
சமூகவலைதளத்தில் மிகவும் பிரதானமாக இருப்பது வாட்ஸ்அப். இது பிரபல செய்தி பரிமாற்ற தளமாக இருக்கிறது. இந்த நிலையில் வாட்ஸ்அப் இனி ஆப்பிள் சாம்சங் உள்ளிட்ட சில நிறுவனங்களின் சாதனங்களில் வேலை செய்யாது என குறிப்பிடப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் அப்டேட் தான் இதற்கு காரணம் ஆகும்.
மேம்பாட்டு அம்சம்
பழைய சாதனம் நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்றால் அதை புதுப்பிப்பதற்கான நேரம் இது. வருகிற ஸ்மார்ட்போன்கள் அனைத்தும் பல்வேறு மேம்பாட்டு அம்சங்களோடு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கு ஏற்ப செயலிகளும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அப்படி மேம்படுத்தப்படும் பட்சத்தில் இந்த செயலிகளில் பழைய சாதனங்களில் பயன்படுத்த முடியாத சூழல் இருக்கிறது.
வாட்ஸ்அப் சிஸ்டம் அப்டேட்
வாட்ஸ்அப் சமீபத்தில் தனது சிஸ்டம் அப்டேட்களை அறிவித்துள்ளது. இதன்படி குறிப்பிட்ட பழைய ஓஎஸ்-ல் இயங்கும் சாதங்களில் வாட்ஸ்அப் பயன்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் அதன் பக்கத்தில் அதன் பயன்பாட்டை புதுப்பித்து அறிவித்துள்ளது. இது ஆண்ட்ராய்டு 4.0.3 ஐஸ்கிரீம் சாண்ட்விச், ஐஓஎஸ் 9 உள்ளிட்ட சாதனங்களில் நவம்பர் 1, 2021 முதல் இயங்காது என தெரிவித்துள்ளது. அதேபோல் அதற்கு முன்பு பழைய சாதனங்களுக்கான ஆதரவை டிசம்பர் 2020-ல் அறிவித்தது.
ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் சாதனம்
வாட்ஸ்அப் அதன் கேள்விகள் பக்கத்தில் ஆண்ட்ராய்டு ஓஎஸ் 4.1, ஐபோன் ஐஓஸ் 10, கெய் ஓஎஸ் 2.5.1 மற்றும் ஜியோபோன், ஜியோபோன் 2 ஆகிய சாதனங்களில் இயங்கும் என கூறப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் தங்கள் சாதனத்தில் தொலைபேசி எண்ணை பதிவு செய்ய அனுமதிக்கிறது. ஒரு நேரத்தில் ஒரு சாதனத்தில் மட்டுமே வாட்ஸ்அப் செயல்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி உங்கள் சாதனம் ஆண்ட்ராய்டு 4.0.3 ஐஸ்கிரீம் சாண்ட்விச், ஐஓஎஸ் 9-ல் இயங்குகிறது என்றால் அந்த ஓஎஸ் மேம்படுத்தவும், வேறு சாதனங்கள் வாங்குவதற்கான நேரம் இதுவாகும்.
நவம்பர் 1 வரை காலக்கெடு
நவம்பர் 1-க்கு பிறகு உங்கள் சாதனம் மேம்படுத்தவில்லை என்றால் வாட்ஸ்அப் உங்கள் ஸ்மார்ட்போனில் இயங்காது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அதன்பின் உங்கள் சாதனத்தில் வாட்ஸ்அப் மூலம் செய்திகளை பெறவும் அனுப்பவும் முடியாது. புதிய தொலைபேசியை வாங்குவதற்கான நேரம் இதுவாகும். அல்லது சாஃப்ட்வேர் புதுப்பிக்க தகுதியானதாக இருந்தால் அதை உடனடியாக செய்து கொள்ளவும்.
உங்கள் சாதனத்தில் வாட்ஸ்அப் வேலை செய்யாது
உங்கள் சாதனத்தில் வாட்ஸ்அப் வேலை செய்வது நிறுத்துவதற்கு முன்பாக உங்கள் சேட்டிங்கை கூகுள் இயங்குதளத்தில் காப்புப் பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவும். காரணம் வாட்ஸ்அப் பயன்பாடு நிறுத்தப்படும் பட்சத்தில் அதை உங்கள் சாதனத்தில் பயன்படுத்த முடியாது எனவே தங்களது சேட்டிங்கை இழக்காமல் இருக்க அதை காப்பு பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவும்.\
எந்தெந்த சாதனங்களில் செயல்படாது
எந்தெந்த சாதனங்களில் வாட்ஸ்அப் செயல்படாது என்பது குறித்து பார்க்கலாம்.
சாம்சங்: சாம்சங் கேலக்ஸி டிரெண்ட் லைட் 2, கேலக்ஸி எஸ்2, கேலக்ஸி எஸ்3 மினி, கேலக்ஸி எக்ஸ்கவர் 2, கேலக்ஸி கவர், கேலக்ஸி ஏஸ்2
எல்ஜி: எல்ஜி லூசிட் 2, ஆப்டிமஸ் எஃப்7, ஆப்டிமஸ் எஃப்5, ஆப்டிமஸ் எல்3 2, ஆப்டிமஸ் எல்7, ஆப்டிமஸ் எல்7 டூயல், ஆப்டிமஸ் எல் 7 2, ஆப்டிமஸ் எஃப் 6, ஆப்டிமஸ் எல்4 2 டூயல், ஆப்டிமஸ் எஃப் 3, ஆப்டிமஸ் எல்4 2, ஆப்டிமஸ் எல் 2 2, ஆப்டிமஸ் நைட்ரோ எச்டி, 4எக்ஸ் எச்டி, ஆப்டிமஸ் எஃப்3 க்யூ
ஹூவாய்: ஹூவாய் ஏஸ்சென்ட் ஜி740, ஏஸ்சென்ட் மேட், ஏஸ்சென்ட் டி க்வாட் எக்ஸ் எல், ஏஸ்சென்ட் டி1 க்வாட் எக்ஸ்எல், ஏஸ்சென்ட் பி1 எஸ், ஏஸ்சென்ட் டி2
சோனி: சோனி எக்ஸ்பீரியா மிரோ, சோனி எக்ஸ்பீரியா நியோஎல், எக்ஸ்பீரியா ஆர்க் 5
அதேபோல் ஆல்காடெல் ஒன் டச் எவோ 7, ஆர்கோஸ் 53 பிளாட்டினம், எச்டிசி டிசைர் 500, கேட்டர்பில்லர் கேட் பி15, விகோ கங்க் ஃபைவ், விகோ டார்க் நைட், லெனோவா ஏ820, யூஎம்ஐ எக்ஸ் 2 ஆகிய சாதனங்களில் இயங்காது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக