Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 13 செப்டம்பர், 2021

அருள்மிகு லட்சுமிநாராயணப் பெருமாள் திருக்கோயில் மேலத்திருமணஞ்சேரி, எதிர்கொள்பாடி, நாகப்பட்டினம் மாவட்டம்.

Temple : Temple Details | - | Tamilnadu Temple | லட்சுமி நாராயணப் பெருமாள்
அமைவிடம் :

கிழக்கில் விக்ரமன் என்னும் காவிரியாறும், மேற்கில் கிளை நதியான காளி வாய்க்காலும் அமைந்திருக்க நடுவில் அமைந்துள்ள தலம் தான் மேலத்திருமணஞ்சேரி லட்சுமிநாராயணப் பெருமாள் திருக்கோயில் ஆகும். அங்கேதான் திருமணத்திற்கு வந்த தேவர்களையெல்லாம் விஷ்ணு வரவேற்றாராம். அதனால் அது எதிர்கொள்பாடி என்று பெயர் பெற்றது.

மாவட்டம் :

அருள்மிகு லட்சுமிநாராயணப் பெருமாள் திருக்கோயில் மேலத்திருமணஞ்சேரி, எதிர்கொள்பாடி, நாகப்பட்டினம் மாவட்டம்.

எப்படி செல்வது?

மேலத்திருமணஞ்சேரி, கும்பகோணம் - மயிலாடுதுறை சாலையில் குற்றாலத்திலிருந்து சிறிது தொலைவில் அமைந்துள்ளது. இத்தலத்திற்கு நாகப்பட்டினத்திலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன. 

கோயில் சிறப்பு :

பொதுவாக கோயில்களில் பெருமாள் கிழக்கு நோக்கி எழுந்தருளியிருப்பார். ஆனால், இங்கு மேற்கு நோக்கி அருள்பாலிப்பது சிறப்பு.

இதற்கு காரணம் தம்பதிகளான கோகிலாம்பாளும், கல்யாண சுந்தரரும் கிழக்கு நோக்கி அமர்ந்திருந்தபோது, மைத்துனராக விஷ்ணு திருமணத்தை நடத்தி வைக்க, மேற்கு நோக்கி அமர்ந்தார் என காரணம் சொல்கின்றனர்.

சோழநாட்டில் உள்ள திவ்யதேசங்களில் இத்தலம் அபிமானத்தலமாகத் திகழ்கிறது.
 
கையில் அமிர்தகலசம் தாங்கிய கோலத்தில் வடக்கு நோக்கி தன்வந்திரி தனி சந்நிதியில் வீற்றிருக்கிறார்.

தம்பதி சமேதராக இருந்து சிவ-பார்வதியும், ஸ்ரீPலட்சுமியும்-ஸ்ரீPநாராயணரும் குடிகொண்டிருக்கும் அற்புதத் தலம் இதுவாகும்.

இக்கோயிலில் தும்பிக்கையாழ்வார், வீர ஆஞ்சநேயர், கிருஷ்ணர், கருடாழ்வார், ஐந்து தலைநாகர், ராமானுஜர் சந்நிதிகள் உண்டு.

கோயில் திருவிழா :

வைகுண்ட ஏகாதசி, ராம நவமி, கருட ஜெயந்தி, அனுமன் ஜெயந்தி ஆகியவை கொண்டாடப்படுகிறது. 

வேண்டுதல் :

சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு துளசி மாலை சாற்றி வழிபட்டால் சத்ரு பயம் நீங்கும். ராகுதோஷம் உள்ளவர்கள் ஐந் துதலை நாகருக்கு வெள்ளிக்கிழமை ராகுகாலத்தில் தீபமேற்றி வழிபடுகின்றனர்.

நேர்த்திக்கடன் :

ஆஞ்சநேயருக்கு துளசிமாலை, வடைமாலை சாற்றியும், நாகருக்கு ராகுகாலத்தில் தீபமேற்றியும், தன்வந்திரிக்கு நெய் தீபமேற்றியும் வழிபாடு செய்கின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக