தென்கொரியா இராணுவத்தின் கூற்றுப்படி, வடகொரியா சமீபத்தில் கண்டம் விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணையைப் பரிசோதனை அதன் கடல் பகுதியில் சோதனை செய்துள்ளது. இந்த கருவி ஜகாங்கிலிருந்து கிழக்கு கடற்கரையில் உள்ள நீரில் சுடப்பட்டது. இந்த ஏவுதலின் விவரங்களைத் தென் கொரிய மற்றும் அமெரிக்க அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றது. ஏன் இந்த ஏவுகணை சோதனையை வடகொரிய செய்தது என்ற கேள்விக்கு, அந்நாட்டின் தூதர் இது அவர்களின் நியாயமான உரிமை என்று பதிலளித்துள்ளார்.
வடகொரியாவின் (North Korea) கிழக்கு கடலோரப் பகுதியில் 28-09-2021 நேற்று அதிகாலை, குறைந்த தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணை ஒன்றை அந்நாடு மற்ற நாடுகளுக்கு எந்தவித அறிவிப்பு வழங்காமல் ஏவியுள்ளது என்று தென்கொரிய (South Korea) ராணுவம் கூறியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக வடகொரியா தொடர்ந்து உலக நாடுகளை அச்சுறுத்தும் விதமாகப் பல அணு ஆயுத சோதனைகளை அறிவிப்பின்றி நடத்தி வருவது. இதனால் பெரும் பரபரப்பு உருவாகி வருகிறது.
இருப்பினும் வடகொரியா அதன் அணு ஆயுத ஏவுகணை சோதனையை இன்னும் நிறுத்தியதாக இல்லை. இது போன்ற ஏவுகணை சோதனையால் உலக நாடுகள் பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல முறை வடகொரியாவின் இந்த போக்கிற்குப் பல முறை கண்டனமும் பல எதிர்ப்புகளையும் உலக நாடுகள் தொடர்ந்து தெரிவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பெரும் தொலைவிற்குப் பாயும் ஏவுகணையைச் சோதனை செய்யும் வடகொரியா
இந்த மாதத் தொடக்கத்தில் வடகொரியா பெரும் தொலைவிற்குப் பாயும் ஏவுகணைகளில் ஒன்றான பாலிஸ்டிக் ஏவுகணையை, அதன் க்ரூஸ் ஏவுகணையுடன் சேர்த்து சோதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல், சில தினங்களுக்கு முன்பு வட கொரிய அரசு மீண்டும் ஒரு ஏவுகணையைத் தனது கடல் பகுதியில் சோதனை செய்துள்ளது என்று தென் கொரியா வெளிப்படுத்தியுள்ளது. இதற்கு முன்னர் தென்கொரியாவுடன், வடகொரியா பேச்சுவார்த்தை நடத்து விரும்புவதாகத் தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தென்கொரியா இராணுவம் வெளியிட்ட தகவலின் படி, இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது என்று அறிவிக்கப்பட்டதும், அமெரிக்க இராணுவம் இந்த ஏவுகணை சோதனை பற்றி தங்களுக்குத் தெரியும் என்று அறிவித்துள்ளது. வடகொரியாவின் இந்த திடீர் ஏவுகணை சோதனை மீண்டும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமெரிக்கப் படையினருக்கோ அல்லது கூட்டாளி நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கோ வடகொரியாவின் ஏவுகணை சோதனையால் எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்று அமெரிக்க ராணுவம் தற்போது கூறியுள்ளது.
வடகொரியாவின் ஏவுகணை சோதனையைக் கண்டித்த நாடுகளுக்கு, தங்களைத் தற்காத்துக் கொள்வதற்கும் மற்றும் ஆயுதங்களைச் சோதனை செய்வதற்குமான வடகொரியாவின் உரிமையை யாராலும் தடுக்க முடியாது என்று வடகொரியாவின் தூதர் ஐக்கிய நாடுகள் மன்றத்தில் பதில் அளித்துள்ளார். வடகொரியாவின் ஐ.நா. வடக்கின் தூதர், பியோங்யாங்கிற்கு ஆயுதங்களை உருவாக்க மற்றும் அதனைச் சோதனை செய்து 'தற்காப்புக்கான நியாயமான உரிமை' இருப்பதாக ஐ.நா.விடம் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், அணு ஆயுத சக்தி கொண்ட ஒரு நாடு தான் உருவாக்கிய ஆயுதத்தைத் தனது பகுதியில் சோதித்துப் பார்க்க உரிமை உள்ளது என்று அந்நாட்டின் தூதர் ஐநா மாநாட்டில் தெரிவித்துள்ளார். அதேபோல், வடகொரியாவின் அமைதி மற்றும் பாதுகாப்பு பலப்படுத்தவும், வடகொரியாவின் தேசியப் பாதுகாப்பு நலனுக்காகவும் மட்டுமே அந்நாடு அணு ஆயுத சோதனைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது. அதற்கான நடவடிக்கையை அந்நாடு தனது உரிமையுடன் செயல்படுத்தும் என்று தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக