Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 13 செப்டம்பர், 2021

சற்று சிந்தியுங்களேன்.. இன்றைய காலம் இப்படி மாறிப்போச்சு - ரிலாக்ஸ் ப்ளீஸ்..!!

----------------------------------------------
சற்று சிந்தியுங்களேன் !!
 ----------------------------------------------
தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும்
மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்...!!😤

நினைப்பது போல் வாழ்க்கை எல்லோருக்கும் அமைந்துவிடுவதில்லை.. அழகாய் அமைந்த வாழ்க்கையைக்கூட சிலருக்கு வாழ தெரிவதும் இல்லை..!

சந்தோஷமா வாழறேன்னு காட்டிக்கொள்ள தான் பணம் தேவைப்படுகிறது. உண்மையில், சந்தோஷமா வாழ பணம் ஒரு பொருட்டே இல்லை...
----------------------------------------------
இவ்வளவுதான் வாழ்க்கை !!
----------------------------------------------
காதலிக்கும் போது : ஹாய், சுவிட் ஹார்ட், எப்படி இருக்க?
கல்யாணத்துக்கு பின் : ஏங்க..
வரும்போது பிள்ளைக்கு பாலும்..
நாளைக்கு சமையலுக்கு..
வெங்காயம் பார்த்து எடுங்க..
மல்லி, சீரகம், கடுகு, மிளகு..
மறக்காமல் பிஸ்கட் வாங்கிட்டு வாங்க..
இம்புட்டுதான் வாழ்க்கை..
----------------------------------------------
இன்றைய காலம் இப்படி மாறிப்போச்சு !!
----------------------------------------------
🙆நேரில் பேசி தீர்க்க வேண்டிய விஷயங்களை போன்ல பேசி தீர்க்க நினைச்சா... பேலன்ஸ் தீருமே தவிர பிரச்சனை தீராது.

🙆வாசல் வரைக்கும் வந்து வீட்டுக்குள்ளே வராமல் இருப்பது செருப்பு மட்டும் இல்லை.. மொபைல் சிக்னலும் தான்!

🙆வாஸ்து பார்த்து வீட்டை கட்டுறவனை விட.. நெட்வொர்க் கிடைக்கும் இடமா பார்த்து வீட்டை கட்டுறவனே புத்திசாலி!!
----------------------------------------------
இது உண்மை அல்லவா?
----------------------------------------------
💫சில பேர் கல்யாணத்துக்கு பண்ற செலவுல பாதியைக்கூட பல பேரு ஜென்மம் முழுக்க சம்பாதிக்கிறது இல்லை..

💫பணக்கார பங்களாக்களின் பாத்ரூம் பரப்பளவை விட பல கோடி குடிசைகளின் பரப்பளவு சின்னது..

💫சில பெண்களின் செருப்பு எண்ணிக்கையளவு கூட பல பெண்களிடம் சேலைகள் இல்லை..

💫சிலர் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்களின் விலையை விட குறைவு பல கோடி மக்களின் ஒரு வருஷ சம்பளம்..

💫ஒரு ஸ்கூட்டரில் நாலு பேரு நெருக்கியடிச்சுபோக ஒரு காரில் ஒரே ஒருத்தர் ஹாயா போவார்..

💫சிலர் வயிறு குறைய வேண்டுமென கஷ்டப்படுகிறார்கள். பலர் வயிறு நிறைய வேண்டுமென கஷ்டப்படுகிறார்கள்..

💫சிலர் கிரெடிட் கார்டுகளை நம்பியும், பலர் ரேஷன் கார்டுகளை நம்பியும் இருக்கிறார்கள்..

💫நட்சத்திர உணவு விடுதியின் சிக்கன் விலையில் ஒரு குடும்பம் ஒரு மாதம் சாப்பிடலாம்..

💫பகலில் கூட ஏசி ஓடும் வீடுகளும் இரவில் கூட விளக்கு எரியா வீடுகளும் இங்குள்ளன..

💫கனவு போன்ற வாழ்க்கை வாழ்பவர்களும், கனவில் மட்டுமே வாழ்பவர்களும் வாழும் வறுமையான தேசத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக