சிறு சேமிப்பு திட்டங்கள் என்றாலே நமக்கெல்லாம் நினைவுக்கு வருவது, அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் தான். அதிலும் டைம் டெபாசிட் திட்டங்கள் என்பது இன்னும் நல்ல திட்டமாக பார்க்கப்படுகின்றது.
எனினும் இன்று நாம் பார்க்கவிருப்பது அஞ்சலக டெபாசிட் திட்டங்கள் மற்றும் எஸ்பிஐ வங்கி டெபாசிட் திட்டங்கள் தான். இவற்றில் எது சிறந்தது? எது லாபகரமானது? எங்கு டெபாசிட் செய்யலாம்? நிபுணர்களின் கணிப்பு என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
பிக்ஸட் டெபாசிட்டினை போலவே இதிலும் பணம் முடக்கப்படும். இதன் மூலம் சேமிப்பு பழக்கமும் வளரும். இந்தியாவில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் இந்திய அஞ்சல் துறை ஆகிய இரண்டும் டெபாசிட் திட்டங்களைக் கொண்டுள்ளன. வங்கிகளை அடுத்து ஒரு பாதுகாப்பான இடமாக இன்றைய காலக்கட்டத்தில் அஞ்சலக திட்டங்கள் ஒரு பாதுகாப்பான அம்சமாக பார்க்கப்படுகிறது.
கால அளவு வேறுபடும்
அஞ்சலகங்களிலும் டெபாசிட் திட்டங்கள் வங்கிகளை போலவே 5 ஆண்டுகள் வரையில் வழங்கப்படுகின்றது. வட்டி விகிதமும் காலாண்டுக்கு ஒரு முறை மாற்றம் செய்யப்படுகின்றது. எனினும் இங்கு வட்டி விகிதம் என்பது 1 வருட,ம், 2 வருடம், 3 வருடம், 5 வருடம் என பிரித்து தரப்படுகிறது. இதே எஸ்பிஐ-யில் 7 நாட்கள் முதல் 10 வருடங்கள் வரையில் கால அளவில் டெபாசிட் செய்து கொள்ளலாம்.
எஸ்பிஐ அல்லது இந்திய அஞ்சலில் டைம் டெபாசிட் கணக்கை தொடங்க கேஒய்சி (Know your customer) தேவைகளைப் பூர்த்திச் செய்யும் விதமாக தனிநபர் மற்றும் இருப்பிட ஆதாரங்களை முதலில் சமர்ப்பிக்க வேண்டும். அதோடு ஆதார் அட்டை மற்றும் பான் அட்டை போன்ற ஆவணங்களுடன், உங்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படமும் தேவைப்படும்.
நீங்கள் ஏற்கனவே எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர் எனில், இணையவழி வங்கிச்சேவையின் மூலம், எளிதில் இந்த டைம் டெபாசிட் கணக்கினை தொடங்கலாம். ஆக எஸ்பிஐயில் இந்த டைம் டெபாசிட் கணக்கினை தொடங்க சேமிப்பு/நடப்பு கணக்கு அவசியம். எந்தவொரு தனிநபரும் இந்த இரண்டிலும் டைம் டெபாசிட் கணக்கினை தொடங்கிக் கொள்ளலாம்.
தபால் நிலையங்களில் குழந்தைகளின் பெயரில் கூடத் தொடர் வைப்புநிதி கணக்கை தொடங்கிக் கொள்ளலாம். 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் தங்கள் கணக்குகளைத் தாங்களே பராமரிக்கலாம். எஸ்பிஐ வங்கியை பொறுத்த வரை இரண்டு வித தொடர் வைப்புநிதி கணக்குகளை வழங்குகிறது. ஒன்று வழக்கமானது. மற்றொன்று விடுமுறை காலச் சேமிப்புக் கணக்குகள்.
7 நாட்கள் முதல் 45 நாட்கள் வரையில் வட்டி விகிதம் - 2.9%
46 நாட்கள் முதல் 179 நாட்கள் வரையில் வட்டி விகிதம் - 3.9%
180 - 210 நாட்கல் வரையில் வட்டி விகிதம் - 4.4%
211 நாட்கள் முதல் 1 வருடத்திற்குள் - 4.4%
1 வருடம் முதல் 2 வருடத்திற்குள் - 5%
2 வருடம் முதல் 3 வருடம் வரையில் - 5.1%
3 வருடம் முதல் 5 வருடம் வரையில் - 5.3%
5 வருடம் முதல் 10 வருடம் வரையில் 5.4%
1 வருடம் - 5.5%
2 வருடம் - 5.5%
3 வருடம் - 5.5%
5 வருடம் - 6.7%
இந்த இரண்டு கணக்குகளிலுமே அதிகபட்ச முதலீடு என்பது நிர்ணயிக்கப்படவில்லை.
வட்டி விகிதம் எனும் போது அஞ்சலகத்தில் அதிகம் எனலாம். அதோடு அஞ்சலகங்களை எளிதில் அணுக முடியும். உங்களின் அருகிலேயே இருக்கலாம். குழந்தைகளின் பெயரிலும் தொடங்கிக் கொள்ளலாம். எனினும் அஞ்சலகத்தில் உங்கள் பணத்திற்கான இன்சூரன்ஸ் திட்டம் மூலம் 1 லட்சம் ரூபாய் வரையில் பெற்றுக் கொள்ளலாம்/. ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்கினை வைத்திருந்தாலும் 1 லட்சம் ரூபாய் மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும். இதே வங்கிகளில் 5 லட்சம் ரூபாய் வரையில் க்ளைம் செய்து கொள்ள முடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக