
telecomtalk வலைத்தளம் வெளியிட்ட தகவலின்படி, பிஎஸ்என்எல் நிறுவனம் சமீபத்தில் ரூ.247 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம்செய்துள்ளது. மேலும் இது ஒரு 4ஜி ப்ரீபெய்ட் திட்டம் ஆகும். குறிப்பாக இந்த திட்டம் STV_247 என்றும் அழைக்கப்படுகிறது.
பிஎஸ்என்எல் ரூ.247 ப்ரீபெய்ட் திட்டம்
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.247 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 50ஜிபி அளவிலான மொத்த டேட்டாவையும் வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தில் கிடைக்கும் 50ஜிபி டேட்டாவை பயனரால் ஒரே நேரத்தில் அல்லது 50 நாட்களில் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும்.
குறிப்பாக
பிஎஸ்என்எல் ரூ.247 ப்ரீபெய்ட் திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு
நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் மற்றும் ஈரோஸ் நவ்
என்டர்டெயின்மென்ட் சேவைகளின் பயன்களையும் பெறமுடியும். அதேபோல் இந்த
திட்டம் வழங்கும் 50ஜிபி
அளவிலான அதிவேக டேட்டாவை காலி செய்த பிறகு பயனருக்கான இணைய வேகம் 80 Kbps ஆகக் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிக டேட்டாவை விரும்பும் பயனர்கள் இந்த ரூ.247 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்வது நல்லது, அதாவது 50ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு, எஸ்எம்எஸ் நன்மை உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும். குறிப்பாக ரூ.247 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். மேலும் பிஎஸ்என்எல் நிறுவனம் இதற்குமுன்பு அறிமுகம் செய்த திட்டங்களைப் பார்ப்போம்.
பிஎஸ்என்எல் ரூ.199 திட்டம்
பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கும் ரூ.199 திட்டம் ஆனது வரம்பற்ற குரல் அழைப்புகள், 25ஜிபி டேட்டா, தினசரி 100 எஸ்எம்எஸ், உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பிஎஸ்என்எல் ரூ.18 ப்ரீபெய்ட திட்டம்
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.18 ப்ரீபெய்ட திட்டம் ஆனது 48 மணி வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது. குறிப்பாக வரம்பற்ற அழைப்பு மற்றும் வரம்பற்ற வீடியோ அழைப்பு வசதியை வழங்குகிறது. மேலும் இந்த திட்டம் 1ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பிஎஸ்என்எல் ரூ.201 ப்ரீபெய்ட திட்டம்
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.201 திட்டம் ஆனது 90 நாட்கள் செல்லுபடியாகும். இந்த செல்லுபடியாகும் காலத்திற்கு அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் 300 நிமிட அழைப்பு வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்தின் மூலம் பிஎஸ்என்எல் முழு செல்லுபடியாகும் காலத்திற்கு 6 ஜிபி டேட்டா மற்றும் 99 இலவச எஸ்எம்எஸ் வசதிகளை வழங்குகிறது. அழைப்பு நன்மைகளை மட்டும் விரும்பும் பயனர்களுக்கு இது ஒரு சிறந்த திட்டம் ஆகும்.
பிஎஸ்என்எல் ரூ.1498 ப்ரீபெய்ட் திட்டம்
சமீபத்தில் பிஎஸ்என்எல் ரூ.1498 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த திட்டம் 365 நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது. இந்த திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தினசரி டேட்டா வரம்பு முடிந்ததும் இணைய வேகம் 40 கேபிபிஎஸ் வேகமாக குறைக்கப்படும். இந்த திட்டமானது தற்போது அசாம், குஜராத்,உபி கிழக்கு மற்றும் உபி மேற்கு, கொல்கத்தா, தெலுங்கான மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பெரும்பாலான பல வட்டங்களில் கிடைக்கிறது. நீண்ட காலத்திற்கு டேட்டாவை பயன்படுத்த விரும்பும் மக்கள் இந்த திட்டத்தை தேர்வு செய்வது மிகவும் நல்லது. ஆனால் இந்த திட்டம் குரல் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்காது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக
பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ரூ.247 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது
மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.அதிக டேட்டா
மற்றும் நன்மைகளை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு இது பயனுள்ள
வகையில் இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக