்ள ஒரு தனிமம்.
பெயர் : மனைவி
குறியீடு : +-
அணு நிறை :
முதலில் பார்க்கும்போது இலகுவாக தெரியும், நாட்கள் ஆக ஆக எடை கூடிக் கொண்டே போகும்.
உடற்கூறு தன்மை :
எப்பொழுதும் அன்பில் உருகக்கூடியது, உறையக்கூடியது. தவறாக பயன்படுத்தினால் கொதிக்கக்கூடியது.
வேதியியல் தன்மைகள் :
எளிதில் எதிர்வினை புரியக்கூடியது.
அதிகமாக நிலைத்தன்மை அற்றது.
தங்கம், வெள்ளி, வைரம், வைடூரியம், பணம், காசோலை என அனைத்தையும் ஈர்க்கும் தன்மை கொண்டது.
பணமதிப்பை குறைக்கும் வல்லமை கொண்டது.
காணும் இடங்கள் :
அழகு நிலையம், நகைக்கடைகள், பன்னாட்டு நவீன வணிக வளாகங்கள் மற்றும் ஐஸ்கிரீம் கடைகள்.
கணவனின் உறவினர்களை கண்டால் எளிதில் தீ பற்றக்கூடியது.
தனது பெற்றோர்களுடன் இருக்கும்போது இன்பம், மகிழ்ச்சி, குதூகலம், துள்ளல், ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என ஒரே பன்முகத்தன்மை உடையதாக இருக்கும்.
மனப்பான்மை :
நானே இந்த பூலோகத்தின் ராணி, என்னைய மிஞ்சிய அழகும், திறமையும், ஆற்றலும், அறிவும் இந்த பிரபஞ்சத்தில் இல்லை என்ற நினைப்பு.
ஆக மொத்தத்தில் புரிந்து கொள்ளவே முடியாத புதிராக இருக்கும் ஒரு தனிமம் !!
----------------------------------------------------------
செய்யக்கூடாதவை..!!
----------------------------------------------------------
நம் முன்னோர்கள் செய்யக்கூடாத சில விஷயங்களை அழகாக சொல்லி வைத்திருக்கிறார்கள்..
✖ உணவிடை நீரைப் பருகாதே.
✖ கண்ணில் தூசி கசக்காதே.
✖ கழிக்கும் இரண்டை அடக்காதே.
✖ காதை குத்திக் குடையாதே.
✖ கொதிக்க கொதிக்க குடிக்காதே.
✖ பல்லில் குச்சி குத்தாதே.
✖ பசிக்காவிட்டால் புசிக்காதே.
✖ பசித்தால் நேரம் கடத்தாதே.
✖ வாயைத்திறந்து மெல்லாதே.
✖ வில்லின் வடிவில் அமராதே.
ரிலாக்ஸ் ப்ளீஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக