இளம் பயனர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உருவாக்கப்படும் இன்ஸ்டாகிராம் கிட்ஸ் செயலி தயாரிப்புக்கான பணி இடை நிறுத்தம் செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இன்ஸ்டாகிராம் தலைவர் ஆடம் மொசேரி கூறுகையில், குழந்தைகள் பதிப்பை உருவாக்குவது என்பது நீண்டு காலத்திற்கு தேவைப்படும் சரியான விஷயம் என நம்புவதாக குறிப்பிட்டார். பேஸ்புக் இன்ஸ்டாகிராம் கிட்ஸ் உருவாக்கும் பணியை இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளது. மேலும் இளம் வயதினர் மீது ஏற்படும் தாக்கத்தினை குறித்து கவலை கொள்வதாக குறிப்பிட்டார்.
இன்ஸ்டாரிகாரம் வளர் இளம் வயதினருக்கான இன்ஸ்டாகிராம் கிட்ஸ் பயன்பாட்டிற்கான பணியை தற்காலிமாகவே நிறுத்தி வைத்திருக்கிறது எனவும் எதிர்காலத்தில் இதுபோன்ற பயன்பாடு உருவாகும் எனவும் உறுதியளித்தார். குழந்தைகள் முன்னதாகவே ஆன்லைனில் தொடர்ந்து இருப்பதாலும், இன்ஸ்டாகிராம் அணுகலுக்கான வயதை தவறாக சித்தரிப்பதன் காரணமாகவும் இந்த அம்சம் உருவாக்கம் செய்யப்படுகிறது.
குழந்தைகளுக்கு ஏற்ற வகையிலான சேவைதற்போது 13 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே அணுகக்கூடியவை ஆகும். இதையடுத்து 10 - 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்ற வகையிலான சேவையை அர்ப்பணிப்பது என்பது சிறந்தது என இன்ஸ்டாகிராம் நினைத்ததாக கூறினார். இருப்பினும் தற்போது உருவாக்கப்படும் பதிப்பு விளம்பரமில்லாமல் இருக்கும் எனவும் பெற்றோர்கள் நேரடியாக மேற்பார்வையிட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த பதிப்பு இன்று இன்ஸ்டாகிராம் போன்றே இருக்க வேண்டும் என்பதல்ல தங்கள் நோக்கம் என மொசேரி கூறினார். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் இந்த பயன்பாட்டில் செலவிடும் நேரத்தில் மேற்பார்வையிடலாம் எனவும் யாருக்கு மெசேஜ் அனுப்பப்படுகிறது, யார் பின்தொடருகிறார்கள், யாரை அவர்கள் பின்தொடர்கிறார்கள் என்பதை மேற்பார்வையிடலாம் எனவும் குறிப்பிட்டார்.
ஒரே டுவிட்டில், இன்ஸ்டாகிராம் ஏன் இந்த திட்டத்தை தாமதப்படுத்த முடிவு செய்தது என்பதையும் மொசேரி விரிவுப்படுத்தினார். இன்ஸ்டாகிராம் கிட்ஸ் குறித்து தொடர்ந்து வெளியாகும் தகவலும் அவர் பதிலளித்தார். இந்த தாமதம் பெற்றோர், நிபுணர்கள், சட்டம் இயற்றுவோர் உள்ளிட்டோர் உடன் பேசி அவர்களது கவலைகளை கேட்டறிய உதவும் எனவும் இன்ஸ்டாகிராம் கிட்ஸ் திட்டத்தின் பயன் குறித்து பயனர்களுக்கு விளக்க உதவும் எனவும் குறிப்பிட்டார். கடந்த மார்ச் மாதம் பேஸ்புக் நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் ஜக்கர்பெர்க், இதுகுறித்த அறிவித்த போது பல எதிர்ப்புகள் எழுந்தன.
திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தல்அதேபோல் இந்த திட்டத்தை நிறுவனம் கைவிட வேண்டும் எனவும் குழந்தைகள் நல ஆர்வலர்கள் வலியுறுத்தினர். பதின்ம இளம் வயதினருக்கு என பிரத்யேகமாக வடிவமைக்கும் போது அதை அவர்கள் தாராளமாக பயன்படுத்தும் வகையில் இருக்கும் எனவும் அதன் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் பல தரப்பினர் வலியுறித்து வருகின்றனர்.
சமூகவலைதளங்களில் பிரதான பயன்பாடாக இருப்பது பேஸ்புக், வாட்ஸ்அப், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவையாகும். இதில் இன்ஸ்டாகிராம் பயன்பாடு புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிரும் தளமாக இருந்து வருகிறது.
டிக்டாக் செயலி இந்தியாவில் மிக பிரதான பொழுதுபோக்கு செயலியாக இருந்தது. டிக்டாக் செயலி மூலம் பிரபலமடைந்தவர்களும், திரைத்துறைக்கு வந்தவர்களும் உண்டு. பாதுகாப்பு அம்ச குறைபாட்டிற்காக இந்தியாவில் டிக்டாக் உள்ளிட்ட சீன செயலிகள் தடை செய்யப்பட்டது. டிக்டாக் செயலியாக மாற்றாக இன்ஸ்டாகிராம் தனது பயன்பாட்டில் இன்ஸ்டா ரீல்ஸ் அம்சத்தை கொண்டு வந்தது. இந்த ரீல்ஸ் வசதி ஆனது டிக்டாக் போலவே பின்னணி இசையில் 15 நொடிகள் வீடியோவாக நடித்து பதிவிடும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
சமீபத்தில் பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் செயலியில் தொடர்ந்து புதிய அம்சங்கள் அறிமுகமான வண்ணம் இருக்கும். இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் பயன்பாட்டில் தொடர்ந்து சிக்கலை எதிர்கொண்டு வருவதாக அதன் பயனர்கள் புகார் தெரிவித்தனர். இன்ஸ்டாகிராம் பயன்பாட்டில் சிக்கலை எதிர்கொண்டு வருவதாக அதன் பயனர்கள் புகார் தெரிவித்துள்ளனர், ஆண்ட்ராய்டு சாதனம் பயன்படுத்தும் பல பயனர்கள் தங்கள் ஸ்மாரட்போனில் இன்ஸ்டாகிராம் செயலியை பயன்படுத்துவதில் சிக்கலை எதிர்கொண்டு வருவதாக புகார் அளித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக