இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் கார்டு மிக முக்கியமான ஆவணமாக இருக்கிறது. ஆதார் கார்டுகளை UIDAI எனப்படும் ஆதார் ஆணையம் விநியோகித்து வருகிறது.
இந்நிலையில், ஆதார் சரிபார்ப்புக்கான கட்டணத்தை (Aadhaar Authentication charges)
ஆதார் ஆணையம் குறைத்துள்ளது. இதற்கு முன்பு ஆதார் சரிபார்ப்புக் கட்டணம் 20 ரூபாயாக இருந்தது. தற்போது இக்கட்டணத்தை 3 ரூபாயாக ஆதார் ஆணையம் குறைத்துள்ளது.
இதுகுறித்து ஆதார் ஆணையத்தின் தலைமை அதிகாரி சவுரப் கார்க் பேசியபோது, “ஆதார் சரிபார்ப்புக்கான கட்டணத்தை 20 ரூபாயில் இருந்து 3 ரூபாயாக குறைத்துள்ளோம். மக்களின் வாழ்வை எளிமைப்படுத்த அரசு உருவாக்கியுள்ள டிஜிட்டல் உள்கட்டமைப்பை பல்வேறு நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ள இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
இப்போது வரையில் ஆதார் அமைப்பை பயன்படுத்தி 99 கோடிக்கு மேற்பட்ட eKYCகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ரேஷன் கடைகள், 100 நாள் வேலைத் திட்டம், வங்கிகள், மொபைல் நெட்வொர்க் நிறுவனங்கள், பரிவர்த்தனை நிறுவனங்கள் என பல நிறுவனங்கள் தங்களது சேவைகளை வழங்க ஆதார் சரிபார்ப்பை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக