
டெல்லியை சேர்ந்த வழக்கறிஞரின் கவுனில் ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி சாதனம் வெடித்ததாக கூறப்படுகிறது. இந்த நிகழ்வானது புதுடெல்லியில் உள்ள நீதிமன்ற அறை ஒன்றில் புதன்கிழமை நடந்திருக்கிறது. பாதிக்கப்பட்ட பயனர் சம்பவத்தின் விவரங்களை டுவிட்டரில் பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும் இதுகுறித்து ஒன்பிளஸ் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி
ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி தீப்பிடித்ததாக தொடரப்படும் இரண்டாவது வழக்கு இதுவாகும். முன்னதாக வெடித்த நிகழ்வு கடந்த மாதம் ஆன்லைனில் தெரிவிக்கப்பட்டது. தற்போது ஒன்பிளஸ் சாதனம் வெடித்து குறித்து டுவிட்டரில் பகிரப்பட்டுள்ளது. அதேபோல் தற்போது போன் வெடிப்பு சம்பவம் குறித்து கேட்ஜெட் 360 தளத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர் கவ்ரவ் குலாட்டி தனது அறையில் அமர்ந்திருந்த போது அவர் கவுனின் பாக்கெட்டில் இருந்த வெப்பம் வருவதை உணர்ந்திருக்கிறார். வெப்பம் உடலில் படுவதை உணர்ந்த போது தனது பாக்கெட்டில் இருந்த ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி சாதனத்தை எடுத்து அதில் இருந்து புகை வருவதை பார்த்ததாக தெரிவித்துள்ளார்.
வெடித்து சிதறிய ஸ்மார்ட்போன்
அதன்பின், தான் உடனடியாக கவுனை தூக்கி போட்டதாகவும், பின் தானும் தன் சகாக்களும் ஸ்மார்ட்போனின் அருகில் சென்றபோது, அது வெடித்ததாக தெரிவித்துள்ளார். இதையடுத்து முழு அறையும் புகையால் நிரம்பியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வெடித்த சாதனத்தை குறிப்பிட்ட சில தினங்களுக்கு முன்புதான் பயன்படுத்த தொடங்கியதாக தெரிவித்துள்ளார்.
வெடித்த ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி
தற்போது வெடித்த ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி சாதனம் ஆகஸ்ட் 23, 2021 அன்று வாங்கப்பட்டது. தற்போது வெடித்த ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி சாதனத்தின் புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்ட ஸ்க்ரீன் ஷாட்களை பகிர்ந்துள்ளார். புதிய ஸ்மார்ட்போனை பயன்படுத்தி சில தினங்களே ஆனதாக கூறிய அவர் பழைய தொலைபேசியில் இருந்து தரவை கூட மாற்றவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
வெப்பம் வெளிவரத் தொடங்கிய சாதனம்
ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி வெப்பம் வெளிவரத் தொடங்கிய போது பயன்பாட்டில் இல்லை எனவும் சார்ஜிங் நிலையில் கூடவில்லை என பகிர்ந்துள்ளார். தற்போது வரை அதிர்ச்சியில் இருக்கிறேன் எனவும் அதில் இருந்து வெளியே வர முடியவில்லை எனவும் கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து ஒன்பிளஸ் நிர்வாக இயக்குனர் மற்றும் அமேசான் நிர்வாகிகளுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்வதாக கூறினார். இந்த சம்பவம் குறித்த புகைப்படங்களை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து மைஸ்மார்ட் பிரைஸ் தளம் முதலில் பகிர்ந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக