
பொதுவாகக்
கிரெடிட் கார்டில் வாங்கும் பொருட்களுக்குத் தான் ஈஎம்ஐ சேவை
அளிக்கப்படும், ஆனால் கிரெடிட் கார்டு வைத்திருப்போர் எண்ணிக்கை மிகவும்
குறைவாக இருக்கும் காரணத்தால் ஷாப்பிங் வர்த்தகம் பெரிய அளவில்
பாதிக்கப்படுகிறது.
இதனால் தற்போது டெபிட் கார்டு மூலம் செய்யப்படும் ஷாப்பிங்-கிற்கு ஈஎம்ஐ சேவை அளிக்க முடிவு செய்துள்ளது இந்தியாவில் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா.
எஸ்பிஐ வங்கி
எஸ்பிஐ வங்கி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தனது வாடிக்கையாளர்கள் அனைவரும், இனி டெபிட் கார்டு மூலம் வாங்கப்பட்டும் நுகர்வோர் பொருட்களுக்கான தொகையை எளிதாக ஈஎம்ஐ-ஆக மாற்ற முடியும்.
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நேரத்தில், எஸ்பிஐ திட்டமிட்டு இந்தப் பண்டிகை காலத்தில் பல்வேறு தள்ளுபடிகள் போடப்படும் காரணத்தால் இந்தச் சலுகையை அறிவித்துள்ளது. இது சாமானிய மக்களுக்கு ஜாக்பாட் தான்.
டெபிட் கார்டு
இதை வெறும் டெபிட் கார்டு வாயிலாகவே செய்ய POS இயந்திரம் அல்லது ஈகாமர்ஸ் நிறுவனங்களான அமேசான் அல்லது பிளிப்கார்ட் போன்ற தளத்திலும் எஸ்பிஐ டெபிட் கார்ட் மூலம் செய்ய முடியும் எனத் தெரிவித்துள்ளது.
1 லட்சம் ரூபாய் வரை கடன்
இந்தத் திட்டத்தின் மூலம் ஒரு எஸ்பிஐ வாடிக்கையாளர் 8000 ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரையிலான தொகையைக் கடனாகப் பெற முடியும். இந்தத் தொகைக்கு எஸ்பிஐ வங்கி 2 வருட MCLR விகிதம் உடன் 7.50 சதவீதம் வட்டியை வசூலிக்கிறது. அதாவது இன்றை நிலவரத்தின் படி சுமார் 14.70 சதவீதம் கிட்டதட்ட 1.25 ரூபாய் வட்டியில் கடன் அளிக்கிறது.
ஈஎம்ஐ காலம்
மேலும் வாடிக்கையாளர்கள் டெபிட் கார்ட் கடன் திட்டத்திற்கு 6 மாதம், 9 மாதம், 12 மாதம் அல்லது 18 மாதம் என்று 4 காலகட்டத்திற்கு ஈஎம்ஐ சேவை பெற முடியும். இதனுடன் வாடிக்கையாளர்கள் தங்கள் தகுதியை உறுதிப்படுத்த வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டு உள்ள மொபைல் எண்ணில் இருந்து DCEMI என்று 567676 எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பினால் போதும். அனைத்து விபரங்களையும், தகுதிகளையும் தெரிந்துகொள்ள முடியும்.
முற்றிலும் இலவசம்
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா இந்த டெபிட் கார்டு பேமெண்ட்களை ஈஎம்ஐ-ஆக மாற்றும் சேவை ஜீரோ பிராசசிங் கட்டணத்தில் செயல்படுத்துகிறது. இது மட்டும் அல்லாமல் இந்தச் சேவையைப் பெறும் போது எவ்விதமான விண்ணப்பத்தையோ, கையெழுத்தோ செய்ய வேண்டாம். இதுமட்டும் அல்லாமல் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் உடனடியாகப் பேமெண்ட் செய்யப்பட்டு ஈஎம்ஐ ஆக மாற்றப்படும்.
வங்கி சேமிப்பு கணக்கு
மேலும் இந்தத் திட்டத்தால் வாடிக்கையாளர் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தைப் பிளாக் செய்யப்படமாட்டாது எனவும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்குத் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும் ஈஎம்ஐ தொகையை வாடிக்கையாளரின் சேமிப்பு கணக்கின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படும். இதனால் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி வாடிக்கையாளர் எவ்விதமான தயக்கமும் இல்லாமல் பயன்படுத்தலாம்.
சரி இதை எப்படிப் பெறுவது..?!
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் டெபிட் கார்டு ஈஎம்ஐ சேவை இரண்டு வழிகளில் பெறலாம். 1. POS இயந்திரம் மூலம் பெறலாம்
2. ஆன்லைன் தளத்தின் மூலம் பெறலாம். முதலில் பெரும்பாலான மக்கள் பயன்படுத்த ஏதுவாக இருக்கும் POS இயந்திரம் மூலம் டெபிட் கார்ட் ஈஎம்ஐ சேவை பெறுவதைப் பார்க்கலாம்.
POS இயந்திரம்
படி 1: பொருட்களை வாங்கும் கடையில் இருக்கும் POS இயந்திரத்தில் உங்கள் எஸ்பிஐ டெபிட் கார்டு ஸ்வைப் செய்யவும்.
படி 2: இதன் பின்பு பிராண்ட் ஈஎம்ஐ தேர்வு செய்யவும், அதன் பின்பு பேங்க் ஈஎம்ஐ தேர்வு செய்யவும்
படி 3: தொகையைப் பதிவு செய்ய வேண்டும், அதன் பின்பு Repayment tenor
படி 4: பின்பு உங்கள் டெபிட் கார்டு பின் எண்-ஐ டைப் செய்து OK அழுத்தினால் போதும்.
படி 5: கடன் தொகை பரிமாற்றம் முடிந்த பின்பு உங்கள் கணக்கில் சேர்ந்துவிடும்.
படி 6: இதன் பின்பு POS இயந்திரத்தில் வரும் சிலிப்-ல் அனைத்து விபரங்களையும் நீங்கப் பெறலாம்.
ஆன்லைன் வழிமுறை
படி 1: முதல் உங்களுக்குப் பிடித்த ஈகாமர்ஸ் தளத்தில் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டு உள்ள உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து லாக்இன் செய்யுங்கள்
படி 2: உங்களுக்குப் பிடித்த அல்லது தேவையான பொருட்களைத் தேர்வு செய்து பேமெண்ட் செய்யும் தளத்திற்குச் செல்லுங்கள்
படி 3: இதர பேமெண்ட் ஆப்ஷன் என்பதைக் கிளிக் செய்து ஈசி EMO என்ற ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள்
படி 4: தொகை அனைத்தும் ஆட்டோமேட்டிகாகக் கணக்கிட்டுக்கொள்ளும். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் proceed என்பதைக் கிளிக் செய்வது மட்டும் தான்.
படி 5: Proceed பட்டனை கிளிக் செய்தால் எஸ்பிஐ இண்டர்நெட் வங்கி பக்கத்திற்குச் செலுத்தும், லாக்கின் செய்து டெபிட் கார்டு தரவுகளைக் கொடுக்க வேண்டும்.
படி 6: கடன் தொகையைப் புக் செய்யப்பட்டு விதிமுறைகளை நீங்கள் காட்டும், படித்துவிட்டு ஒப்புதல் கொடுத்தால் வேலை முடிந்தது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக