அவசரமே ஆபத்து !!
--------------------------------------------
ஒருத்தன் அவன் ஆபிஸ் 12வது மாடில நின்னுகிட்டு வடை சாப்பிட்டுகிட்டு இருந்தான்.
அப்போ அவனை நோக்கி வேகமா வந்த ஒருத்தன், 'பீட்டர், உன் பொண்ணு மேரி கார் ஓட்டிக்கிட்டு போகும்போது லாரி மோதி செத்து போய்ட்டா" என்று கத்தினான்.
விஷயத்தை கேள்விப்பட்டதும் என்ன செய்றதுன்னு புரியாம 12வது மாடியில இருந்து கீழ குதிச்சிட்டான்.
பத்தாவது மாடி வரும்போது தான் அவனுக்கு யோசனையே வந்துச்சி 'நம்மகிட்ட கார் எதுவுமே இல்லையே..."
எட்டாவது மாடிய தாண்டும்போது தான் தோணுச்சி 'அடடா நமக்கு மகளே கிடையாதே".
ஆறாவது மாடிய கடக்கும்போது தான் ஞாபகம் வந்துச்சி 'நமக்கு இன்னும் கல்யாணமே ஆகலியே".
மூணாவது மாடிய நெருங்கியபோது தான் தெளிவா புரிஞ்சுது, 'ஐய்யோ... என் பேரு பீட்டரே இல்லையே".
ஆஹா, விதி கடைசியில விளையாடிடுச்சி.
--------------------------------------------
கெடுதல் !!
--------------------------------------------
நமது வாழ்க்கையில் சில விஷயங்களில் அக்கறை எடுப்போம். ஆனால், வேறு ஒரு விஷயத்தில் நாட்டம் செலுத்துவோம். இதனால் ஏற்படும் கெடுதிகள் சில :
🌟பார்க்காத பயிரும் கெடும்..
🌟பாசத்தினால் பிள்ளை கெடும்..
🌟கேளாத கடனும் கெடும்..
🌟கேட்கும்போது உறவு கெடும்..
🌟தெகட்டினால் விருந்து கெடும்..
🌟ஓதாத கல்வி கெடும்..
🌟ஒழுக்கமில்லா வாழ்வு கெடும்..
🌟சேராத உறவும் கெடும்..
🌟நிறைய நேரமும், ஆரோக்கியமும் உள்ளது.
🌟ஆனால், பணம் இல்லை!!
இளமை :
🌟ஆரோக்கியம் உள்ளது,
🌟பணம் உள்ளது,
🌟ஆனால், நேரம் இல்லை!!
முதுமை :
🌟நேரமும் பணமும் உண்டு.
🌟ஆனால், ஆரோக்கியம் இல்லை!!
--------------------------------------------
இது உண்மை தானே !!
--------------------------------------------
🌟தவறி விழும்போது மட்டுமே சிலருக்கு வாயிலிருந்து வருகிறது - அம்மா
🌟சிறைக்குத் திரும்பிவிட ஆசை! மீண்டும் தாயின் கருவறைக்குள்!
🌟சரியோ தவறோ கடந்துவிடுகிறது - வாழ்க்கை
🌟மனைவி அடிக்கும்போது வாய்விட்டு கத்த முடிஞ்சா அதுதான் சுதந்திரம்!
🌟ஆசையை வளரவிடாதே அது கள் ஆகி உன் மூளையை மழுங்கடித்துவிடும் (ஆசை'கள்")
ரிலாக்ஸ் ப்ளீஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக