ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் தனியாகப் பிரிந்த நாளில் இருந்து அந்நாட்டின் சப்ளை செயின் அதிகளவிலான பிரச்சனையைச் சந்தித்து வருகிறது.
தற்போது கொரோனா தொற்று அலை குறைத்து அனைத்து துறைகளிலும் வர்த்தகம் அதிகரித்த காரணத்தால் போதுமான டிரக் இல்லாத நிலையில் அந்நாட்டின் சப்ளை செயின் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது.
இதனால் உணவு முதல் எரிபொருள் வரையில் அனைத்து பொருட்களுக்கும் சரியான இடத்திற்குச் சரியான அளவில் கொண்டு சேர்க்க முடியாத நிலை உருவாகியுள்ளது.
இதற்கிடையில் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வரும் காரணத்தால், பிரிட்டன் மக்கள் அளவுக்கு அதிகமாக எரிபொருளை வாங்கிய காரணத்தால் நாட்டின் 90 சதவீத பெட்ரோல் பம்புகளில் எரிபொருள் தீர்ந்துள்ளது.
பெட்ரோல் பங்க்இதன் மூலம் பெரும்பாலான பெட்ரோல் பங்க் மூடப்பட்டும் அல்லது இருப்பு இல்லை என்றும் பெயர் பலகை திங்கட்கிழமை வைக்கப்பட்டு இருந்தது.
பிரிட்டன் மாட்டிக்கொண்டதுஒருபக்கம் டிரக் டிமாண்ட், எரிபொருள் பற்றாக்குறை மறுபுறம் அனைத்து துறையிலும் சரக்குகளை உரிய இடத்தில் கொண்டு சேர்க்க வேண்டிய நிலை என் இருபக்கம் மாட்டிக்கொண்டு விழித்துக்கொண்டு இருக்கிறது பிரிட்டன்.
எண்ணெய் நிறுவனங்கள்பிரிட்டன் நாட்டில் தற்போது இருக்கும் எரிபொருள் பற்றாக்குறையை உடனடியாகத் தீர்க்க வேண்டும் என்பதற்காக அனைத்துச் சுத்திகரிப்பு மற்றும் டெர்மினல்களும் பிரிட்டன் அரசு இணைந்து பணியாற்றி வருகிறது. இதற்காக BP, ராயல் டச் ஷெல், எக்சான் மொபில் ஆகிய நிறுவனங்கள் இணைந்து பணியாற்றி வருகிறது.
தற்போது எரிபொருள் பிரச்சனையைத் தீர்க்க மட்டும் சுமார் 1,00,000 டிரக்குள் உடனடியாகத் தேவை எனக் கணிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக எரிபொருள் டிரக்குகளுக்குக் கூடுதலான பயிற்சிகள் தேவை என்பதால் இந்தச் சப்ளை செயின் பிரச்சனையை உடனடியாகத் தீர்க்க முடியாது எனவும் கூறப்படுகிறது.
மக்கள் பயம்இந்தப் பிரச்சனைக்கு மத்தியில் மக்கள் பயம் அதிகரித்துள்ள காரணத்தால் எரிபொருள் முதல் உணவுப் பொருட்கள் வரையில் அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் அதிகளவில் வாங்கிக் குவித்து வருகின்றனர்.
கொரோனா தொற்றுக் காலத்தில் பிரிட்டன் லாக்டவுன் அறிவிக்கும் போதும் இதே நிலை தான் உருவானது, தற்போது கொரோனா தொற்று குறைந்து மக்களும், சந்தையும் இயல்பு நிலைக்குத் திரும்பும் வேளையில் சப்ளை செயின் பாதிக்கப்பட்டு மொத்த நாடும் ஸ்தம்பித்துள்ளது.
எனவே பிரிட்டன் நாட்டில் மக்கள் மிகவும் மோசமான நிலைக்குச் சென்று வருவது மட்டும் அல்லாமல் இப்பிரச்சனையை உடனடியாகத் தீர்க்கப்படாவிட்டால் பிரிட்டன் டிரெட்லாக் ஆகும் எனவும் கணிக்கப்பட்டு உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக